- இந்திரா சௌந்தர்ராஜன்சரவிளக்கின் எண்ணெய்க் குழிக்குள் விழுந்துவிட்ட பல்லி, பட்டரை பதைக்க வைத்தது. வேகமாக அதைக் காப்பாற்ற முனைந்தார். கற்பூர ஆரத்திக் கரண்டிதான் அருகில் இருந்தது. அதை எடுத்து அதன் கைப்பிடி பகுதியால் அந்தப் பல்லியை எண்ணெயில் இருந்து தூக்கினார். அது துள்ளிச் சரிந்து விழுந்து கருவறை இருளுக்குள் ஓடி, காணாமலும் போனது..பட்டர் மனதிலும் தெளிந்த குளத்தில் ஒரு பாறை பொத்தென்று விழுந்ததுபோல பெரும் சலனம்.வேதாத்யிகளோ லலிதா சஹஸ்ர நாமத்தை தொடர்ந்து சொல்லியபடி பூக்களைத் தூவியபடியே இருந்தனர். பட்டர் அவர்கள் அமர்ந்திருந்த அர்த்த மண்டபத்தைக் கடந்து, பக்தர்கள் நின்று வணங்கும் வெளிப்பகுதிக்கு வந்தார்.அங்காயி மீனாட்சியை கண்கள் கசிய பார்த்துக்கொண்டே, கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தாள். பட்டர் அவளருகில் சலனத்தோடு செல்லவும், அங்காயி வாய் திறந்தாள்.“ஏன் சாமி ஒரு மாதிரி இருக்கீங்க... அதான் புடவையை சாத்திட்டீங் கள்ல?’’“அதில் ஒரு குறையும் இல்லையம்மா... ஆனா, சகுனம்தான் சரியில்லை...’’“என்ன சாமி சொல்றீங்க?’’“நாம் ஒரு பெரிய விமோசனத்துக்காக இன்று பூஜித்தபடி இருக்கிறோம். ஆனால், இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பதுபோல தெரிகிறது...’’“என்ன சாமி பயமுறுத்தறீங்க... தங்கக் கவசங்களை சாத்தமுடியாம போனதை வெச்சு சொல்றீங்களா?’’“அதுவும் ஒரு காரணம். உள்ளே பல்லி ஒன்று பல கேடுகள் நடக்க இருப்பதை எனக்கு உணர்த்தாமல் உணர்த்திவிட்டது...’’“அந்தத் தாயைத் தொட்டு அலங்காரம் பண்ணி பூஜை செய்துகிட்டு, அவ கிட்டயே இருக்கற நீங்க ஒரு பல்லிக்கெல்லாமா பயப்படறீங்க?’’“பல்லியும் அவள் படைப்புதானே? அதைக்கொண்டு அவள் எச்சரிக்கை செய்திருக்கிறாள்...’’“ஏன் எச்சரிக்கணும்..? பூவை போட்டு மந்திரமெல்லாம் சொல்லி பூஜை செய்யறோமே... எல்லாம் அவளை நம்பித்தானே?’’“எச்சரிப்பதும் ஓர் அருள்தானம்மா...’’“என்ன சாமி செய்யணும்..? புரியற மாதிரி சொல்லுங்களேன்...’’.“மங்கம்மா தேவியாரை மனஉறுதியோடு இருக்கச் சொல். இப்போதைக்கு பேரன் திருந்த மாட்டான். சோதனை இந்த மதுரைக்கும் புதிதில்லை. அன்று நக்கீரரிடம் தொடங்கியது... இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!’’ - பட்டர் பெருமூச்சுவிட்டார்.“சாமி, இன்னிக்கி இல்லாட்டி நாளைக்கு, அந்தத் தங்கக்கவசங்கள சாத்திட்டா போச்சு. அது நடக்காம போனதுக்காக இப்படி மனசு ஒடிஞ்சு பேசறீங்களே..?’’“பைத்தியக்காரி... கவசத்துக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவளின் ஆயிரம் படைப்பில் அதுவும் ஒன்று. படைக்கத் தெரிந்தவளுக்கு அதை அணிந்துகொள்ளத் தெரியாதா என்ன? அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை என்கிற எல்லாமே அவளுக்காக, அவள் விருப்பத்திற்காக செய்வதல்ல. அவள் அதை எல்லாம் கடந்தவள்.’’“அப்ப கவசம் சாத்த முடியாம போனதுக்காக ஏன் இவ்வளவு வருத்தப் பட்டுப் பேசறீங்க?’’“அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனைகள், அருட்சக்தியை நாம் பெறு வதற்காக உண்டாக்கப்பட்ட வழிமுறைகள். ஒரு குளத்து நீர் அருளென் றால் அதை முகர்ந்து எடுத்துக்கொள்ளும் குடம்தான், நம் வழிபாடு. இன்றைக்கு அதற்கு வழி இல்லாமல் போய்விட்டதே?.அதோடு ஒரு கன்னியை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். அவள் உளவாளி யாக இருந்தாலும் பெண்! அதிலும் கன்னிப்பெண்! அவளைக் கொன்ற இடமோ சப்தகன்னிகள் கோயில் கொண்டிருக்கும் ஒரு புனித இடம். அங்கேயே அவளைப் புதைத்து ஓர் அருட்தலத்தை இடுகாடாக ஆக்கிவி ட்டீர்கள். இவை எல்லாம் அருளுக்கு எதிரான இருளான செயல்கள்..!’’“சாமி... அவளைக் கொல்லாம விட்ருந்தா இப்படி நான் உங்ககூட பேசிக் கிட்டிருக்க முடியாது. என் புருஷனும் சிக்கியிருப்பாரு. அந்தக் கவசங் களும் சின்னவர் கைக்குப் போயிருக்கும். அதுக்கென்ன சொல்றீங்க?’’“புரிகிறது. விதி எப்போதுமே இப்படி விபரீதமாகத்தானம்மா விளையா டும். அதை வெல்ல சாமான்யமான நம்மாலெல்லாம் முடியாது.’’“இப்ப என்ன பண்ணலாம்? அதைச் சொல்லுங்க...’’“என்னால் என்ன சொல்ல முடியும்..? நான் அவள் காலடியில் கிடக்கும் ஓர் ஊழியன். அவளுக்குச் சாற்றிய புடவையைத் தருகிறேன். அதை மங்கம்மா தேவியாரை அணிந்துகொள்ளச் செய். அது அவருக்கு ஒரு புது சக்தியைத் தரலாம்.ஆடைகளில் பட்டுக்கும், உலோகங்களில் தங்கத்துக்கும், திரவங்களில் பாலுக்கும் ஈர்ப்புசக்தி மிக அதிகம். பட்டாடை தரித்தவர்களை திருஷ்டி போன்ற எதிரானவை தாக்காது. அருளையும் அது காந்தம்போல் வசீகரித்து சேமித்துக்கொள்ளும். அதனால்தான் திருமணச் சடங்கில் பட்டு வஸ்திரம் அணிந்து மணமக்களை அமர்த்துகிறோம். ஆலயங் களுக்கும் பட்டணிந்து செல்கிறோம். முகூர்த்தப் பட்டுப் புடவையையும் காலத்துக்கும் பாதுகாத்து வைத்துக்கொள்கிறோம். அதில் திருமணத்து க்கு வந்து வாழ்த்திய அவ்வளவு பேரின் அட்சதைகளும் பட்டு அது நல்லாசிமயமாக உள்ள ஒன்று..தங்கமும் அருட்கதிர்களை சேமித்து வைத்துக் கொள்ளக்கூடியது. அரு ளைப் பெருகவைத்து அனைவருக்கும் அது கிடைக்கத்தான் தங்கத் தால் கவசம் சாற்றுகிறோம். பெண்மக்கள் தங்க நகைகளையும் அணிகிறா ர்கள். ஓர் அரசனோ தங்கக் கிரீடத்தில் நவரத்தினங்கள் எனும் ஒன்பது கிரக சக்திகளையும் பதித்து கிரீடமாக தலை மேலேயே சுமக்கிறான். அது அவன் புத்தியில் தெளிவையும் மனதில் திடத்தையும் தருவதற்கா கத்தான். அவன் பெரும் செல்வந்தன் என்று காட்டிக்கொள்வதற்காக இல்லை.பாலும் எதிர்வினைகளை அண்டவிடாது. பால் பட்ட இடம் தூய்மையாகும். எதிர்வினைக் கதிர்கள் இருந்தால் அது கரைந்து மறையும். இறை ரூபங்களுக்குப் பாலாபிஷேகம் செய்வதன் தாத்பர்யம் அதற்கே! அந்த ரூபங்களில் அருள்வேண்டிப் பார்ப்போரின் திருஷ்டி படிந்திருக்கும். அதை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கே பாலபிஷேகம் செய்கிறோம். தேன், இளநீர், சந்தனம் என்கிற இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்துவதும் இறைரூப சக்தியைக் குன்றாமல் பாதுகாக்கவே... ஒரு சொட்டு தேனுக்குள் ஓராயிரம் பூக்கள் இருக்கிறது. ஓர் இளநீர் காய்க்குள் விண்ணேறிய நீர் இருக்கிறது. எப்போதும் நீர் மழை வடிவில் மேலிருந்து கீழ்தான் வரும். கீழிருந்து மேலேறும் நீர் இளநீர் மட்டும்தான்.சந்தனமும் மண்ணின் மகத்தான சக்தியை வாசனையாக தன்னுள் கொண்ட ஒன்று. இவை எல்லாமே நேர்மறையானவை. நேர்மறையான வற்றோடு நாம் தொடர்பில் இருக்கும்போது எதிர்மறையானவைகளால் நம்மை அண்ட முடியாது. அதனாலேயே நெற்றியில் விபூதி, சந்தனம் தரிக்கிறோம். பட்டு அணிகிறோம். பாலை பிரசாதமாக அருந்துகிறோம். தேனை மருந்தாக்கி உண்கிறோம். மலர்களைச் சூடி மகிழ்கிறோம்.நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து வைத் திருக்கிறார்களம்மா...’’ - பட்டர் சொல்லி முடித்த கருத்துகள், அங்காயியை பிரமிக்க வைத்திருந்தன.“சாமி, நீங்க சொல்லச் சொல்ல எனக்கு மலப்பா இருக்கு. நான்கூட சர்வசக்தி படைச்ச சாமிக்கு நாம கொடுக்க என்ன இருக்கு? அதுகூட நம்பகிட்ட அபிஷேகம், அர்ச்சனை எல்லாம் கேக்குதேன்னு சில சமயம் யோசிச்சிருக்கேன். இப்பதானே தெரியுது... அதை சாமி கேக்கல... நாம நல்லா இருக்க நமக்காக பண்ணிக்கிறோம்னு...’’.“தெளிவாகப் புரிந்துகொண்டாய். இப்போது சாற்றிய புடவையைத் தருகி றேன். அதை எப்படியாவது மங்கம்மா தேவியார் அணியும்படி செய். விதிதான் அவர்கள் சிறைப்படக் காரணம். அந்த விதியின் வீரியத்தை இந்த அருட்புடவை குறைக்கும். புதிய தெம்பைத் தரும்.மற்றபடி அந்த மீனாட்சியை வேண்டிக் கொள். இந்த மதுரை மாநகரம் என்றும் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று. இது அவளது பூமி! அவள் அருள் இருந்தாலே இம்மண்ணில் ஒருவர் இருக்க முடியும்.காசியில் இறக்க முக்தி...அருணையை நினைக்க முக்தி...ஆரூரில் வணங்க முக்தி...இந்த மண்ணில் வசிக்க முக்தி. இது அமிர்தம் பட்ட பூமி. அதனால் இங்கே கவிஞர்களும், கலைஞர்களும், அருளாளர்களும் வற்றாமல் தோன்றிய படியே இருப்பார்கள். அதனாலேயே, உலகில் எங்கும் இல்லாதபடி மனி தனின் ஏழாம் அறிவான பேசும் திறனுக்கு அடிப்படையான மொழிக்கு ஒரு சங்கமே இங்கு தோன்றி, அதன் தலைவனாக அந்த ஈசனே திகழ்கின் றான். தனது உமா பாகத்தை அவனும் இங்கு நாடாளச் செய்து இம்மண் ஆதிசங்கரன் காட்டிய ஆறு வழிகளில் சாக்தம் என்னும் சக்தி வழியைப் பெரிதாய் கொண்டது என்பதை நிரூபித்தான்.உலகில் ஒன்பது கிரகங்களைக் கடந்து, பிரபஞ்ச சக்தி முழுவதையும் வசீகரிக்கவல்லது மலர்களே! அதில் மட்டுமே ஐந்து பூத சக்தி பூரணமாக உள்ளது. மூக்குக்கு வாசனை, நாக்குக்கு தேன், நோக்குக்கு அழகு, தொடுகையில் மென்மை, பார்வைக்கு வண்ணமயம் என்கிற ஒளி - என ஐந்தும் மலர்களிடம் மட்டுமே உள்ளது. அதனாலேயே உயரிய இறை வனுக்கு உயரிய அதனைக்கொண்டு வணங்குவது எனும் தாத்பர்யம் உண்டாக்கப்பட்டது.அப்படிப்பட்ட மலரினத்தில் தங்க புஷ்பமே பொற்றாமரையாக மலர்ந்தது இந்த மண்ணில் மட்டும்தான். இது சாதாரண மண் அல்ல தாயே! உருண்ட இந்தப் பெரும் பிரபஞ்சத்தில் ஒருமுறைக்குப் பலமுறை அந்த ஈசன் நேரில் தோன்றி திருவிளையாடல்கள் நிகழ்த்தியதும் மனித குலத்துக்கு வழி காட்டவே... ஈசனின் அமுதமும் அவனது காலடியும் பட்டது இம்மண்ணில் தான்.எப்போதும் காய்த்த மரங்களே கல்லடிக்கு ஆளாகும். அந்த வகையில் நாடுகளில் நம் பாரத நாடும், நகரங்களில் நம் மதுரையும் ஒன்றம்மா! அதனாலேயே எல்லா மதத்தவர்க்கும் இனத்தவர்க்கும் இம்மண்ணைக் கைப்பற்றும் ஆவலும் ஆசையும் உண்டானது.அவர்கள் ஆளவும் இடமளித்து நான் மதம் கடந்தவன், இனம் கடந்தவன், குணம் கடந்தவன் என்று அந்த ஈசனும் திகழ்கிறான்.இப்போது மங்கம்மா தேவியாருக்கு வந்திருக்கும் சிக்கலும் இப்படி ஒரு கல்லடிச் செயல்தான். நாம் உறுதியாக இருந்தால் வென்றுவிடலாம். கவலைப்படாதே...’’ - என்று ஒரு பெரும் உபன்யாசத்தையே நிகழ்த்திய பட்டர், திரும்ப சன்னதிக்குள் சென்று அம்மையின் மேனிமேல் சாற்றியிருந்த அந்த பட்டுப் புடவையை மலர்களோடு சேர்ந்து எடுத்து வந்து அங்காயிவசம் தந்தார்.அங்காயி நெகிழ்ந்து போயிருந்தாள். “சாமி, உங்க பேச்சு இன்னிக்கு என்னை எங்கையோ கொண்டு போயிடி ச்சு சாமி... நான் இந்த மண்ணுல பிறந்ததுக்காக ரொம்பவே பெருமையும் சந்தோஷமும்படறேன். நான் இனி எடுக்கற பிறப்பெல்லாமும் இந்த மண்ணுலதான் சாமி நடக்கணும். அப்பல்லாமும் நான் இந்தத் தாயை மறக்காம கும்புட்றவளாவும் இருக்கணும் சாமி...’’“ஆத்மார்த்தமாக மனதின் அடிஆழத்தில் நினைக்கும் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும், அது அப்படியே நடக்கும் அம்மா. நமக்கு நம் மனோசக்தி பற்றித் தெரிவதில்லை. அது தெரிந்ததால்தான் அதைக் கொண்டு ரிஷிகள், முனிகள், ஞானிகள், சித்தர்கள் தோன்றுகின்றனர். தங்களையும் அவர்கள் கடைத்தேற்றிக் கொள்கின்றனர்.உன் விருப்பமும் நிச்சயம் பலிக்கும். போய்வா! உனக்கு அவளே துணையாக இருப்பாள். எது நடந்தாலும் அது அவள் விருப்பம் என்பதை மட்டும் நினைக்க மறந்துவிடாதே!’’ - பட்டர் வழியனுப்பி வைத்தார். அந்தப் பட்டுப் புடவையை முன்போலவே பூக்குடலைக்குள் மடித்து வைத்து அதன்மேல் மலர்களைத் தூவி மூடியவளாக, தேங்காய் பழத்தோடு அங்காயியும் புறப்பட்டாள்.புறப்படும்போது தன்னை கோவலன் பொட்டலில் வந்து ராமவீரன் பார்க்கச் சொன்னதும் நினைவுக்கு வந்தது. ஆலயப் பிரகார வெளிக்குள் அதை நினைத்தபடியே நடந்தபோது சொக்கட்டான் உருளும் சத்தம் கேட்டது.திம்ம நாயக்கர் வகையறாக்கள் கோயில் காவலுக்கு நடுவில் பொழுது போகாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். அருட்தலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றிவிட்ட அவர்களின் மடமையை நினைத்து அங்காயி வருந்தியபோது, அவர்களில் ஒருவன் அவளைப் பார்த்துவிட்டு எழுந்து வந்தவனாக,“நீதான் அந்தக் கெழவிக்குத் தாதியோ?’’ என்றான், இளப்பமாக.“மரியாதையாகப் பேசு. அவர்கள் இந்த நாட்டின் ராணி.’’“மண்ணாங்கட்டி. அதெல்லாம் ஒரு காலம். இனி, அந்தச் சிறைதான் அவங்க நாடு, வீடு, காடு எல்லாம்... இதுவும் இப்ப மதுரையில்ல... சிதம்பரம். ஞாபகம் வெச்சுக்கோ...’’“எதற்கு இப்படி என்னை வம்புக்கிழுக்கிறீர்கள்?’’“போய் அந்தக் கிழவிகிட்ட சொல்லு. இது என்ன கையில கூடை..?’’“அருள்பிரசாதம்..!’’“பூட்டிக் கிடக்கற கோயிலுக்குள்ள பட்டர்தான் விதியத்துப்போய் பூஜை செய்யறாருன்னா, அவருக்குத் துணையா நீயா? அத இப்படிக் கொடு... தேங்கா மூடி நல்லா முத்தலா இருக்கே?’’“வேண்டாம்... இது தேவியாருக்குத் தரவேண்டிய பிரசாதம். இதைத் தீண்டி அசுத்தப்படுத்தாதீர்கள்.’’“அசுத்தமா... நாங்க தொட்டா இது அசுத்தமாயிடுமா? எங்க அதையும் தான் பாப்போமே...’’ - என்ற காவல்வீரன், அந்தப் பூக்குடலையை வேகமாக அங்காயியிடம் இருந்து பறிக்க முற்பட, அவளோ அவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஓடத் தொடங்கினாள். அப்படி ஓடும்போது தேங்காயும் பழமும் சிதறிக் கீழே விழுந்தன... மலர்களும் சிதறி புடவை பளிச்சென வெளியே தெரியத் தொடங்கிற்று..! ரகசியம் தொடரும்...