தொலைக்காட்சியில் தோன்றி நம்மை ரசிக்கவைத்தவர் ரக்ஷன். அதுவும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. துல்கர் சல்மான் நண்பனாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்தவர், தற்போது ஹீரோவாக களம் இறங்குகிறார். ரக்ஷனை வைத்து ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தை இயக்கியுள்ள யோகேந்திரனிடம் பேசினோம்....படத்தோட கதை என்ன? "இதுவரைக்கும் நிறைய ஸ்கூல் ரீ யூனியன் படங்கள் பார்த்துருப்பீங்க. வருஷத்துக்கு ஒருமுறை ஸ்கூல்ல எல்லாரும் ஒண்ணா கூடி விழா மாதிரி நடக்கும். ஆனா, இந்தப் படம் அதுல இருந்து ரொம்பவே வித்தியாசப்படும். எப்படின்னா, 10 வருஷத்துக்கு முன்னாடி அந்த ஸ்கூல்ல படிச்ச மாணவர்கள், நீதிமன்ற தீர்ப்புனால மறுபடியும் அந்த ஸ்கூலுக்கே வந்து படிக்கக்கூடிய அசாதாரணமான சூழ்நிலை உருவாகுது. எல்லாரும் வேலைக்குப் போன பிறகு, சிலருக்கு கல்யாணமும் ஆனபிறகு திரும்ப ஸ்கூலுக்குப் போய் படிக்கச்சொன்னா... வெறுப்பாத்தானே இருக்கும். அப்படி வெறுப்புல ஸ்கூலுக்கு வர்ற ஒரு கிளாஸ் ஸ்டூடன்ஸுக்கு, வெறுப்பு மறைஞ்சு மறுபடியும் டீன் ஏஜுக்கு எப்படி திரும்புறாங்க அப்படிங்கிறதுதான் இந்தப் படத்தின் கதை.".படம் பார்க்குறவங்களுக்கு என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும்? "1990ல பொறந்தவங்க 2008ல ப்ளஸ் 2 எக்ஸாம் எழுதிருப்பாங்க. 10 வருஷம் கழிச்சு 2018ல எக்ஸாம் எழுத வரும்போது, அவங்க மனநிலை எப்படி இருக்கும், வந்த பிறகு அவங்க மனநிலை எப்படி மாறுதுன்னு கதை இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்துல கதை நடக்குது. பெரும்பாலும், படிச்சு முடிச்சதும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வேலைக்குப் போயிடுவாங்க. மறுபடியும் சிறு நகரத்துக்கு வரும்போது அவங்களோட லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கும் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களையும் இந்தப் படத்துல சொல்லியிருக்கோம். சேர்ந்த காதல், சேராத காதல், புதிதாக உருவாகும் காதல், சண்டை போட்டுப் பிரிந்த நட்பு, மறுபடியும் சேர்ந்த நட்புன்னு நிறைய விஷயங்கள் இருக்கும்.”.‘மறக்குமா நெஞ்சம்’னு படத்துக்கு தலைப்பு வைக்க என்ன காரணம்? “ஆரம்பத்துல டம்மியா வேற ஒரு டைட்டில் வெச்சு தான் ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். ஒருநாள் பாடலாசிரியர் தாமரை அக்கா கால் பண்ணி, ‘நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி’னு தலைப்பு வைக்கலாம்னு சொன்னாங்க. அந்த சமயத்துல நான் ஃப்ளைட்ல இருந்தேன். “ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகப்போது, நான் இறங்கிட்டு கூப்பிடுறேன்”னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டேன். ஃப்ளைட் ட்ராவல் முழுக்க எனக்கு அந்தப் பாட்டு மட்டும் தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. ஃப்ளைட்ல இருந்து இறங்குனதும் தாமரை அக்காவுக்கு கால் பண்ணி, “அந்தப் பாட்டு ‘மறக்குமா நெஞ்சம்’னுதானே ஆரம்பிக்கும். அதையே தலைப்பா வெச்சிடலாம்”னு சொன்னேன். “இன்னுமா அந்த டைட்டிலை விட்டு வெச்சிருக்கப் போறாங்க?”னு தாமரை அக்கா கேட்டாங்க. ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு முடிவு பண்ணி, சென்னை வந்ததும் முதல் வேலையா டைட்டில் இருக்கான்னு செக் பண்ணேன். யாருமே ரெஜிஸ்டர் பண்ணாமத்தான் இருந்துச்சு. உடனே, நான் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்.”.ஹீரோவா ரக்ஷனுக்கு முதல் படம். எப்படி பண்ணிருக்கார்? “ரக்ஷனுக்குனு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. ரொம்ப சார்மிங்கான நடிகர் அவர். ஸ்கூல் ரீ யூனியன்னு சொன்னா, கண்டிப்பா ஒரு கேங் இருக்கும். அப்படின்னா, ஹீரோவைத் தாண்டி இன்னும் சில பேருக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனா, நான் கதை சொன்ன சில நடிகர்கள் அதை விரும்பலை. ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்குற மாதிரி கதைய மாத்த சொன்னாங்க. ஆனா, ‘கதை ரொம்பப் பிடிச்சிருக்கு, நான் பண்றேன்’னு ரக்ஷன் மட்டும்தான் சொன்னார். சொன்னது மட்டுமில்லாம, ரொம்ப ஈடுபாட்டோட நடிச்சும் கொடுத்தார்.ஹீரோ ஃப்ரெண்டா தீனா நடிச்சிருக்கார். டிவிலயே அவரோட காமெடி ரொம்ப பிரபலம். இந்தப் படத்திலும் நிச்சயமா அதை நீங்க எதிர்பார்க்கலாம். ரக்ஷன் - தீனா ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அலப்பறைகள், வயிறு வலி வர்ற அளவுக்கு உங்களைச் சிரிக்க வைக்கும். ஹீரோயினா மெலினா நடிச்சிருக்காங்க. க்ளாஸ் ரூம் கதைங்கிறதுனால நிறைய பேர் நடிச்சிருக்காங்க. முனீஸ்காந்த் பி.டி. வாத்தியாரா நடிச்சிருக்கார். காமெடி தாண்டி எமோஷனலா அவருக்கு முக்கியமான கேரக்டர். அவரும் சூப்பரா நடிச்சிருக்கார்.”.படத்தோட ஸ்பெஷல்னு எதைச் சொல்வீங்க? “வாலிப வயசுல இருக்குறவங்களோட கதையா இருந்தாலும், இந்தப் படத்துல எந்த இடத்துலயும் தம் அடிக்கிற, தண்ணி அடிக்கிற காட்சிகள் இருக்கவே இருக்காது. அதே மாதிரி ஆபாசமான காட்சிகளோ, வசனங்களோ சுத்தமா கிடையாது. எல்லாரும் குடும்பத்தோட உட்கார்ந்து பார்த்து ரசிக்கிற கதையா இது இருக்கும். எல்லா வயசுக்காரங்களும் தங்களோட ஸ்கூல் நாட்களை நினைச்சு அசை போடுற மகிழ்ச்சியான கதையாவும் இருக்கும்.”.உங்களைப் பற்றி சொல்லுங்க... “சொந்த ஊர் மன்னார்குடி பக்கத்துல உள்ள திருமக்கோட்டைங்கிற கிராமம்.ஆனா, பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருச்சிலதான். சென்னைல விஸ்காம் முடிச்சிட்டு, மும்பைல பி.ஜி. பண்ணேன். அப்புறம் சில மீடியா கம்பெனிகள்ல ஒர்க் பண்ணிட்டு, இப்போ இயக்குநராகிட்டேன். என் மனைவி பெயர் ஜெயலட்சுமி. எங்களுக்கு தமிழ் ஆதன் என்ற ஒரு பையன் இருக்கான்.”- சி.காவேரி மாணிக்கம்