உலகம்வலது இடதாகப்பிரிந்திருக்கிறபோது இந்தியாவும்தமிழகமும்மேல்பாதிகீழ்பாதியாகப்பிரிந்திருக்கிறது இதில் ஒருவர்நடுப்பாதியில் நிற்பதுஅறமாகாது மகாபாரதத்தில்அர்ச்சுனன் வென்றதுஒரு பெண்ணை இது தெரியாமல்'ஐவரும் சமமாகப்பிரித்துக் கொள்ளுங்கள்!'என்றாள் குந்தி குந்தியின் பிள்ளையேகர்ணனும்.தேரோட்டி மகனென்பதால்பாஞ்சாலியின் சுயம்வரத்தில்கலந்துகொள்ள முடியவில்லை ஆனாலும் போர்க்களத்தில்கர்ணன் இறந்தபோதுஇரண்டுபேர்கண்ணீர் விட்டார்கள் ஒருவன் துரியோதனன்மற்றொருத்திதிரௌபதி பாண்டவர் போலவே அவளைச்சொந்தம் கொண்டாடகர்ணனுக்கும்உரிமையிருந்தது இது திரேதாயுகமில்லை.2 கே யுகம் நாம் பாண்டவர்களோகௌரவர்களோ அல்லர் உழுகுடிகள்தமிழர்கள் நம் தாத்தாவும் பாட்டியும்எப்படி பாடப் புத்தகங்களைப் பார்த்ததில்லையோ அப்படிதான்நம் கிராமத்துதிரௌபதியம்மன் வேதமோ கீதையோவாசிக்காத அப்பாவி தெய்வம் புழுதி பறக்கும் வீதிகளில்நீர் தெளித்து கோலமிழைக்கவற்றிய கன்னமுடையஅம்மாக்கள் அத்தைகள்கொஞ்சம் பவுடர் பூசிசாந்துப் பொட்டுவைத்துக் கொள்ள.வெறும் பொறித்த அரிசியைதின்ற குழந்தைகள்வெல்லமும் பச்சரிசி மாவும் கலந்த மாவிளக்குகளை சுவைக்க ஒளியறியாத சிற்றில்களில்சிறிய நல்லவிளக்குகளை ஏற்றதேரேறியல்லஎளியோரின் தோளேறிவீதிக்கு வந்த தெய்வம் நம்மிடம்கலப்பைமண்வெட்டிகடப்பாறைமட்டுமே இருக்கிறது நாம் கும்பிடும்திரௌபதியிடமும்ஒரு துருவேறியசூலம்தான் இருக்கிறது மழை பொய்த்துசம்பா பட்டம் பதராபோது.'தெய்வமே கண்ணில்லையா?'உரிமையாய்த் திட்டியதைபொறுமையாய்க் கேட்டவள் களைபறித்த அழுக்கோடுஆலயம் வந்தஅஞ்சலை மேலேறிசாதி பார்க்காமல்அருள் சொன்னவள் மலர்களை அல்லநம் கண்ணீரைத் தூவிவழிபட்ட தெய்வமவள் அவள் ஆலயத்தில்தொங்கும் பூட்டைஅரசியல் வாதிகள்ஆட்டட்டும் திரௌபதியாருக்கு சொந்தம்? அற மன்றம்என்ன சொல்லுமோதெரியாது தமிழன்னைஎன்ன கூறுகிறாள்? கேட்டேன் அன்று குந்திசொன்னதுதான் 'தமிழர் அனைவர்க்கும்சொந்தம்!'- கரிகாலன்