-பீட்டர் ரெமிஜியஸ்தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிவரும் சாக்கோ லாவா,தான்யாஹோப்!தமிழில் ஏற்கெனவே ‘தடம்’, ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்களில் தாராளமாகவே நடித்து தமிழ் ரசிகர்களைகிறங் கடித்தவர். தற்போது, சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள ‘கிக்’ படத்தில் ரசிகர்களை சொக்க வைக்கும் கிக்கான கேரக்டரில் நடித்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் சொன்ன இடத்தில் சரியான நேரத்தில் சந்தித்தோம்..‘கிக்’ படத்தில் சந்தானத்துடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? “தமிழ்ல எனக்கு இது முதல் காமெடி படம். காமெடியில கில்லினா அது சந்தானம் தான். அவர் கூடவே சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதை விட பெரியலக்…ஸாரிகிக் என்ன இருக்கும் சொல்லுங்க. சந்தானம் கிட்ட பயங்கரமான டைமிங்சென்ஸ், நடிப்பு, டயலாக் டெலிவரி எல்லாமே செம்மயா இருக்கும். அவர் கூட நடிக்குறப்ப அவருக்குத் தெரியாமலே அவர்கிட்டேர்ந்து நிறைய விஷயங்களை நான் கத்துக்கிட்டேன்!”.உங்களுக்கு சந்தானம் என்னவா நடிச்சா ரொம்பப் பிடிக்கும்? ஹீரோ அல்லது காமெடியன் ? “காமெடி ஹீரோ” (சாமார்த்தியமாக பதில் சொல்லிவிட்டு கொஞ்சலாக சிரிக்கிறார்)கிக் - தலைப்பேஒருகிக்காஇருக்கே, படம்எப்படிஇருக்கும்?“இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆடியன்ஸ் பயங்கரமா சிரிச்சு, என்ஜாய் பண்ணுவாங்க. ரெண்டு முக்கியமான கேரக்டர்ஸுக்குள்ள நடக்கிற போட்டி தான் கதை. அதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது. நீங்க படம் பாருங்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்!”.இந்தப் படம் முழுக்க தாய்லாந்துல தான் ஷூட் பண்ணதாச் சொல்றாங்க... அங்க நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லுங்களேன்..? “அங்கே நான் நிறைய பீச் தான் பார்த்தேன். ஷூட்டிங் ஸ்பாட், பீச் இது ரெண்டும் தவிர வேற எங்கேயும் போகலை.”.சந்தானம் , மத்தவங்கள்லாம் வேற இடங்களுக்குப் போனாங்களா? “அதுஎனக்குத்தெரியாதே...” (குறும்பாக சிரித்தே காட்டிக் கொடுத்து விட்டார்) தமிழ் நல்லா பேசுவீங்களா? ஷூட்டிங்ல டயலாக் பேச கஷ்டப்படுவீங்களா? “எனக்கு தமிழ் தெரியும். நல்லாவே பேசுவேன். ஆனா, படிக்கத்தான் தெரியாது. டயலாக்ஸ் தங்கிலீஷ்ல எழுதிதரச் சொல்லிப் பேசுவேன்.”நாம நடிக்கிறது ரசிகர்களுக்கு பிடிக்குமா?பிடிக்காதான்னு யோசிச்சிருக்கீங்களா? “அதை பத்தி நான் அதிகம் யோசிச்சது இல்ல.( தயாரிப்பாளர் தான் யோசிக்கணும். இது நம்ம மைண்ட் வாய்ஸ்) எந்த வகை படமா இருந்தாலும் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, நல்லா நடிச்சோம்னா மக்கள் கண்டிப்பா ஏத்துப்பாங்க. நாம செய்ய வேண்டியது எல்லாம் நம்ம வேலைக்கு நேர்மையா இருக்க வேண்டியது மட்டும் தான்!”.தான்யாவுக்கு எப்படி ப்ரொ போஸ் பண்ணா…பிடிக்கும்? “தெரியலயே... (வெட்கத்தோடு சிரித்துவிட்டு யோசிக்கிறார்...)சினிமால வர்ற மாதிரி ஏதேதோ பண்ணிஷோ-ஆஃப் எல்லாம் வேணாம். சிம்பிள் அண்ட் ஹானஸ்ட்டாப்ரொபோஸ் பண்ணாலே போதும்.”தமிழ் சினிமாவுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர் யார்? “தளபதி விஜய் சார் ரொம்ப பிடிக்கும். அவரோட ஸ்க்ரீன் பிரசன்ஸ் வேற லெவல்ல இருக்கும். அவர் ஸ்க்ரீன்ல இருக்கும் போது வேற எங்கேயும் பார்க்கத் தோணாது.” சினிமால நடிக்க வந்ததுக்கு என்ன காரணம்? “தெலுங்குல முதல் படம் பண்ணப்போ, என்னால இயல்பா ஒரு ஃப்ளோவுல இயல்பா நடிக்க முடியுதுன்னு தெரிஞ்சது. அதுக்கு அப்புறம் தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். நடிப்பு தான் எனக்கு திருப்திச ந்தோஷம் எல்லாமே தருது!”