‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’ஆகிய இரண்டு காவியங்களுக்கு பிறகு, கடந்த 20 ஆண்டுகளில், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’உள்ளிட்ட ஏழெட்டு செல்லாத நோட்டுகளை புழக்கத்தில்விட்ட தங்கர்பச்சானின் குடும்ப குமுறல்தான் ’கருமேகங்கள் கலைகின்றன’. குடும்பத் தலைவரும் நேர்மையான நீதிபதியுமான பாரதிராஜாவுக்கு கவுதம் வாசுதேவ மேனன் உள்ளிட்ட மூன்று பிள்ளைகள். அதில் இருவர் அமெரிக்காவிலும் கனடாவிலும் வசிக்க, மூத்த பிள்ளை கவுதமின் இல்லத்தில் இருக்கிறார் பாரதிராஜா. அப்பாவும் மகனும் பல வருடங்களாகப் பேசிக்கொள்வதில்லை. இதில் கவுதமுக்கு கடுமையான குற்ற உணர்வு. அதற்காக தந்தையிடம் மன்னிப்புக் கேட்க அவர் முடிவு செய்திருக்கும் நேரத்தில், தனக்கு காலம் கடந்து ஏற்பட்ட இன்னொரு குற்ற உணர்ச்சியால் தலைமறைவாகிவிடுகிறார் பாரதிராஜா..மகன் குற்ற உணர்ச்சிக்கு மன்னிப்பு கோர தந்தையைத் தேட, தந்தை தனது குற்ற உணர்ச்சிக்குக் காரணமானவர்களிடம் மன்னிப்பு கோர அவர்களைத் தேட, நடுவில், இன்னொருவருக்குப் பிறந்த குழந்தையை தன் குழந்தையாகப் பாவிக்கும் யோகிபாபுவின் கதை ஒன்று ஓட... ஓ மை கருமேகமே... படத்தின் இரு தரமான விஷயங்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் இருவரின் நடிப்பு. பல இடங்களில் கண் கலங்கவைக்கிறார் பாரதிராஜா. யோகிபாபு வழக்கமான முக பாவனைகளால் நோகடிக்கிறார். படத்தில் அவருக்கு வாய்ப்பும் கொடுத்து டைட்டில் கார்டில் ‘நடிப்புச் செல்வம்’என்று நக்கலடிக்கும் துணிச்சல் தங்கர் பச்சான் ஒருவருக்கே சாத்தியம். ‘அருவி’அதிதிபாலன் வீணடிக்கப்பட்டிருக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம் என்று டைட்டில் கார்டில் போடுகிறார்கள். எண்பதுகளின் மத்தியில் ரிலீஸாகியிருந்தால் குடும்பங்கள் கொண்டாடிய படமாக இருந்திருக்கும். இவ்வளவு லேட்டாவா வருவீங்க தங்கர்? கருமேகங்கள் கலைகின்றன – தியேட்டரில் பார்வையாளர்களும்தான்!