’இராவண கோட்டம்’
’இராவண கோட்டம்’ தலைப்பு கூட எதோ ஒரு கதை சொல்லுது, படத்துல தான்...
கீழத் தெரு, மேலத் தெருன்னு ஊர் ரெண்டாயிட்டதுன்னா… உலக யுத்தமே வர்றா மாதிரி, கீழத் தெரு இளவரசுவும், மேலத் தெரு பிரபுவும் கவலைப்படறாங்க. நெருங்கிய நண்பர்களான அவங்க பிரிஞ்சிட்டா ஊரே பிரிஞ்சிடும்னு ஒத்துமையா இருக்காங்க. அப்படியே ஒற்றுமையா இருந்து அவங்க சாதிச்சது, ஒரு தில்லாலங்கடியைத் தேர்தல்ல நிக்க வெச்சு எம்.எல்.ஏ. ஆக்கினதுதான். அப்புறம் அவனே, ஊரை இரண்டாக்கி, பெரிய தலை ரெண்டுக்கும் பாடை கட்டுகிறான்.
இது தெரியாம ரெண்டு தெரு இளசுகளும் யார் பொணத்த முதல்ல எரிக்கிறதுன்னு போட்டி போட்டுகிட்டு பாடையை தூக்கிட்டு ஓட, மேலத் தெரு ஜெயிக்குது. பிணத்தை எரிச்ச கையோட செத்தவங்களுக்கு சிலை வைக்கிறதுல மறுபடியும் சண்டை.
கபடி போட்டி வெச்சு கணக்கை முடிச்சுக்கலாம்னு ரெண்டு தெருவும் முடிவு செய்ய, அய்யா சிலையை வைக்க சபதமெடுக்கும் மேலத்தெரு சாந்தனு, ஜெயிச்சாரா சிலை வச்சாரா என்பதுதான் ‘இராவண கோட்டம்’.
கயல் ஆனந்தியுடன் செங்கல் சூளைக்குள்ள லவ் பண்றது, பைக்ல போறது, புளிய மரத்தடியில அத்தைக்கு சவால்விடறதுன்னு சாந்தனுவுக்கு சவாலான கேரக்டர். ஆனந்திக்கு என்ன கேரக்டர்னே தெரிஞ்சிருந்தா பெரிய விஷயம்தான்.
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் பொட்டல் காட்டுல ஒரு ட்ரோனை பறக்க விட்டு வேடிக்கை பார்த்ததோடு சரி... ஒத்த கீ போர்டுல மொத்த படத்தையும் முடிச்சு வெச்சிட்டார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். எந்த வேலையும் இல்லாதது இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்குதான்.
பாவம் சாந்தனு… சிலாட்ல ஒரு பால் விழாதா? சிக்ஸ் அடிச்சிர மாட்டோமான்னு பல வருஷமா ட்ரை பண்றார்...
இராவண கோட்டம் - பத்து தலைவலி
2 ஸ்டார்