இந்த சமூகத்தில் உடனடியாக காப்பாற்றப்பட வேண்டியது அவரவர் சாதியோ, மதமோ, இனமோ, மொழியோ அல்ல… ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழிந்து வரும் உண்மையும், நேர்மையும் தான் என்று நம் கண்கள் கலங்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.செல்வகுமார்.வறுமையின் கொடுமையில் வாழ்ந்தாலும் தான் விற்ற லாட்டரி டிக்கெட்டுக்கு விழுந்த பத்து கோடியை அதை வாங்கிய வெற்றியிடம் சேர்ப்பதுதான் முறை என்று அவன் தொலைத்த டிக்கெட்டை அவனிடமே சேர்க்க தூத்துக்குடிக்கு செல்கிறார் கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்கும் முஸ்லிம் பெரியவர் ஹரீஷ் பெரடி... அவர் வெற்றியை கண்டுபிடித்தாரா? பணத்தை ஒப்படைத்தாரா? என்பதுதான் கதை. பரபரப்பான திரைக்கதை, யதார்த்தமான வசனம். படம் முழுக்க ஒட்டுமொத்த சமூகத்தின் பணத்தாசையை, நேர்மையின்மையை தோலுரித்து காட்டும் அழுத்தமான காட்சிகள்... தமிழ் சினிமாவில் முதன்முறையாக உண்மையான தூத்துக்குடி ஸ்லாங்…. ‘பணம் செருப்புக்கு சமானம், உண்மையும் நேர்மையும் தான் உயிரை விட முக்கியம்’ என்று ஹரீஷ் பெரடி, மொத்தப் பணத்தையும் தன் வீட்டு வாசலில் கொட்டி விட்டு, பக்கத்தில் தன் செருப்பையும் கழட்டி விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழையும் இறுதிக் காட்சி நம் ஒவ்வொருவரின் மனசாட்சி. வெற்றி, ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து என அனைவரது நடிப்பும் சிறப்பு. நேர்மையாக வாழும் மனிதன் மதங்களைக் கடந்தவன் என்பதை தன் அதீத நடிப்பாற்றலால் நம் மனதில் அழுத்தமாக பதிய வைத்து விடுகிறார் ஹரீஷ் பெரடி.. படத்தின் ஆன்மா கோவிந்த் வஸந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு உணர்வுபூர்வமானது. ஒலிப்பதிவு அற்புதம்.கிளைமேக்ஸில் ஹீரோ மனம் மாறுவது ஓ.கே., ஆனால் அவன் நண்பர்களும் மனம் திருந்துவது சினிமாத்தனம். எந்த பேங்கில் ஆறு கோடியை கேட்டதும் கேஷாக தருகிறார்கள்? பம்பர் - வின்னர் 3.5 ஸ்டார்.