பூமி வேகம்கொண்டு சுற்றிய பின்மயங்கி விழுவதைப்பார்த்தபின்பு எழுகிறதுபம்பரத்தின் தலையில் இருந்துஎறும்பு! என் பூட்டன் பருகியஇரட்டைக்குவளையின்விளிம்பு தேநீர் துளியை பருகியஅதே எறும்பு ஒட்டுமொத்த ஊரும் பருகும்சர்க்கரை கிண்ணத்தில்இனித்தபடி நின்று சிரிக்கிறது! துளி நீர்கூட ஊற்றாதவனின் வீடருகேபட்டமரம் துளிர்விடுவதை காணாதுதன்னம்பிக்கை புத்தகம்வாசித்துக்கொண்டிருக்கிறான்! கடல்நீருக்கும் மழைநீருக்கும் இடையேஉப்பை சுவைத்தபடி பறக்கிறதுபறவை! ஓடும் மழைநீரின்காகிதக் கப்பலையும்நீரின் பிம்பத்தில் மிதந்து செல்லும்விமானத்தையும் முந்துகிறதுஇலையில் மிதந்தபடிசெல்லும் எறும்பு! அளவுகோல்எடைமெஷின்எடைக்கல் . இன்னும் பலவற்றைத்தூக்கியெறிந்துவிட்டுமனிதர்களை சந்தியுங்கள்நம்மிடம் கட்டியணைக்ககைகள் மட்டுமே உள்ளன! ஓடும் மழைநீரில் தான்விட்ட காகிதக் கப்பலினுள் செல்லும்கூடிழந்த எறும்பின் பயணத்தைரசித்தப்படி நிற்கும்வீட்டை இழந்த குழந்தை! மாநகரத் தெருக்களில்புதைந்த கிராமத்தைகுப்பைமேனி கீழாநெல்லிஅறுகம்புல் பிடுங்கிச்செல்வதன் மூலம்கண்டடைகிறார்அப்பா! - முருகு