ரோசி தந்த நம்பிக்கையும், அவளின் பட்டுக் கத்தரித்த மாதிரியான பேச்சும் மீனாட்சிக்கும் சற்று இதமாகத்தான் இருந்தது. முகத்தில் ஒரு தெளிவு தெரிய ஆரம்பித்தது. ரோசியும் அதை உணர்ந்தவளாக,‘‘மீனாட்சி... நான் சொன்னது உனக்கு ஞாபகமிருக்கட்டும். புத்திசாலித்தனமா நடந்துக்கோ... உனக்கு எல்லா வகைலயும் நான் உதவியா இருப்பேன். உனக்குள்ள வந்து போற நினைவுகள், பூர்வஜென்ம சம்பவங்கள்தான்னா உண்மைலயே நீ ஓர் அதிசயப்பிறவிதான். அப்படியெல்லாம் இல்லை, அது ஏதோ மூளையோட நியூரான்களோட சேட்டைன்னாலும் சந்தோஷம்தான். எதையும் நாம இப்படி முடிவு செய்யமுடியாத நிலைல இருக்கறதால, நடக்கப்போறத வெச்சுதான் முடிவுக்கு வரணும். அந்த வகையில உனக்கு நான் துணையிருக்கேன். அதேசமயம் நாம இப்படி ஒரு முடிவெடுத்திருக்கறத நீ யார்கிட்டேயும் சொல்லாதே...’’ - ரோசி மீனாட்சியை இறுக்கமாகக் கட்டிப்போடவும் முயன்றாள்.‘‘ஏன்... என் வீட்டுல இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சா என்ன?’’ என்று மீனாட்சியும் தாமதிக்காமல் கேட்டாள்.‘‘தேவையில்லாமப் பயப்படுவாங்க... குழம்புவாங்க... உன்னைக் கட்டுப்படுத்த பார்ப்பாங்க...’’‘‘இப்பவே அப்படித்தானே இருக்காங்க...’’‘‘அப்ப நான் சரியாதான் சொல்லியிருக்கேன்... உன்னைக் கட்டுப்படுத்தி பயத்துலயே வெச்சிருக்கறத விரும்பறியா… இல்லை, இந்தப் பிரச்னையைப் புரிஞ்சிக்கிட்டு இதுல இருந்து விடுபட நீ விரும்பறியா?’’‘‘இது என்ன கேள்வி... இதுல இருந்து விடுபடத்தான் நான் விரும்பறேன்...’’‘‘அப்ப நீ என் பேச்சதானே கேட்கணும்... ஏன்னா நான்தானே ஆராய விரும்பறேன்...’’‘‘இந்த ஆராய்ச்சில எதாவது ஆபத்து ஏற்பட்டா?’’‘‘ஒரு ஆபத்து எப்படி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் யாருக்கு வேணும்னாலும் ஏற்படலாம். ஒரு ஜிகர்தண்டா கடை வாசல்ல ஜிகர்தண்டா குடிச்சிக்கிட்டு இருக்கற ஒருத்தர்மேல ஒரு கார் தறிகெட்டு ஓடிவந்து மோதி ஆள் ஸ்பாட் அவுட்! டி.வி. நியூஸ்ல இந்தக் காட்சியை சி.சி.டி.வி பதிவுகள்ள இருந்து எடுத்துப் போட்டுக்கிட்டே இருக்காங்க. நீ நியூஸ்லாம் பாக்கறதில்லையா?’’‘‘பாத்துருக்கேன்... இப்படி நிறையவே பாத்துருக்கேன்...’’‘‘அப்புறம் என்ன... இப்ப நாம வாழ்ந்துகிட்டிருக்கற உலகத்துல எதுல இல்லை ஆபத்து?’’‘‘வாஸ்தவம்தான்...’’‘‘புரிஞ்சிக்கிட்டு தைரியமா இரு... பயப்படாதே. நான் இருக்கேன் உனக்கு. நாம ரெண்டுல ஒண்ணு பார்ப்போம்...’’ - ரோசி கட்டைவிரலைக் காட்டி சொன்னவிதம் மீனாட்சிக்கும் தெம்பாகத்தான் இருந்தது. அப்போது கதவைத் திறந்துகொண்டு பார்வதி உள்ளே வந்தாள். அவள் வரவும் பேச்சை நிறுத்திக்கொண்டு இருவரும் அவளைப் பார்த்தனர்.‘‘என்னம்மா... உங்க அரட்டைக்கு நடுவுல நான் குறுக்க வந்துட்டேனா?’’ பார்வதி சற்று விநயமாக பேச ஆரம்பித்தாள்.‘‘சேச்சே... அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி...’’‘‘அதுசரி... இத்தனை வருஷத்துல நான் உன்னைப் பார்த்ததே இல்லையே... நீ இப்பதான் மீனாவோட பழகறியோ?’’பார்வதியே எடுத்தும் கொடுத்தாள்.‘‘ஆமாம் ஆன்ட்டி... நான் ஒரு ரிசர்ச் ஸ்டூடன்ட். நாங்க காலேஜ் லைப்ரரியில அடிக்கடி பாத்துப்போம். ஒரு பத்து பதினைஞ்சு நாளாவே இவகிட்ட இருந்து போனே இல்ல. அதான், நேர்லயே பார்க்க வந்தேன்...’’‘‘நீ சொல்ற இந்த பத்து பதினைஞ்சு நாளா எங்க வாழ்க்கையும் வாழ்க்கையாவே இல்லை.’’“அப்படி என்ன பிரச்னை ஆன்ட்டி..?’’“அது எதுக்கு உனக்கு... சரி, நீ பேசி முடிச்சிட்டியா?’’“உம்...’’“இல்ல நான் இப்ப இவளோட மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகணும். அதான் கேட்டேன்...’’‘‘அய்யோ முதல்ல கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்க ஆன்ட்டி. நானும் கிளம்பறேன்...’’ - ரோசியும் நாசூக்காக நழுவிக்கொண்டாள். முகஜாடையில் ‘நான் உன்னிடம் பிறகு போனில் பேசுகிறேன்’ என்று உணர்த்தியபடியே விலகவும் செய்தாள்.அவள் சென்றுவிட்ட நிலையில்...‘‘அம்மா, இப்ப நாம கோயிலுக்கா போகப் போறோம்?’’‘‘ஆமாண்டி... அதான் வந்தேன்... நீயும் சட்டுன்னு கிளம்பு. கோயில் கம்பத்தடி மண்டபத்துகிட்ட இருக்கற காளிக்கு, நீ உன் கையால விளக்கு போடணுமாம். போட்டா உனக்கு ரொம்ப நல்லதாம்...’’‘‘யாரும்மா சொன்னாங்க...’’‘‘ஒரு சித்தரம்மா, இப்ப வந்தாங்களே... அவங்கதான்!’’‘‘அம்மா... எதுக்கும்மா அவங்கள எல்லாம் உள்ள கூப்ட்டு உட்காரவெச்சுப் பேசறே... ஆமா இன்னும் என்னல்லாம் அளந்தாங்க...’’‘‘பெரியவங்களபத்தி இப்படி அலட்சியமாப் பேசாதே... ஒரு மோசமான காலமாம் இப்ப நடக்கற காலம். யாரையும் நீ நம்பிடக்கூடாதாம். ரொம்ப ஜாக்ரதையா இருக்கணுமாம். அப்புறம் உன் கையால விளக்கு போட்டா ரொம்ப நல்லதாம்...’’‘‘என்னம்மா இது... எப்ப பார் பொங்கல் வை... விளக்கு போடுன்னுகிட்டு... இவங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா?’’‘‘ஏண்டி இப்படி எல்லாம் கேக்கறே?’’‘‘வேற எப்படி கேட்க... இந்த மாதிரி தெருவுல போற கண்டவங்க சொல்றதுக்கெல்லாம் பெருசா மதிப்பளிக்காதே... விளக்கு அது இதுன்னு என்னையும் டிஸ்டர்ப் பண்ணாதே... போய் வேலையைப் பார்...’’ - மீனாவின் அதிரடியான பதிலுக்கு ஒரு பதிலை பார்வதியால் கூறமுடியவில்லை. கச்சிதமாக அப்போது அப்பா சந்திரசேகரும், அண்ணன் ரமேஷும் உள்நுழைந்திருந்தனர். பார்வதி மௌனமாகவும், இறுக்கமாகவும் நிற்பதைப் பார்த்து,‘‘என்ன பார்வதி? ஏன் ஒருமாதிரி இருக்கே?’’ என்று கேட்டார்.‘‘நான் சொல்றேம்ப்பா... அந்த சடைபிடிச்ச ஒரு சாமியார் லேடி முன்ன வந்தாங்களே..?’’‘‘யாரும்மா..?’’‘‘அட இப்பதான் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்கு முன்னால காலங்காத்தால வீட்டு வாசல்ல வந்து நின்னுக்கிட்டு பொங்கல் பிரார்த்தனை பண்ண மறந்துட்டீங்க... அதைப் பண்ணிடுங்கன்னு சொன்னாங்களே..?’’‘‘ஓ... அந்த நிகழ்கால கே.பி.சுந்தராம்பாளா?’’ - ரமேஷ் ரசனையோடு திருப்பிக் கேட்டான். அதை மீனாவும் வெகுவாக ரசித்துக்கொண்டே, “அந்தக் கெழவி யேதான்...’’ என்று வாய்விட்டாள்.‘‘அய்யய்யோ... இப்ப என்ன சொன்னாங்க..?’’ பதைத்தான், ரமேஷ்.‘‘அன்னிக்கு தெப்பகுளம் மாரியம்மனுக்குப் பொங்கல். இன்னிக்கு மீனாட்சியம்மன் கோயில் கம்பத்தடி மண்டப காளிக்கு நெய்விளக்கு... நாளைக்கு எதை செய்யச் சொல்வாங்களோ?’’‘‘அம்மா... என்னம்மா இதெல்லாம்? அதான் எதுவும் வேண்டாம்னு ஒதுங்கற முடிவை எடுத்துட்டோம்ல?’’‘‘‘இல்லடா... அப்படி எல்லாம் ஒதுங்க முடியாதாம்...’’‘‘ஒதுங்கமுடியாதாமா? ஒதுங்கிக் காட்டிட்டா..?’’‘‘ஏண்டா டென்ஷனாகறே... அவங்க சொன்னதைத்தான் நான் சொன்னேன்...’’‘‘சே... நான் அப்ப பாத்து இல்லாம போய்ட்டேன் பார்... சரி, அவங்ககிட்ட எதுக்கு நீ மீனா விஷயத்தை எல்லாம் டிஸ்கஸ் பண்றே?’’‘‘நான் பண்ணலை... அவங்களாதாண்டா அருள்வாக்கு மாதிரி சொன்னாங்க...’’‘‘மண்ணாங்கட்டி... இந்த மாதிரி வீடு தேடிவந்து உளர்றதுக்குப் பேர் அருள்வாக்கா? அறிவில்ல உனக்கு?’’‘‘என்னடா ரமேஷ் என்னை என்னவோ ஏமாறதுக்குன்னே பொறந்தவமாதிரி நினைச்சுப் பேசறே? நீ நினைக்கறமாதிரி அவங்க தப்பான சாமியார் இல்லடா... அந்த டாக்டர் துவாரகநாத் உயிரையே காப்பாத்தினவங்கடா... அதை ஞாபகத்துல வெச்சுக்கிட்டு பேசு...’’‘‘சரி... இன்னும் என்ன உளறினாங்க... சாரி சொன்னாங்க..?’’‘‘நீ இப்படி விட்டேத்தியா கேட்டா, நான் எதையும் சொல்லமாட்டேன். சீரியஸா கேள்...’’‘‘இந்த சாமியார்... அவங்க அருள்வாக்கு... இதெல்லாம் டுபாக்கூர் விஷயம்னு இன்னுமா உனக்குத் தெரியல? எவ்வளவு சினிமால காமெடி ஸீன்ல இவங்கள பிரிச்சி மேயறாங்க. அதை எல்லாம் பாத்துமா நீ இந்த மாதிரி கேரக்டர்ச நம்பறே?’’‘‘ரமேஷ்... இவங்கள அப்படி என்னால நினைக்கமுடியலடா. நாம சொல்லாமலே நம்ப பிரச்னைகளை அப்படி அப்படியே சொல்றாங்கடா. எனக்குப் பிரமிப்பாதான் இருக்கு.’’‘‘சரி, இன்னிக்கு இப்ப என்ன சொன்னாங்க..?’’ - ரமேஷ் முடிவாக கேட்க, அங்கிருந்து விலகிச்சென்று சில விநாடிகளில் அந்த உள்ளங்கையில் அடங்கிவிடு கின்ற இரண்டு எந்திரத்தகடுகளை எடுத்துவந்து, அவர்கள் முன் வைத்துக் காட்டினாள்.‘‘என்ன இது?’’‘‘பைரவர் எந்திரத் தகடாம்... சிவன் சொத்தை எல்லாம் பைரவர்தானே காவல்காக்கறாரு? இந்தத் தகடு உங்க ரெண்டுபேர் சட்டைப் பாக்கெட்லயும் எப்பவும் இருக்கணுமாம். இல்லேன்னா ஆபத்தாம்...’’“அப்படிப் போடு அருவாள... ஆமா, இதுக்கு எவ்வளவு பணம் கேட்டா அந்த சாமியார் கெழவி?’’“நயாபைசாகூட அவங்க கேக்கல... நானும் கொடுக்கல.’’“அப்ப இது இன்னும் ஆபத்தானதுன்னு அர்த்தம்...’’- சொன்னபடியே அவள் கையில் இருந்த தகடுகள் இரண்டையும் வேகமாய் வாங்கி அதை அப்படியே கசக்கி அருகில் இருந்த குப்பைக்கூடைக்குள் போட்ட ரமேஷ்,‘‘போம்மா... போய் வீட்டு வேல எதாவது இருந்தா அதைப் பாரு. எந்திரம், தகடுன்னுல்லாம் இனி நினைச்சுக்கூட பாக்காதே... அந்தக் கிழவி அடுத்து வந்தா அவள நான் பாத்துக்கறேன். மீனா உனக்கும் நான் சொல்லிக்கறேன். நாம இந்தப் பிரச்னைல ஒதுங்கிட்டவங்க. அதை நீ மறந்துடாதே. உனக்கு எதாவது நினைவுகள் வந்தாலும் அதை எங்ககிட்ட சொல்லாதே. ஏதோ கனவு அதுன்னு நினைச்சு உன் வேலையப் பார்.’’ - என்று ஒரு போடு போட்டுவிட்டு வேகமாக விலகிச் சென்றான். மீனாவுக்கே அவன் பேச்சு ஓர் அதிரடியாகத்தான் இருந்தது. அவன் விலகவுமே பார்வதி ஓடிப்போய் குப்பைக்கூடையில் அவன் எரிந்த அந்த இரு தகடுகளையும் எடுத்தவள், அதன் கசங்கலை சரிசெய்ய முயன்றபடியே,‘‘இவனுக்கு இப்படி ஓர் அவநம்பிக்கை கூடாதுங்க... அந்தம்மா எவ்வளவு அக்கறையா இதைக் கொடுத்தாங்க தெரியுமா?’’ என்றபடியே சந்திரசேகரைப் பார்த்தாள். சந்திரசேகரும் வாங்கிப் பார்த்தார். புருவம் வளைந்தது. கண்ணிரண்டும் இடுங்கியது.‘‘அப்ப அவங்க நமக்கு ஆபத்து இருக்கறதா நினைக்கறாங்களா பார்வதி..?’’ என்றும் கேட்டார்.‘‘ஆமாங்க... இனிமேதான் எல்லாமே இருக்காம். நாம இந்த விஷயத்துல ஒதுங்கமுடியாதாம்...’’‘‘என்ன பார்வதி இது... முன்ன போனா முட்டுது... பின்ன வந்தா இடிக்குது..?’’‘‘ஆமாம்ப்பா... ஆனா நான் இனி பயப்படப்போறதில்லப்பா... என்னதான் நடக்குதுன்னு பாத்துட்றேன்...’’ - மீனா ரோசி தந்த தைரியத்தில் பேசினாள்.‘‘அப்படித்தாம்மா தைரியமா இருக்கணும். குட்... அதேசமயம் உங்கம்மா உணர்ச்சியையும் மதிக்கணும். பார்வதி இந்தத் தகடுகளை நான் என் பாக்கெட்ல வெச்சிக்கறேன். போதுமா?’’‘‘ரமேஷும் வெச்சுக்கணுங்க...’’.‘‘அது நடக்காது. நான் இதை வெச்சுக்கப்போறது தெரிஞ்சாலே கத்துவான். நீ இதை விட்று... அதான் நான் நம்பறேன்ல. தைரியமா இரு...’’ - சந்திரசேகர் தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் அந்த இரு தகடுகளையும் வைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார். பார்வதியிடம் மட்டும் ஓர் இனம்புரியாத கலக்கம்! அந்தப் பங்களாவுக்குள் ரோசியின் கார் புகுந்து நின்ற விதமே ஓர் அசுரத்தனமாக இருந்தது. பன்னிரண்டு அடி உயர இரும்புக் கிராதி கேட்டுகள் ஆட்டோமேடிக் வெர்ஷனில் மூடிக்கொள்ள, சி.சி. கேமரா வழியே அவள் வருவதைத் தன் தனி அறையில் இருந்து பார்த்தபடி இருந்த கடத்தல்புலியான விஸ்வநாத், தன் பேட்டரி நாற்காலி வாகனத்தில் அதை ரிமோட்டில் இயக்கியபடியே ஹாலில் வந்து காத்திருந்த ரோசி முன்னால் வந்து சேர்ந்தார்.‘‘குட் ஆஃப்டர்நூன் பாஸ்...’’‘‘என்ன ரோசி... எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு?’’‘என் வரையில நான் க்ளியர்கட்டா போய்கிட்டே இருக்கேன் பாஸ்...’’‘‘அந்தப் புதையல் பத்தி என்னல்லாம் தெரியவந்திருக்கு?’’‘‘இப்பதான் மீனாங்கற அந்த பூர்வஜென்ம கேஸை மீட் பண்ணி ஒரு லிங்க்கை கிரியேட் பண்ணியிருக்கேன். போகப்போக எதாவது தெரியவரலாம்...’’‘‘ஓ... நீ அந்தப் பொண்ணுகிட்டயே போய்ட்டியா... நீ அப்ப அவளோட ட்ரீமை எல்லாம் பூர்வஜென்மத்துல நடந்ததா நம்பிட்டியா?’’‘‘அப்படியெல்லாம் நான் அவ்வளவு சீக்கிரம் இந்த மாதிரி விஷயங்கள நம்பிடமாட்டேன்... அதேசமயம் அந்தப் பொண்ணு மேல ஒரு கண்ணு இருந்துக்கிட்டே இருக்கறதுதான் நல்லது. ஏன்னா, அவதான நம்பளோட காம்பெடிட்டர்..?’’‘‘எக்ஸாக்ட்லி..! பை த பை அந்தத் துரோகி ராமச்சந்திரன் மேட்டர்ல போலீஸுக்கு உன்மேல எந்த சந்தேகமும் இல்லையே?’’‘‘அவங்க வரையில நான் ஒரு யூட்யூபர்... பிரஸ் ரிப்போர்டர். ராமச்சந்திரன் கொலை விஷயத்துலகூட போலீஸால என்னை எதுவும் பண்ணமுடியாது. ஏன்னா, நான் அப்ப ஓர் ஆம்பளையைப் போல விக் வெச்சுக்கிட்டு டோட்டலா என்னை மாத்திக்கிட்டுதான் போனேன்.’’‘‘அடி தூள்... நீ எப்பவும் பயங்கர பிரில்லியன்ட்... அப்புறம் அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் ஒழுங்கா கோஆப்பரேட் பண்றான்தானே?’’‘‘யெஸ் பாஸ்... ஆனா, அந்தாள் ஒரு சரியான தொடைநடுங்கி. தூக்கித் தூக்கி நிறுத்த வேண்டியிருக்கு...’’‘‘என்னவோ பண்ணிக்கோ. ஆனா, நாம ஜெயிச்சிடணும். அந்தத் தங்கம் நம்ப கைக்குக் கிடைச்சே தீரணும்...’’‘‘ஷ்யூர் பாஸ்... ஜஸ்ட் இந்த அப்டேட்டுக்காகத்தான் உங்களப் பாக்க வந்தேன். நான் புறப்படறேன்...’’‘‘ஓகே... கோ எஹெட்...’’ - விஸ்வநாத்தின் ஆட்காட்டி விரல் ரிமோட்டை அமுக்கியதில், அந்தச் சக்கர நாற்காலி அப்படியே திரும்பி லிஃப்ட் நோக்கி ஓடி, அதன் கதவுகள் திறக்கவும் உள்புகுந்து மறைந்தும் போனது! மீனாட்சியம்மன் கோயில்! திருப்பதிக்குப் போட்டியாக பெரும் கூட்டம். உள்ளே கம்பத்தடி மண்டப காளி சன்னதி முன்னால் கையில் எரியும் அகல்விளக்குடன் நின்றுகொண்டிருந்தாள், பார்வதி. அருகிலேயே மீனாட்சி. ‘நான் வரவில்லை’ என்று சொன்னவளை கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்திருந்தாள் பார்வதி.காளியும் பல கரங்களோடு கையில் சூலாயுதமுடன் குங்கும பாதங்களோடு நின்றபடி இருக்க, அவளைப் பார்த்த அந்த நொடிகளில் மீனாட்சியிடம் அவளின் முன்ஜென்ம தாக்கம்...காளியின் முன்னால் நூற்றியெட்டு அகல்விளக்குகள்! அதன் ஒளிப்பிரகாசத்தில் அவள் திருமேனியைப் பார்த்து கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தாள், அங்காயி!ரகசியம் தொடரும்... - இந்திரா சௌந்தர்ராஜன்