வாசுகி ராஜாபெரிய ஸ்டார்கள், பெரிய பட்ஜெட்டில் அடுத்து ஒரு படம் பண்ணப் போகிறார்கள் என்றால் அந்தப் படத்தின் இயக்குநர்கள் லிஸ்டில் கௌதம் மேனன் பெயர் கண்டிப்பாக இருக்கும். காரணம் எந்த ஒரு கதையையும் மாஸாவும், ஸ்டைலிஷாவும், வேகமாகவும், ஹீரோக்களுக்குப் பொருத்தமாகவும் எடுக்கக்கூடிய ஒரே டைரக்டர் இப்போதைக்கு ஜி.வி.எம். மட்டும் தான். மீடியம் பட்ஜெட்டில்கூட மிகப் பிரம்மாண்டமாக அவுட்புட் தரக்கூடியவர். வெந்து தணிந்தது காடு வெற்றிக்குப்பின்னரும் நடிப்பில் படு பிஸியாகி விட்டார். அதற்கு மத்தியிலும் அவரது தயாரிப்பில், இயக்கத்தில் பல படங்கள் வரிசைகட்டி வர இருப்பதால் நாமும் வேட்டியை மடித்துகட்டி அவரை விரட்டிப் பிடித்தோம்....இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், விளம்பர மாடல்... இவ்ளோதானா, இன்னும் எடுக்க வேண்டிய அவதாரங்கள் பாங்கி இருக்கா? “இந்த மாதிரி நீங்க வேற என்ன எழுதி வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க, அதையும் பண்ணிடறேன்.”உங்களோட இயக்கம், தயாரிப்புல அடுத்து என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன? “ அந்த லிஸ்டில் ஃபர்ஸ்ட் ‘துருவ நட்சத்திரம்’. அதுக்கான வொர்க் தான் போய்கிட்டிருக்கு. அதுக்கப்புறம் ’ஜோஷ்வா - இமைபோல் காக்க’ படம் வரும்.”’ஜோஷ்வா’ படத்தைப் பத்தி சொல்லுங்க, அது எப்போ ரிலீஸ் ஆகும்? “ஜோஷ்வா ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஃபில்ம். வருணோட ஒரு படம் பண்றதுக்காக ரெண்டு மூணு விஷயங்கள் பேசினோம். எனக்கு அவரோட பாடி லாங்குவேஜ், அவர் வொர்க் பண்ணக்கூடிய விதம் எல்லாத்தையும் பார்த்துட்டு அவர் ஒரு ஆக்ஷன் ஃபில்ம் பண்ணா நல்லாயிருக்கும்னு சொல்லி, அதற்காகவே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி இறங்கினோம். அது ஒரு சிம்பிளான ஃபில்ம் தான். ஆனால், அதுக்குள்ள ஒரு இண்டர்நேஷ்னல் ஐடியாவை கொண்டு வந்து ட்டூ ஹவர்ஸ்ல ஒரு படம் பண்ணியிருக்கோம். பேக் டூ பேக் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம். ரொம்ப ஸ்டைலிஷான ஒரு ஆக்ஷன் ஃபில்மா வந்திருக்கு. இப்பதான் எடிட் பண்ணி முடிச்சிருக்கோம். பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருந்தது. நாங்க படத்தைக் கம்ப்ளீட் பண்ணி ஐசரி கணேஷ் சார்கிட்ட கொடுத்தாச்சு. ஓ.டி.டி க்கு சைன் பண்றதுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தார். இப்ப அதுவும் முடிஞ்சிடுச்சி. ‘ஒரு ரிலீஸ் டேட்டை மைண்ட்ல வச்சிருக்கேன், நான் சொல்றேன்’னு சொல்லியிருக்காங்க.”.‘துருவ நட்சத்திரம்’ படம் பத்தி சொல்லுங்க... “ ‘துருவ நட்சத்திரம்‘ பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலயே...”எதனால அது தயாராக இவ்ளோ தாமதமாச்சு? “ அந்தப் படத்துக்குன்னு ஒரு பெரிய விஷன் இருந்தது. புரொடக்ஷன் சைட்ல அந்த விஷனுக்கு சேட்டீஸ்ஃபேக்ஷனா ஃபண்டு, அந்த டைம்ல எங்களால கொடுக்க முடியல... கம்யூனிகேஷன் சரியா இல்லாததுனால கொஞ்சம் பிரச்னைகள் வந்துச்சி. கோர்ட் கேஸஸ்-னு படமே ஸ்டாப் ஆச்சு. பட் தேங்க்ஃபுலி நான் விக்ரம் சாரோட போர்ஷன் ஃபுல்லா ஷூட் பண்ணி முடிச்சிருந்தேன். மத்த ஆர்ட்டிஸ்ட்டோட சில வொர்க் மட்டும் தான் பேலன்ஸ் இருந்தது. அதை இப்போ த்ரீ ஃபோர் மந்த்ஸா பண்ணி முடிச்சிட்டேன். இப்ப எடிட் பண்ணி, அதுக்கு மியூஸிக் ஃபீட் பண்ணி நிறைய விஷயங்கள் பண்ணும்போது அது நல்லாவே வந்திருக்குன்னு தோணுது. இடையில கொஞ்சம் பழைய படம் ஆயிடுமோன்னு பயந்துட்டோம். பட் படத்தைப் பார்த்தவங்க ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னாங்க. ஓ.டி.டி-க்கும் பேசியாச்சு. ஒரு ப்ராப்பர் ரிலீஸ் டேட் பார்த்துட்டு மே, ஜூன், ஜூலைக்குள்ள அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்காக வொர்க் பண்ணிகிட்டிருக்கறோம்.”.‘வெந்து தணிந்தது காடு-2‘ எந்த ஸ்டேஜ்ல இருக்கு? “அது ரைட்டிங்கோட நிக்குது. அதை இப்போ பண்ண நானும் ரெடி இல்ல,சிம்புவும் ரெண்டு மூணு படம் பண்ணிட்டுதான் வருவார்னு தோணுது.அதனால நானும் அந்தப் படத்தைப் பத்தி அதுக்கப்புறம் அவர்கிட்டபேசல.”`VTK’ படத்தோட க்ளைமாக்ஸ்ல ஹீரோவோட தோற்றம் கே.ஜி.எஃப்.ஐஞாபகப் படுத்துச்சி. KGF மாதிரியே VTK 2-லயும் பிரம்மாண்ட மிஷின்கன்கள், ஹெலிகாப்டர்கள்னு ஏதாவது ஸ்பெஷல் இருக்கா? “இல்ல, அந்த சீனுக்கு அது தேவைப்பட்டுச்சிங்கிறதுனாலதான்பண்ணோம். கே.ஜி.எஃப். மாதிரி வரணும், கே.ஜி.எஃப்.ல இன்ஸ்பயர்ஆகி ஒரு படம் பண்ற அளவுக்கெல்லாம் நான் இன்னும் வரலைன்னுநினைக்கறேன். ஆக்சுவலா ’பத்து தலை’ லுக்ல தான் நான் பண்ணேன். அந்த க்ளைமாக்ஸ் போர்ஷனை ஷூட் பண்ணப் போகும்போது, ‘ ‘பத்து தலை’ படத்துக்கு இன்னும் க்ளைமாக்ஸ் பேலன்ஸ் இருக்கு, அதனால இந்த கெட்டப்பை மாத்த முடியாது’ன்னு சிம்பு சொன்னதால அந்த லுக்லயே நீங்க வாங்கன்னு சொல்லி, அதைப் பண்ணோம். எனக்கு அது பத்து தலை லுக்தான், கே.ஜி.எஃப். லுக் இல்லை.”.உங்க தாய்மொழி மலையாளமா இருந்தும், வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விணைணைத் தாண்டி வருவாயான்னு அழகான தமிழ்ப் பெயர்களை வைககறீங்க, தமிழ் மேல இவ்ளோ காதல் வந்தது எப்படி? “முதல்ல ஒரு விஷயத்தை நான் க்ளியர் பண்ண விரும்பறேன், என்னோட தாய்மொழி மலையாளம் இல்ல, தமிழ் தான். எங்க அம்மா தமிழ் தான். எங்க அப்பா தான் மலையாளி. ஆனா அவரும் பொறந்தது வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர். படிச்சது சென்னைல தான். நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே இங்க மெட்ராஸ்ல தான். இங்க என்னை மலையாளின்னு நினைச்சிகிட்டிருக்காங்க. நான் மலையாளத்துல போய் படம் பண்ணணும்னு நினைக்கும்போது, ’தமிழ்தானே நீங்க, இங்க வர்றீங்க?’-னு நினைக்கறாங்க. ஸோ, அந்தப் பிரிவினையில எனக்கு உடன்பாடு கிடையாது. நான் தமிழ் தான். அதனால நான் என் தாய்மொழியில தான் படங்களின் பேரை வைக்கறேன்.” பாடலாசிரியர் தாமரைக்கு மொத்த பாடல்களையும் எழுதற வாய்ப்பை நீங்கதான் கொடுக்கறீங்க, அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா? “ஸ்பெஷல் காரணம்னா… அந்தப் படத்துல இருக்குற பாடல்களுக்கு என்ன தேவையோ அதை ரொம்ப ஈஸியா அவங்க கொடுக்கறாங்க. அதோட இண்ட்டென்சிட்டி, அவங்க பாடல்களோட வரிகள் எல்லாருக்கும் பியூட்டிஃபுல்லா போய்ச் சேருது. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு கம்ஃபோர்ட் இருக்கு. நானும், மியூசிக் கம்போசரும் கேட்கற ஒரு விஷயத்துக்கு ட்டூ டூ த்ரீ டேஸ்ல அவங்க நிறைய ஆப்ஷன்ஸ் கொடுப்பாங்க. அதனால வேற யார்கிட்டயும் போய் உட்காரணும்கிற தாட் எனக்கு வரல. அப்படியே இருந்தாலும் நான் மதன் கார்க்கியோட போய் வொர்க் பண்ணியிருக்கேன். அதே கம்ஃபோர்ட் லெவல் அவர்கிட்டயும் இருந்திருக்கு.”.தமிழ்ல இத்தனை படங்களை இயக்கின நீங்க மலையாளத்துல ஏன் ஒரு படத்தைக்கூட இயக்கலை? “ஸ்பெசிஃபிக்கா எந்த ரீசனும் இல்லை, நானும் அங்க வொர்க் பண்றதுக்காக ரொம்ப ட்ரை பண்ணியிருக்கேன். சம் டைம்ஸ் நம்மோட கதைகள் அங்க இன்னும் பெட்டரா இருக்கும்னு எனக்குத் தோணியிருக்கு. நான் அங்க போய் ரெண்டு மூணு பேரை மீட் பண்ணியிருக்கேன். பட் இன்னும் அது அமையல.”இயக்கினதுலயே நீங்க ரொம்ப பெருமையா மனநிறைவா ஃபீல் பண்ண டாப் மோஸ்ட் படம் எது? ஏன்? “ஐ திங்க் ரீசண்ட்டா வந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் தான். ஏன்னா அந்தப் படத்துல நான் என்னையை வேற ஒரு கோணத்துல பார்த்தேன்.”.நீங்க இயக்கியதிலேயே உங்களுக்கு ரொம்பப் புடிச்ச நடிகர் யார்? நடிகை யார்? “ஆப்வியஸ்லி கமல் சார்தான். அவர்கூட மறுபடி வொர்க் பண்ணணும்னு நான் ஏங்கிகிட்டிருக்கேன்னு கூட சொல்லலாம். ஹீரோயின்ஸ்ல ஜோதிகா அண்டு த்ரிஷா. இவங்க இரண்டு பேரோடயும் எனக்கு ஒரு கம்ஃபோர்ட் ஸோன் இருக்கும்.”வேட்டையாடு விளையாடு, காக்க காக்க இந்த இரண்டு படங்களோட இரண்டாம் பாகம் பத்தி செய்திகள் வந்தது, உண்மையிலேயே அந்தப் படங்களோட பார்ட் 2 எடுக்குற ஐடியா இருக்கா? “ ‘காக்க காக்க’ பார்ட் ட்டூ பத்தி நான் எங்கயுமே சொன்னதில்ல. ஆனா வேட்டையாடு விளையாடு படத்தோட பார்ட் ட்டூ எடுக்கற ஐடியா கண்டிப்பா இருக்கு. ஸ்கிரிப்ட் எல்லாம்கூட முடிச்சி வச்சிட்டேன். அதை ஒரு தடவை கமல் சாரை மீட் பண்ணி பேசி அவரோட டேட்ஸை வாங்கணும். அதுக்காக தான் காத்துகிட்டிருக்கேன். சார் ஓகேன்னா உடனே ஸ்டார்ட் பண்ணிடுவேன்.”நீங்க ப்ரொடியூஸ் பண்ண ’தங்க மீன்கள்’ படத்துக்கு தேசிய விருதே கிடைச்சது. அதுக்கப்புறம் ஏன் இன்னொருத்தர் டைரக்ட்பண்ற படங்களை தயாரிக்கலை? “அது, சூழ்நிலையினால விட்டுட்டேன். விட்டுட்டேன்னு சொல்ல மாட்டேன், ஒரு செவன் எயிட் இயர்ஸா அந்தப் பக்கம் போக முடியல. ’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா கண்டிப்பா ப்ரொடியூஸ் பண்ணுவேன்னு நான் நினைக்கறேன்.”நீங்க நடிச்சதுலேயே எந்த படத்துக்கு அதிகமான பாராட்டுகள் வந்தது? “ஐ திங்க், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, இப்போ ‘விடுதலை.’ “உங்களின் இயக்கத்தில் அடுத்த படம் என்னவாக இருக்கும்? “அதைப்பத்தி இன்னும் முடிவு பண்ணலை.”’காக்க காக்க’, ’வாரணம் ஆயிரம்‘ வெற்றிக் கூட்டணியை மீண்டும் எதிர்பார்க்கலாமா? “அதை நீங்க சூர்யாகிட்ட தான் கேட்கணும்.”-கௌதம் வாசுதேவ் மேனன் பளீர்!