-இளையரவிப்ளஸ் 2க்கு மேல படிக்க முடியல... அல்லது, நிறைய படிச்சும் சரியான வேலை கிடைக்கலைன்னு கவலைப்படுபவர்கள் நாலு காசு பார்க்க என்ன தான் வழி? பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமலே நிரந்தர வருமானம் பார்க்க பல வழிகள் இருக்கிறது என்கிறார் பங்குச்சந்தை முதலீடுகளுக்கான ஆலோசகர், ஃபைனான்சியல் கன்சல்டண்ட் எஸ். சுப்பிரமணி... .“பங்குச்சந்தையில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பது, இழப்பது என்கிற இந்த எக்ஸ்ட்ரீமான இரண்டு விஷயங்களைப் பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை; ஏன்னா நம்மமகிட்ட அவ்வளவு காசு இல்லை... ஆனா பங்குச்சந்தை பற்றி தெரிஞ்சுக்கணும், அதையே ஒரு கேரியரா மாத்திக்கணும்னு ஆர்வம், உழைப்பு இரண்டு மட்டும் இருந்தால் போதும் பணமில்லாவிட்டாலும் படிப்படியாக மேல வரலாம்... பங்குச்சந்தை நுட்பங்களை தெரிந்து கொண்டு, முகவர்களாக, தரகர்களாக, ஆலோசகர்களாக அல்லது அவர்களுக்கு உதவியாளர்களாக வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு நிரந்தர வருவாயை தேடிக்கொள்ளலாம். அதற்காக நீட், சிவில் சர்வீஸ் தேர்வு மாதிரி கஷ்டப்பட்டெல்ல்லாம் படிக்க வேண்டாம், படிப்பதற்கு பெருசா ஒண்ணும் செலவும் செய்ய வேண்டாம்..நீங்க ஒரு காமர்ஸ் கிராஜுவேட்டா இருந்தா கொஞ்சம் சுலமபா இருக்கும். ஆனால், இன்ஜினியரிங் படித்தவர்கள் நிறையபேர் இப்போது இந்த துறைக்கு வருகிறார்கள், வெற்றிகரமாகவும் செயல்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, பிளஸ் டூ ல காமர்ஸ் குரூப் படிச்சிட்டு படிப்பை தொடர முடியாமல் ஆனால், பிரைட்டாவும், நல்ல பிஸ்னஸ் மைண்டோடயும் சிலர் இருப்பாங்க... அவங்க கூட இந்தத் துறைக்குள் ஈஸியா வரலாம். அவங்களுக்கு 18 வயது முடிந்திருந்தால் போதும். உங்களுக்காக ‘நேஷனல் இன்ஸ்டிடுயூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்கெடிங்’ இனையயதளமான, ‘என். ஐ. எஸ்.எம்.’மில் நிறைய கோர்ஸஸ் ஆஃப்ர் பண்றாங்க... நீங்க மியூச்சுவல் பண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் ஆகணும்னா அதுக்குன்னு சில சர்டிஃபிகேட் கோர்சஸ் உள்ளது. அதுக்கு பேர், ‘என் ஐ. எஸ். எம். சி.டி. எஸ். 5a’. அதை படிப்பதற்கு என்.ஐ.எஸ்.எம்.ல ரிஜிஸ்டர் பண்ண வேண்டும். ஆன் லைன்ல தான் எக்ஸாம் நடக்கும். அதில் பாஸ் பண்ணியதும், என்.எஸ். டி.எல்.சைட் ல உங்க பேர் ரெஜிஸ்டர் ஆயிடும். .அதுக்கப்புறம் நீங்க என்ன பண்ணனும்னா, ஏ.எம். எஃப்.ஐ. அதாவது 'அசோஷியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட் இன் இண்டியா'வுல நீங்க மெம்பர் ஆகணும். ஆனதும் ஏ.ஆர்.என். நம்பர் குடுப்பாங்க... இதெல்லாம் நீங்க வாங்கிட்டீங்கன்னா, மியூச்சுவல் ஃபண்ட் சம்மந்தமான ஆலோசனைகளை வழங்குவதற்கு அதிகாரபூர்வமாக நீங்கள் தயாரகி விட்டீர்கள்னு அர்த்தம். அப்படி ஆனதுமே உங்களுக்கு ஆஃபர்லாம் வர ஆரம்பிச்சுடும். குறிப்பா வங்கித் துறை சார்ந்த நிறைய ஃபண்ட் மேனேஜர்ஸ் இருக்காங்க, அவங்க தங்கள் புராடக்டை புரமோட் பண்ண டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தேடுவாங்க. அதற்கு அவங்க இந்த மாதிரி ரெஜிஸ்டர்ட் புரோகர்ஸ்சைதான் பார்ப்பாங்க. .அது தவிர தனியாகவும் நீங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். சிம்பிள் இன்வெஸ்ட்மெண்ட் பிளான், சுறுக்கமா ‘SIP’ னு சொல்லுவோம். அதாவது மாதா மாதம் ஒரு ஆயிரம் ரெண்டாயிரம்னு சேமிக்கிற நினைக்கிறவங்களுக்கான திட்டம். அது பற்றில்லாம் நீங்க படிச்ச கோர்ஸ்ல சொல்லி குடுத்துருப்பாங்க. அதை நீங்க உங்களிடம் ஆலோசனைகளுக்காக வருபவர்களுக்கு சிபாரிசு பண்ணலாம். நீங்க சிபாரிசுபண்ற புராடக்டோட கம்பெனியே உங்களுக்கு ஒரு கமிஷன் குடுக்கும். பெரும்பாலும் குழதைகளோட படிப்பு, கல்யாணம்னு ஒரு பத்து வருஷத்துக்கு மாதாமாதம் ஒரு தொகையை முதலீடு செய்ய நினைக்கிறவங்க என்ன எதிர்பார்ப்பாங்கன்னா, பேங்க் வட்டியவிட அதிகமா இருக்கணும், ரிஸ்கும் இல்லாம இருக்கணும்... அதை நீங்கள் சரியா செய்தால் உங்க கஸ்டமர் பேஸ் பெருசாகும், நிறைய கம்பெனிகளும் தேடி வருவாங்க, வருமானமும் அதிகமாகும். அதுக்கு நீங்க மார்கெட் பற்றின நாலெட்ஜை தொடர்ந்து வளர்த்துக்கணும். .ஒரு நூறு சுமாரான கிளையண்ட், கூடவே நிறையா இன்வெஸ்ட் பண்ற நாலைந்து கிளையண்ட் கிடைச்சிட்டாலே மாசாமாசம் 30 ஆயிரத்துலருந்து 50 ஆயிரம் வரை உக்கார்ந்த இடத்துல சம்பாதிச்சிரலாம். இதுவரைக்கும் நாம சொன்னது மியூச்சுவல் ஃப்ண்ட் கன்சல்டேஷன் அண்ட் புரமோஷன் மூலம் நிலையான வருமானம் தேடிக்கொள்றது எப்படிங்கிறது... இது தவிர நிறைய பெரிய பெரிய புரோக்கரேஜ் நிறுவனங்கள்லாம் இருக்கு, அவங்ககிட்ட நீங்க சப் புரோக்கர் ஆகலாம். அதுக்கு என்ன செய்யணும்னா, அதுக்குன்னே என்.ஐ.எஸ்.எம்.ல இருக்கிற சர்டிஃபிகேட் கோர்ஸை நீங்க முடிச்சிருக்கணும். நீங்க கமாடிட்டி தொடர்பான புரோக்ரேஜ் செய்ய நினைத்தால் அதுக்கு என் ஐ. எஸ். எம். சி.டி. எஸ். xvi’ சர்டிஃபிகேட் முடிச்சிருக்கணும். அதேமாதிரி ஈக்விட்டி, கரன்சி, செக்யூரிட்டி என ஒவ்வொன்று தொடர்பாகவும் பல சர்டிஃபிகேட் கோர்ஸ் உள்ளது. அதுபோக இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர் லெவல் ஒன், லெவல் டூ என மொத்தம் 30 சர்டிஃபிகேட் கோர்ஸ் உள்ளது. உங்களுக்கு எது சரியானது என்பதை நீங்கள் தான் முடிவு பண்ணனும். அதுக்கு கைட் பண்ண, கோச்சிங் குடுக்க நிறையா இன்ஸ்டிடியூட் இருக்கு,என்.எஸ்.இ. - ‘நேஷனல் ஸ்டாக் அகாடமி அகாடமி’ன்னும் ஒண்ணு இருக்கு. அங்க உங்களுக்கு சிஸ்டத்துல உக்கார்ந்து ஒரு ஷேரை எப்படி வாங்குறது, விக்குறதுன்னுலாம் கோச்சிங் குடுப்பாங்க. கொஞ்சம் ஜெனரல் நாலேட்ஜ் இருந்தால் எந்த கோச்சிங்குக்கும் போகமலே கூட பாஸ் பண்ணிறலாம்..பாஸ்பண்ணியதும் நீங்கள் சப் புரோக்கராக பணிபுரிய நினைக்கும் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டியதிருக்கும், அதை அவர்களே செய்து குடுப்பார்கள். அந்த ஒப்பந்தம் போடப்பட்டதும் நீங்கள் அந்த நிறுவனத்தின் ஏ.பி. - அதாவது ஆதரைஸ்டு பெர்சன் ஆகி விடுவீர்கள். அதன் மூலம் கிளையண்ட்களுக்கு சர்வீஸ் பண்ண அவர்களின் சர்வரை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருவார்கள். இதற்கு ரூ. 50,000 டெபாசிட், 20,000 ஜாயினிங் ஃபீஸ் செலுத்த வேண்டும். டெபாசிட் பணத்தை வேண்டும் பொழுது திருப்பப் பெறலாம். பணம் கட்டிய பின் அவர்கள் பிராக்டிகலாக தரும் பயிற்சிகள் நமக்கு பின்னாளில் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். இதற்கு வசதி இல்லையென்றால் ஊதியம் மற்றும் கமிஷன் அடிப்படையில் பணிக்கும் சேர்த்துக்க் கொள்வார்கள். ஆனால் இந்தப் பணத்தைக் கட்டி நாம் தனித்து செயல்படுவதே தான் நமது வேகமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். படிப்பில் சுமாராக இருக்கும் பல மேல் தட்டு மக்களின் வாரிசுகள் சைலண்டாக இந்த ரூட்டில் போய் நன்றாக சம்பாத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டு பிள்ளைகள் தான் இதை என்னமோ பேய், பூதம் போல் நினைத்து பயந்து ஒதுங்கி, குறைந்த சம்பளத்தில் நிறைய சங்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.” என்கிறார் எஸ். சுப்பிரமணி.