- சுரேஷ் கண்ணன்நகைச்சுவைக் கலைஞனாக கொண்டாடப்படும் வடிவேலுவின் பிம்பத்தை முற்றிலுமாக அழித்து முழுநீள குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்த படம், உதயநிதியின் கடைசிப் படம் போன்ற அடையாளங்களுடன் வெளியாகியிருக்கிறது, ‘மாமன்னன்’..தன்னுடைய வழக்கமான பாணியில், ஓர் அழுத்தமான அரசியல் திரைப்படத்தை தர முயன்றிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா?சேலம், காசிபுரம் தனித் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாமன்னன். (வடிவேலு). ஆனால் உட்கட்சி ஆதிக்க சக்திகள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாமன்னனை சாதிய ரீதியாக கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன.அவருடையமகன்அதிவீரன். (உதயநிதி). சுயமரியாதையும்போர்க்குணமும்கொண்டவன். அடிமுறைப்பயிற்சியைகற்றுத்தரும்ஆசானாகஇருக்கிறான். தந்தையின்நிதானமும்அடிமைத்தனமும்அதிவீரனை கோபப்படுத்துகிறது. எனவேஅவரிடமிருந்துவிலகிநிற்கிறான்..அதிவீரனின் கல்லூரித் தோழி லீலா. (கீர்த்தி சுரேஷ்). ஆதிக்க சாதியை சேர்ந்தவர். இலவச கல்விப் பயிற்சி அளிப்பதின் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவுகிறாள். கல்வியை வணிமாக்கி லாபம் பார்ப்பவர்களுக்கு லீலாவின் செயல் இடையூறாக இருக்கிறது. அடியாட்களை வைத்து அவரின் கல்வி நிலையத்தை அடித்து தூள் தூளாக்குகிறார்கள். இதனால் கோபம் கொள்ளும் அதிவீரன், ஆதிக்க சாதி அரசியல்வாதியின் இடத்தில் புகுந்து பதில் தாக்குதல் நடத்துகிறான்.இந்த விஷயம் ரத்னவேலுக்கு (பகத் பாசில்) தெரிய வருகிறது. வடிவேலு இருக்கும் அதே ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் ரத்னவேல் கல்வி நிலையப் பஞ்சாயத்து தொடர்பாக பேசுவதற்காக மாமன்னனையும் அதிவீரனையும் அழைக்கிறான். அங்கு தன்னுடைய தந்தை அவமதிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுகிறான் அதிவீரன். ரத்னவேலையும் அவனுடைய ஆட்களையும் தாக்குகிறான்..அவனுக்கும் அதிவீரனுக்குமான விரோதம் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் அடுத்த சட்டசபைத் தேர்தல் வருகிறது. ‘மாமன்னனை ஜெயிக்க விட மாட்டேன். அவரையும் அதிவீரனையும் மீண்டும் அடிமையாக்கி அழித்தொழிப்பேன்’ என்று சபதம் எடுக்கிறான் ரத்னவேல்.இந்த ரணகளமான அரசியல் போராட்டத்தில் மாமன்னனும் அதிவீரனும் கைகோர்த்து விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகளோடும் அட்டகாசமான கிளைமாக்ஸோடும் படம் நிறைகிறது.மாமன்னனாக வடிவேலு. இதுவரை நாம் பார்த்திருந்த நகைச்சுவை நடிகரின் சாயல் துளி கூட இல்லாமல் முற்றிலுமாக மாறி வேறுவகையான அவதாரம் எடுத்திருக்கிறார். சாதிய வெறியர்களால், தன் சமூகத்து பிள்ளைகள் அநியாயமாக கொலை செய்யப்படும் சம்பவத்தில், ‘தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே’ என்று ஓரமாகச் சென்று அழும் காட்சியில் மனதைக் கலங்கடித்து விடுகிறார். தன் மகனுக்கு முன்னால் நிகழும் அவமதிப்பு காட்சியில் ‘வேணாம்டா வேலு’ என்று பகத் பாசிலிடம் உருக்கமாக பேசும் காட்சி, ‘நான் தூக்கி வளர்த்தவன்டா நீ’ என்று இன்னொரு காட்சியில் ஆவேசத்துடன் துப்பாக்கியை நீட்டுவது, ‘மக்கள் எனக்குத் தந்த உரிமையை பயன்படுத்தாம விட்டுட்டேன்’ என்று குமுறுவது என படம் முழுவதும் நுட்பமான நடிப்பைத் தந்து அசத்தியிருக்கிறார் வடிவேலு..சுயமரியாதையும் தார்மீகக் கோபமும் கொண்ட இளைஞனின் பாத்திரத்தில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளார் உதயநிதி. தன்னால் இயன்ற அளவு சிறப்பாகவே நடித்துள்ளார். ஒரே கட்சியில் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மலினமாக நடத்தும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இந்த அரசியலைப் பேசும் படம் என்றாலும் சுயவிமர்சன நோக்கோடு இதில் நடிக்கத் துணிந்த உதயநிதியை நிச்சயம் பாராட்ட வேண்டும். வடிவேலு, உதயநிதி உட்பட பல நடிகர்கள் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அனைவரையும் அநாயசமாக ஓவர்டேக் செய்து டாப்கியரில் சென்றிருப்பவர் பகத் பாசில் மட்டுமே. ஓட்டப் பந்தயத்தில் தோற்கிற நாயை கொல்வது வழக்கமான வில்லத்தனமாக இருந்தாலும் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்தின் கொடூரத்தன்மையை ஆரம்பத்திலேயே உணர்த்தி விடுகிறார். ‘யாரு சொன்னாலும் அவரு உக்கார மாட்டாரு தம்பி’ என்று உதயநிதியிடம் சொல்வது உள்ளிட்ட பல காட்சிகளில் பகத் பாசிலின் கண்களும் உடல்மொழியும் கனகச்சிதமாக நடித்திருக்கின்றன..தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக, சுயசாதியினரின் காலில் விழுவது, பின்பு அவர்களில் ஒருவரையே அரசியல் லாபத்திற்காக சாகடிப்பது, அண்ணா.. அண்ணா என்று இனிமையாக அழைத்தாலும் வடிவேலுவை தன் முன்னால் நிற்க வைத்து வேடிக்கை பார்ப்பது.. என்று தன்னுடைய அசாதாரண நடிப்பின் வழியாக ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பகத் பாசில்.நாயகியாக கீர்த்தி சுரேஷ். சில காட்சிகளில் மட்டுமே வந்து அளவான நடிப்பைத் தந்திருக்கிறார். இன்னமும் கூட சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். சீனியர் அரசியல்வாதி கேரக்ட்டரில் இன்னமும் எத்தனை படங்களில் அழகம்பெருமாள் வருவாரோ? ஆனால் சிறிய காட்சியாக இருந்தாலும் ‘நச்’சென்று பொருந்தியிருக்கிறார். ஒரு சமநிலையான முதலமைச்சர் பாத்திரத்தை லால் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். ஆட்கள் வீட்டைச் சூழ்ந்து தாக்கும் காட்சியில் தனக்கு ஏற்படும் பதட்டத்தை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் மீனா கைலாசம். ‘மாமன்னனின்’ இடைவேளைக் காட்சியும் உச்சக்காட்சியும் அரங்கில் பலத்த கைத்தட்டலைப் பெறுகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், சபாநாயகராக சட்டசபைக்குள் நுழையும் போது முதலமைச்சர் உட்பட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.. "உங்கப்பன நிக்க வைச்சது என்னோட அடையாளம், உன்னை உக்கார வைக்கிறது என்னோட அரசியல்" என்று ஒரு காட்சியில் ஆவேச வசனம் பேசுவார் பகத். இதற்குப் பதில் சொல்லும் விதமாக, ‘நீ உக்காருப்பா.. எந்திருக்காத..’ என்று உதயநிதி சண்டை போடும் காட்சியில் அனல் பறக்கிறது.முதலமைச்சரின் முன்னால் தன் தந்தை அமர்ந்திருப்பாரா, இல்லையா என்று உதயநிதி பதட்டப்படும் இன்னொரு காட்சியும் முக்கியமானது. ‘அமர இடம் தரப்படாமல் நிற்க வைக்கப்படுபவனின் மன வலியை’ படம் முழுவதும் ஆத்மார்த்தமாக பேசியிருக்கிறார் இயக்குநர்.எளியசமூகத்தினருக்குஇடையேதிட்டமிட்டுஉருவாக்கப்படும்பிரிவினைவாதஅரசியலும்படத்தில்பேசப்பட்டுள்ளது. ‘ஜெயிக்கறநாய்நம்மகிட்டவாலாட்டிக்கிட்டேஇருக்கணும், தோக்கறநாய்நம்மைப்பார்த்துஏங்கிக்கிட்டுஇருக்கணும்’ என்றுபகத்பேசும்வசனம்இதற்குசரியானஉதாரணம். .நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் மட்டுமே வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படும் சூழலில், பன்றிக்குட்டியை திரையில் இத்தனை அழகாக மாரி செல்வராஜ் காட்டியிருப்பது திரையில் புதுவிதமான அழகியகியலின் துவக்கம். ரத்தக்களறியாக கிடக்கும் பன்றிகளின் உடல்களுக்கு நடுவே, ஓர் அழகான பன்றிக்குட்டி எழுந்து நடந்து வருவது அற்புதமான காட்சி.பன்றியையும் வேட்டை நாயையும் எதிரெதிர் உருவகங்களாகப் பயன்படுத்தி ஆதிக்க மற்றும் ஒடுக்கப்பட்ட அரசியலை பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ரஹ்மானின் பாடல்கள் அருமை. குறிப்பாக பின்னணியில் ரகளை செய்திருக்கிறார். காட்சிகளின் ஒட்டுமொத்த உணர்வையும் பல படிகளுக்கு உயர்த்தியிருக்கிறது, அட்டகாசமான பின்னணி இசை. யுகபாரதியின் பாடல் வரிகள் உயிர்ப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன. தேனி ஈஸ்வரின் அற்புதமான ஒளிப்பதிவும் செல்வாவின் எடிட்டிங்கும் படத்திற்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன. தான் பேச விரும்பிய அரசியலை மிகச் சரியாகவே பேசி, ஓர் அழுத்தமான அரசியல் திரைப்படத்தைத் தந்திருக்கும் நோக்கத்தில் மாரி செல்வராஜ் வெற்றி பெற்றிருக்கிறார். பெயரில் மட்டும் ‘சமூகநீதி’யை வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், அதை நடைமுறையில் உண்மையிலேயே செயல்படுத்துகிறதா என்கிற ஆழமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் மாரி செல்வராஜ்.புத்தர்மற்றும்பெரியார்சிலை, அம்பேத்கர்படம், குதிரை, அய்யாவழிசமயம்போன்றஅரசியல்குறியீடுகள்படத்திற்குள்கணிசமாகபயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால்ஒருகட்டத்தில்இவைஓவர்டோஸாகிஅயர்ச்சியைஏற்படுத்துகின்றன.முதல்பாதி பரபரப்பாகநகர்ந்தாலும், எவ்விதசுவாரசியத்தையும்ஏற்படுத்தமுடியாமல்இரண்டாம்பாதிவழக்கமானகாட்சிகளால்தேங்கிப்போகிறது. இதுபோன்றவிபத்துக்களைத்தவிர்த்திருந்தால் ‘மாமன்னன்’ உண்மையிலேயேஅதற்கானஉயரத்தைஅடைந்திருக்கும்.