பொழுதுபோக்கு, புதிய முயற்சி என்று தமிழ் சினிமா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஒரு சிலர் மட்டும் சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து படைப்புகளை சமரசமில்லாம் உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருக்கிறார் ‘தமிழ்க்குடிமகன்’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன். கிராமத்தில் சலவை தொழிலாளியாக இருக்கும் சேரன் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவருக்கோ அந்த ஊரில் சலவை தொழிலுடன் ஊர் மக்களின் இறுதிச் சடங்கையும் செய்ய வேண்டிய கட்டாயம். அரசு பணிக்கான தேர்வை எழுதச் செல்லும் நேரத்தில் ஊரில் ஒரு சாவு விழுந்து அவரின் அரசு உத்தியோக கனவையே காவு வாங்கி விடுகிறது. கடுப்பான சேரன் இனி சாவுக்கு மணி அடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்போது ஊரின் பெரிய தலை ஒன்று மண்டையைப் போட சேரன் வராததால் சாவு எடுப்பதில் சிக்கல்... ஊரே சேரனுக்குப் பகையாக அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை..ஊரை எதிர்த்து வாழும் ஒற்றை மனிதனாக சேரன் சிறப்பாக நடித்திருக்கிறார். பின் பாதியில் அவரை வழக்கமான ஹீரோவாக மாற்றி அடிதடியில் இறக்கி விடுவார்களோ என்று நாம் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. வேல ராமமூர்த்தி, லால்,ஸ்ரீ பிரியங்கா என பலரும் கிராமத்து மனிதர்களாகவே மாறியிருக்கின்றனர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாம் ஓ.கே., படத்திற்கு பலமாக இல்லை. வசனங்கள் அழுத்தமாக இருந்தாலும் செயற்கையாக இருப்பதால் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துவது போல் இருக்கிறது. சாதிய சமநிலையை ஏன் இன்றுவரை ஏற்படுத்த முடியவில்லை? என நிறைய கேள்வி எழுப்பும் இயக்குநர், பலவற்றை காட்சிப்படுத்தாமல், வசனங்களாக மட்டுமே வைத்திருப்பதால் எதுவும் சுறுக்கென தைக்க வில்லை. தமிழ்க்குடிமகன் - ரோஷக்காரன்2.5 ஸ்டார்.