அரசே, கட்டிடம் கட்டித் தருவதெல்லாம் ஒரு தவறா?தவறில்லைதான், கட்டம் கட்டும் அளவுக்கு கல்லா கட்டுவதுதான் தவறு!அருண், கூடுவாஞ்சேரி.ம.தி.மு.க-வில் மீண்டும் பிளவாமே?இதற்கு மேல் பிளக்க அங்கு என்ன இருக்கிறது. பேசாமல் ’மறுமலர்ச்சி தி.மு.க’ என்பதை ‘மறுபடியும் தி.மு.க’ என்று மாற்றிவிடலாம். கட்சியில் இருக்கும் அந்த நான்கு பேராவது பிழைத்துப் போகட்டும்! .சென்னையில் ஏ.டி.எம் போலவே, இயந்திரத்தில் பணத்தை செலுத்தியதும் மதுபாட்டில்கள் வருகின்றனவே?ம்க்கும்… இந்த நேரத்தில் இது தேவையா? டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லை. திருமண மண்டபத்தில் மது அருந்த அனுமதி என்று சொல்லிவிட்டு, ஊரே கழுவி ஊற்றியப் பிறகு வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், மீண்டும் மீண்டும் இந்த அரசு சர்ச்சையில் தானாக சென்று சிக்குவது ஏன்?என்.தங்கராஜு, தஞ்சாவூர்.வெளிநாடுகளைப்போல தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் திருவிழா நடத்தினால் என்ன?ஓ… அதற்கு தாலி அறுக்கும் பெருவிழா என்றும் பெயர் வைத்துவிடலாம்தானே!அயன்புரம் சத்தியநாராயணன், சென்னை. . ஒருவர் நம்மை பார்த்து எப்படி சிரிக்க வேண்டும், எப்படி சிரிக்கக் கூடாது? (ரூ.200)கைத்தட்டி சிரிக்கலாம். கைக்கொட்டி சிரிக்கக் கூடாது.ஆ.மலர்தாசன், விருத்தாலம்.ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு என்கிறார்களே?அது பழைய பழமொழி. ’ஆற்றில் எடுத்தாலும் அளந்து எடு’ என்பதே புதுமொழி. மணல் கொள்ளை விவகாரம் வருமான வரித்துறை ரெய்டு வரை வந்துவிட்ட நிலையில், தமிழக அரசு கவனிக்க வேண்டிய அதி அத்தியாவசிய விஷயமும்கூட!சோ.மாணிக்கம், திருவிடமருதூர், தஞ்சாவூர்.அண்ணா மலையா, எலியா?மலையைக் குடையும் எலிவண்ணை கணேசன், சென்னை.ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பது எதனால்?தன்மீது நம்பிக்கை இல்லாததால்!எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.உண்மையைக் காப்பாற்ற சொல்லப்படும் பொய் உண்மையைவிட உயர்வானதுதானே?பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.இன்றைய சூழலில் யாரை நினைத்தால் பாவமாக இருக்கிறது?அரசைதான்!எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.ரசத்தில் எத்தனையோ ரசம் உண்டு, அரசுக்கு பிடிக்காத ரசம் எதுவோ?தரத்தில் சமரசம்!ஜெ.மணிகண்டன், ஆம்பூர். .திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக நடிகை இலியானா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறாரே?கர்ப்பமடைவதற்கு திருமணம் ஆகத்தான் வேண்டுமா?பி.என்.நரசிம்மமூர்த்தி, பழைய பல்லாவரம், சென்னை.பெண் வாசனையே இல்லாமல் குமுதம் தயாரிக்க முடியுமா?அதை உம்மால்தான் வாசிக்க முடியுமா?!த.சிவாஜி மூக்கையா, சென்னைதமிழகத்தில் அரசியல்வாதிகள் என்னதான் ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசியில் அவர்கள் சென்றடையும் புகழிடம் எது?மெரினா!-பாபு, சென்னை