எதெல்லாம் எங்கெங்கே இருக்கக் கூடாதோ அதெல்லாம் அங்கங்கே பர்ஃபெக்டா இருக்கும்... ஹால்ல கட்டில் இருக்கும், பெட்ரூம் ஃபுல்லா அட்ட டப்பாவா இருக்கும், கிச்சன் மட்டும் கொஞ்சம் கிளீனா இருக்கும்... ஸ்டெடிகாமோ, கிம்பலோ... கேமிரா அப்படியே வீட்டுக்குள்ள ட்ராவல் ஆகி பெட்ரூமுக்குள்ள போனா, காலைல எட்டு மணியாகியும் எந்திரிக்காம ஒரு ஸ்டீல் காட்ல ஹீரோ குரட்டை விட்டு தூங்கிகிட்டிருப்பார்... ஹீரோவுக்கு சூப்பர் இண்ட்ரோ, அவரோட குரட்டை தான் படத்தோட கண்டெண்ட். அந்த குரட்டையால் ஹீரோ படும் அவஸ்தைதான் ‘குட்நைட்.’ ஹீரோவாக மணிகண்டன், அவரது காதலி, மனைவியாக மீதா ரகுநாத் இவங்க கூட அந்த குட்டி தெரு நாய்.... என்னமா நடிச்சிருக்காங்க, தெரியுமா..! அந்த நாய்குட்டிக்கு ஆஸ்காரே குடுக்கலாம்... ஹீரோவுக்கு அக்காவாக வரும் ரெய்சல் ரெபேகா, மாமா ரமேஷ் திலக், தங்கச்சி ஸ்ரீ ஆனந்தி, டீம் ஹெட் பகவதி பெருமாள், ஹவுஸ் ஓனர் பாலாஜி சக்திவேல் என துணை காதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே படத்தை தூண் மாதிரி தாங்கி நிற்கின்றனர். .ஒவ்வொரு கேரக்கடரையும் வைரம் போல் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகர். காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு யதார்த்தம். சென்ஸிபிள் ஹியூமெர். வசனங்கள் ஃப்ன் அண்ட் எமோஷனல், மறைந்த இயக்குநர் மகேந்திரன் படம் பார்த்த மன நிறைவு. ஆர்ட் டைரக்டர் ஸ்ரீகாந்த் கோபால் தான் படத்தின் மூடையே செட்பண்ணுகிறார். ஜெயந்த் யாதவின் ஒளிப்பதிவு, பரத் விக்ரமனன் எடிட்டிங், ஷான் ரோல்டனின் இசை என எல்லாமே காட்சிகளின் உணர்வுகளோடு பொருந்தி போகின்றன. கிளை மேக்ஸ் மட்டும் ரொம்பப் பழசு... மொத்த குடும்பமும் கேபில் சுத்திக் கொண்டே இருப்பது கொஞ்சம் இழுவை. குட்நைட் - ஸ்வீட் ட்ரீம்ஸ் 3.5 ஸ்டார்