சமீபத்தில் நாங்குநேரியில் சின்னதுரை என்கிற மாணவரை சக மாணவர்கள் சிலர் அவரது வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். பதைபதைக்க வைத்த இச்சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலும், சென்னையிலும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் இளம் வயதினரின் மனதில் இப்படியான வன்மம் புகுந்தது எப்படி? அறத்தையும் அன்பையும் கற்பிக்கும் கல்வி நிலையங்களில் வெறுப்பு அரசியல் பரவி வருவதற்கு என்ன காரணம்? அன்பு, அறம் இவற்றை தாண்டி, தீவிர வெறுப்பை இளைய சமுதாயத்தினர் பெரியவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அக்கம்பக்கத்தினர், பார்க்கும் சினிமா படங்கள், குறிப்பாக பெற்றோரின் நடத்தை இதில் எல்லாம் இருந்து சிறார்களின் மனதில் பல்வேறு தாக்கங்கள் உருவாகின்றன. பெற்றோரின் குறுகிய மனப்பான்மை, வெறுப்பு அரசியலும்கூட பிள்ளைகளுக்குள் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன. தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று எல்லா பெற்றோரும் விரும்புகின்றனர். அதேபோல் தங்கள் பிள்ளைகள் நல்ல மன நிலையோடும் வளர வேண்டும் என்பதற்காகவேனும் வெறுப்பு அரசியல் இல்லாமல் இருக்கலாம் அல்லவா? இந்த விஷயத்தில் நாங்குநேரி, கழுகுமலை, சென்னை என சம்பவம் நடந்த கல்வி கூடங்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சாதி, பொருளாதாரம், நிறம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கூடாது என்பதை அறிவுறுத்தும் நீதி போதனை வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் இந்த விஷயத்தை கையிலெடுத்துக்கொண்டு மாணவர்கள் மத்தியில் மன ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும். உரையாடல்கள் குறைந்து போன இக்காலத்தில் சமூக அக்கறையுடன் கூடிய ஆரோக்கிய உரையாடலை பள்ளிகளும், வீடுகளும் இளம் தளிர்களிடம் உடனடியாக நிகழ்த்த வேண்டும்.