Kumudam
பு(து)த்தகம்
தற்கால கவிதை உலகில் தனக்கான இடத்தை தக்கவைக்கும் முயற்சியாகவே நல்ல கவிதையினை தொடர்ந்து தந்துகோண்டே இருக்கிறார் வேல் கண்ணன். சாக்லேட்டின் ஜிகினா உரையின் இரு முனைகளை அழகுற முறுக்கவிழ்த்து திறப்பது மாதிரியுள்ளது இக்கவிதைகள். உள்முகத் தரிசனத்தில் நிகழ்பவை வெளியுலகுக்கு அவ்வளவாக தெரிவதில்லை. சம்பந்தப்பட்டவர் சொல்லும்போதுதான் அதன் அதிசயம் நமக்கு புலப்படும்.