அமலாபால் அற்புதமான நடிகை. ஆனால் அவர் அதிகம் பேசப்படுவது நடிப்பை தவிர்த்த மற்ற விஷயங்களுக்காகத் தான். தமிழில் கைவசம் படங்கள் இல்லா விட்டாலும் மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். சினிமாவை விட்டு விலகுவதுமில்லை, அதேசமயம் சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை என்றிருக்கும் அமலாபாலுக்கு, ஒரே இடத்தில் வண்டி ஓட்டுவது மட்டும் சிரமம்..அதனால் பாண்டிச்சேரியை விட்டு, ஊர் ஊராக டேரா அடித்து வந்தவருக்கு இப்போது கோவா தான் குடியிருப்பாம். அதுவும் நண்பர்களே இல்லாமல், தனிமையில்..! ‘ஏன் இந்த மாற்றம்?’ என்றால், ‘இந்த உலகத்தை நம் கண்களால் மட்டுமே பார்ப்பதற்கு தனிமை தான் ஒரே வழி!’ என்று தத்துவம் பேசுகிறார். ஒருவேளை விண்வெளி பயணத் திட்டம் எதுவும் கைவசம் இருக்கிறதோ என்னவோ..?