இது பேய் கதை சீசன்... வழக்கமான பேய்கள் வில்லத்தனமாக, நல்லவர்கள் யாரையாவது விரட்டிக் கொண்டிருக்கும், தப்பிக்க அவர்கள் போராடுவார்கள். இந்தப் பேய்கள் அப்பாவிகள், வேறு வழியே இல்லாமல் வில்லன்களை விரட்டிக் கொல்கின்றன. இயக்கம், மோகன் கோவிந்த். படத்தில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் பிரமாதம். ஸ்டார்ட் அப் வென்ச்சராக வங்கியில் கடன் வாங்கி ஒரு ரெஸ்டாரன்டை நடத்துகிறார் ஹீரோ அஸ்வின். அவரது காதலி பவித்ரா பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். பேய்களுடன் பேசுவதற்கு ஒரு ஆப்பையும் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இவர்கள் இருவரின் காதல் போலீஸ் அதிகாரியான பவித்ராவின் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். இந்த சூழலில் அஸ்வினின் நண்பர் ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார். அவர் சாவதற்கு முன் அஸ்வினை சந்திப்பதால் போலீஸுக்கு அஸ்வின் மீது சந்தேகம். அடுத்த சில தினங்களில் பவித்ராவுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமாக இறக்கிறார். அவரையும் கடைசியாக சந்தித்தது அஸ்வின் என்பதால் பவித்ராவின் அண்னன் அஸ்வினை கொலைகாரன் என்றே முடிவு செய்கிறார். .இது எதுவும் புரியாமல் அஸ்வின் குழம்பும் நேரத்தில் அவனது ரெஸ்டாரண்டில் பேய்களின் நடமாட்டம் இருப்பது தெரிய வருகிறது. அந்தப் பேய்களுக்கும் இந்த மரணங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை அஸ்வின் கண்டுபிடிப்பதே கிளைமேக்ஸ். மெதுவாக நகரும் காட்சிகள்... முதல் பாதியில் ஆடியன்ஸை என்கேஜ் பண்ணும் விதத்தில் சம்பவங்களும் இல்லை; எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படி திரைக்கதையும் இல்லை. கொலை செய்யப்படும் சிறுமிக்கு இருக்கும் நோயும், அதற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவமும் நம்பும்படி இல்லை. கதை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆடியன்ஸை 2 மணி நேரம் காக்க வைப்பது எல்லாம் நியாயமே இல்லை. பிட்சா 3 – டெலிவரி லேட்2.5 ஸ்டார்