மும்பையில் பிறந்த கன்னடத்துக்கிளி, க்ரித்தி ஷெட்டி. அக்கடதேசத் திரை உலகம் அழகுதேவதையாகக் கொண்டாடும் இவருக்கு, கோலிவுட் தமிழ் பேச கொள்ளை ஆசையாம். அதற்குப் பிள்ளையார் சுழிபோடுவதுபோல் பாலாவின் வணங்கானில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது றெக்கை கட்டாமலே பறந்தார். ஆனால் என்ன ஆச்சோ ஏதாச்சோ, திடீரென்று சூர்யாவைப்போலவே இவரும் அந்தப் படத்தில் இருந்து விலகினார். அதற்கான காரணம் மர்மமாகவே இருந்த நிலையில், கஸ்டடி படத்தின் ப்ரோமோவில், ‘வணங்கான் படப்பிடிப்பு தொடங்கவே தாமதமானதால்தான் அதில் இருந்து விலகினேன்’ என்று அந்த சீக்ரெட்டைப் போட்டு உடைத்திருக்கிறார் க்ரித்தி. கிளிக்குத் தமிழ்பேச சீக்கிரம் வாய்ப்பு வரட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்கள் இவரின் இன்ஸ்டா ஃபாலோயர்ஸ்!