வேலைக்கு போய்விட்டு ஆறுமணிக்கு வரவேண்டிய மனைவி பத்துமணியாகியும் வரவில்லை... போனையும் எடுக்கவில்லை... புருஷன் தெருத் தெருவாக தேடி அலைய, அம்மா, அத்தை, மகள்னு வீட்டில் எல்லாரும் பதட்டத்துடனே தூங்காமல் இருக்கிறார்கள். ராத்திரி முழுக்க அவள் வரவே இல்லை. பொழுது விடியும் நேரத்தில் வந்து விடுகிறார்... அவர் ஏன் இரவு வரவில்லை? என்ன நடந்தது? என்பதை அறிந்து கொள்ள அவரது கணவர் மட்டுமல்ல வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆர்வமுடன் இருக்க, அவள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.... அதை ஏன் அவர் சொல்ல வேண்டும்? நல்லபடி வந்துவிட்டார், அது போதாதா? அதை சொல்வதும் சொல்லாததும் அவர் உரிமையல்லவா? என்று ஒரு புதிய கேள்வியை எழுப்புகிறார் இயக்குநர் ரா.மு.சிதம்பரம்....இந்தக் கேள்வி அபத்தமாகவும், நியாயம் இல்லாததாகவும் நினைப்பவர்கள் இந்தப் படத்தை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாது. அந்தப் பெண் சொல்லாமல் இருப்பதிலும் ஒரு நியாயம் இருக்கலாம் என்று நினைப்பவர்கள் பார்க்கலாம். படம் முழுக்க தர்க்கம்... ஆண், பெண் உறவு, உரிமைபற்றி சமூகத்தில் சரி என்று முடிவாகிவிட்ட அனைத்தையும் விவாதத்திற்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர். அதற்கு வசனங்கள் கைகுடுத்திருக்கிறது. ஆனால் காட்சி அமைப்பும், நடிப்பும் போதுமானதாக இல்லை. கிளமேக்ஸ் வசனம் நறுக்கென்று இருந்தாலும், ஹீரோயின் முடிவு உணர்ச்சி வேகத்தில் இருப்பதால் அதில் உள்ள நியாயம் நீர்த்துப் போய் விடுகிறது. பெண்களை முடக்கிப்போடுவது வீடு தான் என்று படம் முழுக்க ஒரு வீட்டிலேயே எடுத்திருக்கிறார் இயக்குநர். அதை இன்னும் ஸ்வாரஸ்யமாக எடுத்திருக்கலாம். 85 நிமிடப் படம் என்றாலும் எப்போது முடியும் என்று நினைகத் தோன்றுகிறது, காரணம் நாமும் ஆண் என்பதாலா? பெண்களுக்கு ஒருவேளை பிடிக்கலாம்... அவள் அப்படித்தான் 2 - சின்னத்திரை சீரியல் 2.5 ஸ்டார்