படத்தின் பெயருக்கேற்ப ஹீரோ 65 வயது முதியவர். படத்தின் பெயரில் எப்படி நாகரிகம் இல்லையோ அப்படித்தான் படம் முழுக்க அந்தப் பெரியவரும் அநாகரிகமாக நடத்தப்படுகிறார். அவரைத் தவிர ஹீரோ, ஹீரோயின் என யாரும் கிடையாது. படம் முழுக்க இரண்டே பெண்கள் அதுவும் ரெண்டு மூணு காட்சிக்குத் தான். மத்தபடி ஆளே வராத முள்ளுக்காடு, ஒத்த ரோடு, ஓட்ட காரு, பத்து பேரு... அதான் மொத்த படமும். தயாரிப்பாளருக்கு செமஜாலி! உடனே ஆர்ட் ஃபிலிம் என்று நினைத்து விடாதீர்கள், எல்லாருக்கும் தெரிந்த தெனாலிராமன் திருடனைப் பிடித்த கதைதான்….ஆள் இல்லாத ரோட்டில். அந்தக் காலத்து மோரிஸ் மைனர் காரில் நாலு ஆண், ஒரு கர்ப்பிணிப் பெண் போகின்றனர். அந்தக் காருக்கு முன்னால் துருப்பிடித்த சைக்கிளில் போகும் பெரியவர், ஹாரன் அடித்தும் ஒதுங்காமல் நடுரோட்டிலேயே செல்கிறார். அதனால் காரில் உள்ளவர்களுக்கும் அவருக்கும் கைகலப்பு நடக்கிறது... இதுதான் படத்தின் முதல் காட்சி. அந்தக் காட்சி முடிவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. .இடைவேளைக்கு அப்புறம் முதியவருக்கு சின்ன ஃபிளாஷ் பேக்... மறுபடியும் அதே ரோடு, கதையும் நகரவில்லை, காரும் நகரவில்லை முதியவரும் நகரவில்லை... இதெல்லாம் புதுமையா, கொடுமையான்னு நாம் யோசிப்பதற்குள் போலீஸ் வந்து காரில் வந்த கடத்தல் கும்பலை பிடித்து படத்தை முடித்து வைக்கின்றனர். அதற்கு உதவிய பெரியவருக்கு ஜனாதிபதி விருதும் கொடுக்கிறார்கள்.இயக்கம் யாழ் குணசேகரன்…ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கலாம், ஆனால் எப்படி எடுக்கவே கூடாது என்பதற்கு ஓரே உதாரணம் இதுதான்,,, அதற்காகவே ஒருமுறை பார்த்து விடுவது நல்லது. ‘கிழப்பய’ – முடியல…1 ஸ்டார்