-இந்திரா சௌந்தர்ராஜன்அந்த உளவுக்காரியின் அச்சமில்லாத சிரிப்பு ராமவீரனை சற்று ஆச்சரியப்படுத்திற்று. அவளிடம் துளியும் அச்சமில்லை. அவள் மிகத் துணிவானவள் என்பது அவள் உடல்மொழியிலும் தெரிந்தது. கைகள் கட்டப்பட்ட நிலையில், அவள் கால்களை அகட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றவளாக ராமவீரனைப் பார்த்தாள். சிரிப்பும் அழியவில்லை..“என்ன சோழச்சி... நான் துணிவானவள் என்று எனக்கு உன் புன்னகை மூலம் சொல்லாமல் சொல்கிறாயா?’’“அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்...’’“உன் துணிவால் ஆகப்போவது ஒன்றுமில்லை. நீ இப்போது என்னிடம் அகப்பட்டுக்கொண்டுவிட்டவள். உன்னை நான் கொலைகூடச் செய்ய லாம்.’’“உயிரைத் துச்சமாகக் கருதியே நான் உளவுக்காரியாக இருக்க சம்மதித் துள்ளேன். என்னை வீணாக பயமுறுத்தாதே...’’“நான் வீரமறவன். உன்னை அதாவது ஒரு பெண்ணை பயமுறுத்துவதை எல்லாம் என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதற்கு அவசிய மும் இல்லை. எல்லா வகையிலும் செயல்வீரன் நான்.’’“அதைத்தான் பார்க்கிறேனே... ஆனாலும், ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள். எங்களை மீறிக்கொண்டு உன்னால் எதையும் செய்யமுடியாது.’’“என்னை என்று சொல்லாமல் எங்களை என்று நீ கூறுவதைப் பார்த்தால் ஒரு கூட்டமே உன் பின்னால் இருக்கிறது என்று சொல்...’’“ஆம்... உங்கள் ஒவ்வொரு செயலையும் கண்காணித்தபடியேதான் இருக் கிறோம். ஆனாலும், நீ புத்திசாலி... என் கைவிரல்களின் மருதாணிச் சிவப்பை வைத்தே என்னைக் கண்டுபிடித்துவிட்டாய்! அதேவேளை எந்த நிலையிலும் கண்டுபிடிக்க முடியாதபடி பலர் உள்ளனர். அவர்கள் வசம் நீ அகப்படப்போவதும் உறுதி. ஒரு ராஜ துரோகியான உன்னை திம்ம நாயக்கர் கொல்லப்போவதும் உறுதி...’’.“நான் ராஜ துரோகியா..? அதை இந்த மண்ணைச் சேராத நீ சொல் கிறாயா? உன் பேச்சை நான் கேட்டுக்கொண்டிருப்பதே பிழை. உன்னி டத்தில் இப்போது மட்டும் ஓர் ஆண்மகன் இருந்திருந்தால் அவனை வெட்டிப் போட்டிருப்பேன். பெண்களிடம் நாங்கள் எக்காலத்திலும் கடுமையாக நடந்துகொள்வதில்லை. அதனால், நீ இப்போது உயிரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்...’’“நானும் அது தெரிந்தே உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ஒன்று மட்டும் புரிந்துகொள்... இனி எக்காலத்திலும் அந்தக் கிழவி அரிய ணையில் அமர்ந்து அதிகாரம் செலுத்தமுடியாது. விஜயரங்கனே இனி அரசர்! தஞ்சை, செஞ்சி, புதுக்கோட்டை என்று சகல ராஜ்ய நிர்வா கிகளும்கூட மங்கம்மாள் தொடர்ந்து ஆள்வதை விரும்பவில்லை. அதனால், எல்லோருடைய ஆதரவும் விஜயரங்கருக்கே... இது தெரியாமல் நீங்கள் நவசக்தி பூஜை, அபிஷேகம், ஆராதனை என்று முயற்சிப்பது எல்லாம் ஒரு பயனையும் தராது.இப்போதுகூட கெட்டுவிடவில்லை. அந்தத் தங்கக் கவசங்களையும், ஆபர ணங்களையும் நீ எங்களிடம் ஒப்படைத்துவிடுவதாகச் சொல். உனக்கு உயிர்ப்பிச்சை அளிப்பதோடு ஊர்க்காவல்படையில் ஒரு பெரும் பொறுப் போடு அரசின் முத்ராதிகாரியாகவும் நியமிக்க நான் வழிவகை செய்கிறேன்.’’அச்சமின்றி அவள் பேசிய பேச்சில், ஆலயத்தில் நடக்கும் பூஜைகள் பற்றி எல்லாம் அவளுக்குத் தெரிந்திருப்பது ராமவீரனை மிகவே ஆச்சரிய அதிர் வில் புதைத்தது. அதைக் கண்களில் எதிரொலித்தான்.“என்ன அதிர்ச்சியாக உள்ளதா? பூஜைகள் பற்றி எல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றுதானே நினைக்கிறாய்?’’ - அவள் மிகக் கச்சிதமாகக் கேட்டாள்.“பரவாயில்லை... நீ நன்றாகவே ஊகிக்கிறாய்...’’“அதனால்தான் திம்ம நாயக்கர் என்னைத் தேர்வு செய்து பணித்தார்...’’“திம்ம நாயக்கர் ஒரு துரோகி... விஜயரங்கரோ ஒரு மடையன். இவர்கள் கையில் இப்போது மதுரை... இது கொடுமை!’’.“உன்னை எச்சரிக்கிறேன். என் எதிரில் நீ ராஜ்யாதிபதிகளை இகழ்வாய் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது...’’“தைரியம்தான் உனக்கு... நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்கிற தைரியத்தில்தானே இவ்வளவு தூரம் பேசுகிறாய்?’’“உன் நன்மைக்காகவும் பேசுகிறேன். ஒருவேளை என்னை நீ கொன்றாலும் உன் விருப்பம் ஈடேறாது. பாளம்பாளமாக சீராப்பள்ளி கஜானாவில் இருந்து எடுத்துவரப்பட்ட தங்கத்தைக் கொண்டு, எதை எல்லாம் பொற் கொல்லர் செய்தார் என்பது எங்களுக்குத் தெரியும். பொற்கொல்லர் சோமசுந்தரனார் இப்போது எங்கள் கைதியாக ஐராவதநல்லூர் தானியக் கொட்டாரத்தில் பெரும் எலிகளுக்கும் பாம்புகளுக்கும் நடுவில் கட்டிப் போடப்பட்டிருக்கிறார்.இப்போது நீ அந்தத் தங்கக் கவசங்களை, குறிப்பாக ஸ்ரீயந்திரத்தை தானிய மூட்டைக்குள் வைத்துள்ளதும் தெரியும். அந்த ஸ்ரீயந்திரம் அசா தாரணமான சக்திவாய்ந்தது என்பதும் தெரியும். அது செயல்படத் தொடங்கிவிட்டால், அதன்பின் அந்தக் கிழவியை யாராலும் வெல்ல முடியாது என்பதையும் நாங்கள் சாத்திர வல்லுநர்கள் மூலம் அறிந்தே இருக்கிறோம். எனவே, ஒருபோதும் நீங்கள் நடத்த நினைக்கும் பூஜையை நாங்கள் நடத்தவிடமாட்டோம்...’’அவள் துணிவாக பேசப்பேச ராமவீரன் மிகவே அதிர்வுக்குள்ளானான். குறிப்பாக பொற்கொல்லரைக் கைது செய்து விட்டதும், ஸ்ரீயந்திரத்தின் சக்தி பற்றிச் சொன்னதும் அவனை அதிரவைத்து அவளை வெறிக்கச் செய்தது.“வெறிக்காதே... கைக்கட்டை அவிழ்த்துவிட்டு ஒரு நல்ல முடிவை எடு. இல்லாவிட்டால் நீ அழிந்துபோவது உறுதி...’’“சோழப்பெண்ணே... உன் நெஞ்சுரத்தைப் பாராட்டுகிறேன். எங்களின் ஒரு வீரக் கள்ளச்சியாகவே உன்னை நான் பார்க்கிறேன். நீ பல உண்மை களைத் தெரிந்து வைத்திருப்பதோடு, அவற்றைப் போட்டும் உடைத்து விட்டாய். குறிப்பாக, கோயிலில் நிகழப்போகிற நவசக்தி பூஜை. கோயில் பட்டரும் அவர் சார்ந்த ஒன்பது வேதம் கற்றவர்களும் மட்டுமே அறிந்த ரகசியம். அது உனக்குத் தெரிந்திருப்பதுதான் பெரிய ஆச்சரியம். இதற்கு மட்டும் நீ சரியான பதிலைச் சொல். நான் உன் விருப்பப்படி நடப்பது பற்றி முடிவெடுக்கிறேன்.’’.“அப்படி எல்லாம் அத்தனை சுலபத்தில் நீ என்னிடம் இருந்து அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முடியாது. எப்போதுமே ராஜரகசியங்கள் மிக ரகசியமானவை மட்டுமல்ல; மிக ஆபத்தானவையும்கூட...’’“அப்படியானால் என்னால் ஆலயத்துக்குச் சென்று, இன்றைய நவசக்தி பூஜை நடைபெற உதவமுடியாது என்கிறாயா?’’“அதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை...’’“உன் வாயைப் பொத்தி, உன்னையும் இங்கு ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு, நான் கோயிலுக்குச் சென்று அந்தப் பூஜையை நடத்தி விட்டால்?’’“தாராளமாக அப்படிச் செய்து பார்... பிறகே உனக்கும் உண்மைகள் புரியும்.’’அந்தப் பெண் அசராமல் பேசினாள். ராமவீரனும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கி, அவள் முன்பு சற்று குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அப்போது வைகை ஆற்றில் துணி துவைக்கும் ஏகாலியர்களில் சிலர், தோளில் துணிமூட்டையுடன் சுமைத்துன்பம் தெரியாமல் இருப்பதற்காக பாட்டு பாடிக்கொண்டே வரும் சத்தம் கேட்டது.அவர்கள் கைகள் கட்டப்பட்டிருக்கும் அந்த உளவுக்காரியைப் பார்த்தால் தேவையற்ற ஒரு பதற்றம் உருவாகும் என்பதை உணர்ந்த ராமவீரன், அந்தப் பெண்ணின் வாயை இறுகக் கட்டியவனாக, வேகமாகத் தன் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு ஒரு பருத்த வேங்கை மரத்தின் பின்னால் சென்றான். அந்த ஏகாலிகளும் கடந்துசென்றனர். இரட்டை காளை பூட்டிய மூட்டைகள் கொண்ட வண்டி தனியே நிற்பதைப் பார்த்து ஆச்சரியமும் அடைந்தனர்.“வண்டி தனியா நிக்குது... வண்டிக்காரனைக் காணலியே?’’“ஜலவாதிக்காக இங்க எங்கையாவது ஒதுங்கியிருப்பான்... நீ நட’’ என்று, அவர்கள் பேசிச் செல்வதும் காதில் விழுந்தது. அவர்கள் விலகிய நிலை யில் அந்தப் பெண் தன் கரியவிழிகளால் ராமவீரனை மிகக் கூர்மையாகப் பார்த்தாள். அவனும் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டான்..“நீ தொடர்ந்து தவறு செய்கிறாய். நான் சொன்னதை நீ நம்பவும் மறுக் கிறாய் என்பது உன் போக்கில் தெரிகிறது. என் பேச்சைக் கேட்டு நடந்தால் அதுதான் உனக்கு நல்லது. இல்லாவிட்டால் நீ செல்லும் ஆலயமே உனக்குச் சிறையாகிவிடும். அதை மறந்துவிடாதே...’’அவள் சற்று கடூரமான குரலில் கூறியதில் இருந்து ஓர் உண்மை அந்த நொடியே ராமவீரனுக்குத் தெரிந்துபோயிற்று.“ஏ உளவுக்காரி நீ இப்போது பேசியதில் இருந்து எனக்கோர் உண்மை தெரிந்துவிட்டது. ஆலயத்துக்குள் என்னைப் பிடிக்க அந்த திம்ம நாயக்கன், ஏதோ ஏற்பாடு செய்திருக்கிறான். அப்படி நான் ஆலயத்தில் பிடிபட்டால்தான் அது எனக்குச் சிறையாகும். உண்மையைச் சொல்லா மல் சொன்ன உனக்கு நன்றி. நானோ, இந்த வண்டியோ தங்கக் கவசங்களோடு ஆலயத்திற்குச் சென்றால்தானே அதெல்லாம் நடக்கும்? நான் செல்லாவிட்டால்..?’’ - ராமவீரன் அப்படிக் கேட்கவும், அவள் முகத்தில் ஒரு சப்பளிப்பு. தான் அவசரத்தில் ஜாடையாகச் சொன்னதை வைத்தே அவன் சுதாரித்துக்கொண்டதை உணர்ந்தவள், அங்கிருந்து வேகமாக ஓடத்தொடங்கினாள்.“வேண்டாம் ஓடாதே... நீ தப்பிக்க முடியாது...’’ என்றபடியே தன் இடையில் செருகியிருந்த கட்டாரியை எடுத்து, ஓடும் அவள் முதுகைக் குறிபார்த்து எறிந்தான். அதுவும் தவறாமல் அவள் நடுமுதுகில் பல அங்குல ஆழத்திற்குப் பாய்ந்து அவளை அப்படியே பின்புறமாகவே தள்ளாடி விழச் செய்தது. அப்படி அவள் விழுந்ததில் கட்டாரி மேலும் உள்ளேறி, அவளின் வயிற்றுப் பகுதியைக் கிழித்துக்கொண்டு, தனது முனையைக் காட்டி முடிந்து நின்றது.அப்போது ஒரு மரத்தின் பின்புலத்தில் இருந்து கையில் குடலையுடன் அங்காயியும் வெளிப்பட்டு அவள் கிடந்த இடம் நோக்கி வரலானாள்.அவளிடம் உயிர்த்துடிப்பு... கால்களை சில விநாடிகள் உதைத்துக் கொண்டவள் உயிர் மெல்லப் பிரியத் தொடங்கிற்று. அங்காயி அகண்ட விழிகளுடன் அவளையும், ராமவீரனையும் மாறிமாறிப் பார்த்தாள்.“என்ன அங்காயி... இதுகாறும் நீ இங்கனதான் இருந்தியா?’’“ஆமாய்யா... நீ இவளோட பாதை மாறிப் போகவுமே எனக்கு திகைச்சுப் போச்சு. அதான் நானும் பின்னாலயே வந்து, தா அந்த மரம் பின்னால நின்னு நீயும் இவளும் பேசறத எல்லாம் கேட்டேன்!அடேயப்பா... இவளுக்குதான் என்னா தெகிரியம். என்னா பேச்சு..?’’.“என்ன இருந்து என்ன புண்ணியம். அல்ப ஆயுசுல இப்படி போய்ச் சேர்ந்துட்டாளே?’’“இப்ப என்னய்யா பண்ண?’’“முதல்ல இவ உடம்பைக் குழி தோண்டிப் புதைக்கணும்...’’“அங்க கோயில்ல பட்டர்சாமி காத்துக்கிட்டிருப்பாரே?’’“இல்ல... கோயிலுக்குள்ள நாம போனாலே சிக்கிக்குவோம்.’’“அப்ப பூசை?’’“அதைவிட இந்தக் கவச நகைகளைக் காப்பாத்தறதுதான் இப்ப முக்கியம். பொற்கொல்லரையும் பிடிச்சு அடைச்சு வெச்சிருக்காங்க. இந்தக் கவச நகைகள்ள இருக்கற ஸ்ரீயந்திரம் பத்தி, இவ குறிப்பா பேசினா... அதுக்கு பூசை நடந்தா நம்ம ராணிய யாராலயும் ஜெயிக்க முடியாதுன்னும் சொன்னா... அப்ப அதுக்குப் பின்னால பெருசா ஏதோ இருக்கு புள்ள...’’“ஆமாம்... நேரமாகுது பார்... ஏகாலிங்க வந்த மாதிரி யாராவது வர்றதுக்கு முந்தி இவளைப் புதைக்கற வழிய பாப்போம்...’’“குழிய தோண்டல்லாம் இப்ப நேரமில்ல... ஏகாலிங்க ஊத்துக்காக தோண் டுன குழி ஒண்ணுல இவளைப் போட்டு மண்ணைப் பெரட்டிப் போட்டு மூடிடுவோம்...’’ - என்று சொல்லிக்கொண்டே அவள் இரு கரங்களைப் பிடித்துத் தூக்கி, அப்படியே தரதரவென இழுத்துக்கொண்டு நடந்தான் ராமவீரன்.ஓரிடத்தில் வன்னிமரம் ஒன்றின்கீழ் ஏழு நடுகற்கள் சப்தகன்னி மார்களாகக் கருதப்பட்டு சந்தன குங்குமப் பொட்டோடு காட்சி தந்தது.“இது ஏகாலிமாருங்க கும்புட்ற சப்தகன்னி கோயிலு... தா அங்க ஒரு குழி தெரியுது பார்...’’ என்று அங்காயி ஓடிச்சென்று, அந்தக் குழியருகே நின்றாள். அது ஒரு குப்பைக் குழியாக, சப்த கன்னியர்களுக்கு சாற்றிக் கழற்றிய காய்ந்த மாலைகளோடு கிடந்தது.“குப்பக் குழிய்யா...’’“எதா இருந்தா என்ன... போட்டு மூடவேண்டியதுதான்.’’“கோயில் இடத்துலயா?’’.“இதான் உகந்த இடம்... செத்த இவளும் நல்லவ இல்ல... நம்ப ஆத்தா மீனாட்சி பூசையைக் கெடுக்க வந்தவ! இவளை இங்க புதைச்சுட்டு, தா இந்த கன்னித்தாயுங்ககிட்ட வேண்டிக்கிட்டு நாம புறப்படுவோம்.’’“அப்ப நவசக்தி பூசை?’’“அதுக்கு இன்னிக்கு விதி இல்ல புள்ள... நீ போய் புடவையை மட்டும் கொடுத்து கும்புட்டு வா. அப்படியே கோயில்ல நோட்டம் போடு. நிச்சயம் என்ன மடக்க ஒரு கூட்டம் ஒளிஞ்சிருக்கும். நான் இந்த வண்டியோட கோவலன் பொட்டலுக்குப் போறேன். அந்தப் பொட்டலும் காடும்தான் நான் இப்ப ஒளியத் தோது. நீ அங்க வந்துடு. பிற்பாடு நாம திட்டம் போடுவோம்.’’“அந்தப் பொட்டக் காட்டுல எங்கன்னு வர?’’“கோவலனை சிரபங்கம் பண்ண பலிமேடைகிட்ட வா...’’“அங்கையா... ஆவிங்க அலையற இடம்பாங்களே?’’“நம்பளச் சுத்தி இருக்கற பாவிங்களவிட அந்த ஆவிங்க மோசம் இல்ல புள்ள... அதுதான் சன நடமாட்டம் இல்லாத இடமும்கூட. சொல்றதக் கேளு...’’- ராமவீரன் அங்காயிக்குப் பதில் சொல்லிக்கொண்டே உளவுக்காரியின் உடலை அவள் முதுகில் தைத்த கட்டாரியோடு அப்படியே உள்ளே தள்ளிவிட்டு, சப்த கன்னிமார் சிலைகளின் முன்பு பதிக்கப்பட்டிருந்த திரிசூலத்தைப் பிடுங்கி, எடுத்துவந்து அதைக்கொண்டு குழியைச் சுற்றிக் குத்திக்குத்தி மண்ணைக் கெல்லி விழச்செய்து, பின் கால்களால் மிதித்து மட்டமாக அந்தக் குழி இருந்த இடமே தெரியாதபடி மூடினான். அங்காயி யும் ஒத்தாசித்தாள்.இருவருமே வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்தனர். அப்படியே வியர் வையை வழித்துப் போட்டபடி திரும்பவும் சப்த கன்னியர் முன் வந்த ராமவீரன் அந்த திரிசூலத்தைத் திரும்ப அதற்கான இடத்தில் நட்டான்!.மீனாட்சியம்மன் கோயிலின் கம்பத்தடி காளியின் கையில் இருந்த திரிசூலம் மீனாட்சிக்குள் ஒரு திரிசூல தொடர்பான சம்பவம் ஒன்றைத் தோற்றுவித்த நிலையில், அவள் மெல்ல கண்மலர்ந்தாள். அருகில் அவள் தாயான பார்வதி.“அம்மாடி... தெளிஞ்சிட்டியா? எழுந்திரு...’’ என்றாள். மீனாட்சியும் கண் களைக் கசக்கிக்கொண்டு எழுந்தாள்.“ஸாரிம்மா... திரும்பவும் அந்த பூர்வஜென்ம ஞாபகங்கள்... ஆமா ரொம்ப நேரம் ஆயிடிச்சா?’’ - என்று சுற்றிச்சுற்றி பார்த்தபடியே கேட்டாள்.“ஒரு மணி நேரமா நீ கண் திறப்பேன்னு உக்காந்துகிட்டிருக்கேண்டி. இப்படி போறவர்ற இடத்துல எல்லாம் உனக்கு அந்த நினைப்பு வந்து மயங்கி விழுந்தா என்னடி அர்த்தம்? ஆமா, இப்ப என்னவெல்லாம் தெரியவந்துச்சு?’’ - பார்வதி கேட்க, அதைச் சொல்ல மீனாட்சியும் முனைந்தபோது அவள் எதிரில் மங்கலகரமாக புடவை கட்டிய பெண்ணாய் ரோசி வந்துகொண்டிருந்தாள்!-ரகசியம் தொடரும்...