இரண்டாம் பாகத்தில் நந்தினியும் ஆதித்த கரிகாலனும் தான் ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் இருவரது பிளாஷ் பேக்கில் தான் படம் துவங்குகிறது. விடலை பருவத்தில் அவர்களுக்குள் எப்படி காதல் அரும்பியது? அது எப்படி முறிந்து போனது என்பதை சுறுக்கமாக ஆனால் அழகாக தன் வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அதன்பின் முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து படம் ஆரம்பிக்கிறது... கடலில் மூழ்கிய பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய மந்தாகினி யார்? அவளுக்கும் சுந்தர சோழனுக்கும் என்ன தொடர்பு? நந்தினிக்கும் மந்தாகினிக்கும் என்ன உறவு? தான் உயிருக்குயிராய் காதலித்த ஆதித்த கரிகாலனை நந்தினி ஏன் கொல்லத் துடிக்கிறாள்? இப்படி பல கேள்விகளுக்கான விடைதான் இந்த இரண்டாம் பாகம். நந்தினிக்கும், கரிகாலனுக்குமே முக்கியத்தும் என்பதால் விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் தான் ஸ்கோர் பண்ணுகிறார்கள். ஆனாலும் முதல் பாகத்தில் விக்ரமிடமிருந்த கெத்து, மிடுக்கு இதில் இல்லை. ஐஸ்வர்யா ராய் இரண்டாம் பாகத்தில் இன்னும் அழகாக இருக்கிறார். தன் முன்னாள் காதலி கையால் செத்தாலும் பரவாயில்லை என ஆபத்தை தெரிந்து கொண்டு கடம்பூர் மாளிகைக்கு வரும் விக்ரம் குதிரையில் இருந்தபடியே சதிகாரர்களுக்கு சவால் விடும் காட்சி கூஸ்பம்ப். நீண்ட நாட்களுக்கு பின் தன் காதலி ஐஸ்வர்யா ராயை ரகசிய அறையில் சந்திக்கும் விக்ரம், ‘என் மீது உனக்கு அன்பில்லையா? என்னை நீ நினைக்கவே இல்லையா? உண்மையை சொல்... ’ என்று கேட்டபடியே தன் குத்துவாளை அவரிடம் குடுத்து விட்டு மெல்ல அணைக்கும் காட்சி மணிரத்னம் டச்..தான் யார்? தன் தந்தையார்? அம்மா யார்? என்று அறிந்த பின் உடைந்து அழும் காட்சியில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உச்சம் தொடுகிறார். வந்திய தேவனுக்கும் குந்தவைக்கும்கூட மிகக் குறைவான காட்சிகள் தான். கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் கத்தி முனையில் த்ரிஷாவிடம் கார்த்தி செய்யும் காதல் குறும்புகள் சிலிர்ப்பு. அதை தவிர்த்து நாகப்பட்டினத்தில் அருள்மொழி வர்மனை காப்பாற்றுமிடத்திலும், ஆதித்த கரிகாலனைக் கொன்ற பழியை சுமந்து அரசவையில் சங்கிலியால் கட்டப்பட்டு தலைகுனிந்து நிற்கும் இடத்திலும் கார்த்தி நெகிழ வைக்கிறார். மந்தாகினி பற்றிய ரகசியத்தை சுந்தர சோழனாக வரும் அப்பா பிரகாஷ் ராஜிடம் நறுக்கென கேட்கும் காட்சியில் குந்தவையாக வரும் த்ரிஷா மனதை தொடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு நண்பனாக, அருண்மொழி வர்மனுக்கு எதிரியாக வரும் விக்ரம் பிரபு வெளுத்து கட்டுகிறார். ஐஸ்வர்யா ராயிடம் அவர் வழியும் இடமும், அதை விக்ரம் கண்டுபிடித்து கேட்கும் இடத்தில் நெளிவதும் தரமான சம்பவம். சோழப் பேரரசை சீர்குலைக்கவும், அருண்மொழிவர்மனை போட்டுத்தள்ளவும் பாண்டிய ஒற்றர்களும், சிற்றரசர்களும் செய்யும் சதி எல்லாம் லோக்கல் ரவுடிகளின் ஏரியா சண்டை மாதிரிதான் இருக்கிறது. ஆதித்த கரிகாலன் இறந்த பிறகு நடக்கும் மாபெரும் யுத்தம் சம்பிரதாயம். பிரமாண்டமாகவும் இல்லை, உணர்ச்சிகரமாகவும் இல்லை. .சோழப் பேரரசை இரண்டாகப் பிரிக்க நினைத்தவர்கள் எல்லாம் கடைசியில் ஒன்றாக சேர்ந்து போரிடுவதெல்லாம் அரசியல் கட்சிகளின் தேர்தல் கூடணி போல் காமெடியாகத்தான் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பல இடங்களில் பக்தி பழரசமாக மாறி சோதிக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே முழுமையாக இல்லாமல் ஏதோ ஒட்டு வேலை செய்தது போலவே தெரிகிறது. மொத்தத்தில் இரண்டாம் பாகம், படம் பார்த்த நிறைவை விட, கதை கேட்ட உணர்வையே தருகிறது. பி.எஸ். 2 – கூர்மை போதவில்லை 3 ஸ்டார்