குழந்தைகளுக்கு தூக்கத்தில் வரும் கனவு பிரமிப்பாக இருக்கும், ஆனால் அதை சொல்லத் தெரியாது... ஹர்காராவும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவுக்கு வந்த அழகான கனவு, அதை சொல்லத்தான் தெரியவில்லை. செல்போன் சிக்னல் செல்லாத இடத்துக்குக் கூட ஒரு போஸ்ட்மேன் செல்கிறார் என்கிற விஷயத்தை அழகாகச் சொல்ல ஆயிரம் வழிகள் இருந்தும் ஒன்றுகூட இயக்குநருக்கு தெரியாதது துரதிர்ஷ்டம். ஒரு மலை கிராமத்து போஸ்ட் ஆஃபீஸில் துவங்கும் படம் முதல் அரை மணி நேரத்துக்கு அங்குலம் கூட நகரவில்லை. போஸ் மாஸ்டராக வரும் காளி வெங்கட்டின் சொந்தப் பிரச்னையை சொல்ல வருகிறாரா? இல்லை, ஈசன் மலை கிராமத்து மக்களின் அறியாமையை சொல்ல வருகிறாரா? என்று எதுவும் புரியாமல் நாம் குழம்பும் நேரத்தில், 150 வருடங்களுக்கு பின்னால் சென்று ஹர்காரா எனும் போஸ்ட்மேன் மாதேஸ்வரனின் கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர்..அதிலும் ஆயிரம் குழப்பம்... மலை முழுவதும் தன் பாதங்களால் பாதை அமைத்த மாதேஸ்வரனின் தியாகத்தைச சொல்வதா? மலையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெள்ளைக்கார துரையின் சதியை சொல்வதா? அதை முறியடிக்க நினைக்கும் புரட்சிக்காரர்களைப் பற்றி சொல்வதா? என்று குழம்பி, கடைசிவரை எதையும் சொல்லாமல் மாதேஸ்வரனோடு நம்மையும் கழுவில் ஏற்றி விடுகிறார் இயக்குநர். படத்தின் ஒரே ஆறுதல் லோகேஷ், பிலிப்பின் ஒளிப்பதிவு... மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, அமைதி, பிரம்மாண்டம் அனைத்தையும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். காமிரா கோணங்களும், நகர்வும் ஹாலிவுட் தரம். எடிட்டிங்கில் காட்சிகளை கோர்த்த விதம் அழகு, கதையை நகர்த்துவதில் தொய்வு. நடிப்பில் காளி வெங்கட்டும், கட்டில் பாட்டியும், மாதேஸ்வரன் காதலியும் பரவாயில்லை. ஹீரோ ராம் அருண் காஸ்ட்ரோ நல்லா கம்பு சுத்தறார்.ஹர்காரா - ராங் அட்ரஸ்2 ஸ்டார்