எந்தவொரு இசைக்கருவியிலும் உணர முடியாத ஒரு இனிமையை பாடகி அருணா சாய்ராமின் குரலில் நாம் கேட்கலாம், கிறங்கலாம். மதுரமான அவர் குரலில் தெய்வீகமான உணர்வும் நிறைந்திருக்கும். அந்த வினோதமான குரலில் மயங்கி தன்னையே மறக்கும் அதி தீவிர ரசிகர்கள் அவருக்கு ஏராளம். அப்படிப்பட்ட அற்புதமான பாடகிக்கு சமீபத்தில் ‘செவாலியே’ விருது வழங்கி கௌரவிக்கப்பட, அந்த சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த பாடகி அருணா சாய்ராமை அவரது இல்லத்தில் சந்தித்தோம்....இந்தப் பேட்டியை எங்களது கேள்வியுடன் துவக்குவதைவிட, உங்களின் பாடலுடன் துவங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம் என நாம் சொன்ன மறுகணம் கண்களை மூடி ’ஐகிரி நந்தினி...’ பாடலை பாடத் தொடங்கினார் அருணா... அதிகாலையில் ரேடியோவில் பலமுறை கேட்ட அந்தப் பாடலை, முதன்முதலாக காக்கை, குருவி ஒலிகளுடன், நேரில் அவரே பாடி கேட்டது செவிகளுக்கு ஏகாந்தமானது. .நீங்க முதன்முதலா இசை கத்துக்குட்ட நாள் நியாபகம் இருக்கா..? “நல்லா ஞாபகம் இருக்கு. அந்த முதல் நாள் நான் எப்படி ‘ச ப சா’ கத்துக்குட்டேன்னு இன்னும் நினைவிருக்கு. இப்போவரை என்னோட எல்லா ஜாக்கெட்லயும் ‘ச ப சா’ எழுதியிருக்கும். அந்த ரவிக்கை இல்லாம நான் எந்த சேலையும் உடுத்த மாட்டேன். எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும், ஒரு விஜயதசமி அப்போ என் அம்மா எனக்கு இந்த ‘ச ப சா’ கத்துக்கொடுத்தாங்க. அதோட அஸ்திவாரத்துலத்தான் இந்த கட்டடம் இப்போ வரை நிக்குது.”.நீங்க பாடுன பல மேடைகள் சில சமயங்கள்ல காலியா இருந்திருக்குன்னு நீங்களே சொல்லிருக்கீங்க. அந்த மாதிரி நேரங்கள்ல உங்க மனநிலை எப்படி இருக்கும்..? “நிச்சயம் கஷ்டமா தான் இருக்கும். நம்ம பாட்ட யாருமே கேட்க மாட்டாங்களான்னு தோணும். ஆனா யோசிச்சி பார்த்தா, ’முதல நீ யாரு..? நீ இப்போ தான் வந்திருக்க, இரண்டு மூணு பாட்டு பாடுற. அதுக்குள்ள உனக்கு ஆடியன்ஸ்லாம் வேணுமா?’ன்னு எனக்குள்ளையே தோணும். எல்லாருக்கும் போராட்ட காலங்கள்னு இருக்கும். எல்லா கலைஞர்களுக்கும் அது ரொம்ப அவசியம்னு நினைக்கிறேன். ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுக்கே இதெல்லாம் நடந்திருக்கு. அந்த மாதிரியான நேரங்கள்ல தான் நமக்குள்ளயே ஒரு நெருப்பு பிறக்கும். எல்லாமே சீக்கிரமா வந்ததுன்னா எல்லாமே நம்மளால தான்னு அகங்காரமா நினைக்கத் தோணும். லேட்டா வந்தா தான் இது எதுவுமே நம்மோடது இல்ல, எல்லாமே இறைவன் செயல்ங்கிற எண்ணம் நமக்குள்ள வரும்.” .அதுக்கு அப்புறம் கூட்டம், கூட்டமா மக்கள் உங்க பாடல கேட்க வரப்போ உங்களுக்கு என்ன தோணும்..? “அப்பவும் இதெல்லாம் நமக்கானது இல்லைங்கிற எண்ணம் நமக்குள்ள நிலையா இருக்கணும். எந்த ஒரு அழகும் தன்னோட அழகை உணராம இருக்குறவரை தான் அது பார்ப்பவர்களுக்கு அழகாத் தெரியும்.” உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச ராகம்ன்னு எதை சொல்லலாம்..? “தோடி, பிருந்தாவன சாரங்கா, சண்முகப் பிரியா... இது மூணும் எனக்கு ரொம்ப பிடிச்ச ராகம். அதுல குறிப்பா இந்த ‘சண்முகப் பிரியா’ ராகம், தமிழ்நாட்டு கோயில்கள்ல நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பாங்க. அது நம்ம இரத்தத்துலயே ஊரிப்போன ஒரு ராகம்.” மும்பைல இருந்தாலும், உங்களுக்குள் தமிழ் ஆர்வம் அப்படியே இருக்க காரணம்..? “எல்லாத்துக்கும் என் பெற்றோர் தான் காரணம். நானும் எங்க அண்ணனும் இங்கிலிஷ் மீடியம்ல தான் படிச்சோம். ஆனா ஞாயிறுக் கிழமைகள்ல எங்களுக்கு ஒரு தமிழ் வாத்தியார் வந்து கிளாஸ் எடுப்பாரு. அதுனால சின்ன வயசுல இருந்தே அது இருக்கு. அதுக்கப்புறம் கீ.வ.ஜ போன்ற தமிழ் மேதைகள் எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. அவங்களாலயும் என்னோட தமிழ் ஆர்வம் கூடிச்சு.” .இப்போ சினிமால வெஸ்டர்ன், ராப், கானா போன்ற ஜானர்கள்ல பாடல்கள் எல்லாம் வருது. அந்த ஜானர்கள பத்தின உங்களோட பார்வை..? “நான் எல்லா ஜானர் படல்களையும் கேட்பேன். கேட்டா மனசுக்கு பிடிக்கிறதா, சந்தோஷம் வருதாங்கிறது மட்டும் தான் முக்கியம். அதுலயும் ராப் பாடல்கள் ரொம்ப முக்கியம். ஒடுக்கப்பட்டவங்களோட குரலா அது ஒலிக்கிறது. அதையும் நம்ம மரியாதை கொடுத்து தான் கேட்கணும். எனக்கு ‘நாக்க முக்க..’ பாடல் ரொம்ப பிடிக்கும். அந்த பாடலோட குரல் நம்மள இழுக்குதுல்ல, அது தான் கலை.” இப்போலாம் நிறைய நடிகர்களே பாட ஆரம்பிச்சிட்டாங்க. அந்த மாதிரி பாடுற நடிகர்கள்ல யாரை ரொம்ப பிடிக்கும்..? “கமல் சார் பாடுறது பிடிக்கும். தனுஷ் பாடுனதுல ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் நல்லா கேட்ருக்கேன். அதுவும் ரொம்ப பிடிக்கும். அனிருத்த நான் சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்.” அனிருத் இன்னைக்கி ஒரு தவிர்க்க முடியாத ஆளா தமிழ் சினிமாவுல இருக்குறாரு. இதை எப்படி பார்க்குறீங்க..? “ரொம்ப பெருமையா இருக்கு. அவரோட அப்பா - அம்மாகிட்டையும் நான் இதை சொல்லிருக்கேன். எவ்வளவோ புண்ணியம் பண்ணிருந்தாதான் நம்ம புள்ள சாதிக்கிறத நாமளே பார்க்க முடியும். நாம சாதிச்சி கிடைக்கிற சந்தோஷத்த விட நம்ம பசங்க சாதிச்சி நமக்கு கிடைக்கிற சந்தோஷமே தனி.” .வீட்ல சாய்ராம் சார் உங்க பாட்டெல்லாம் கேட்பாரா..? “என்னோட எல்லா கச்சேரிலையும் தவறாம உட்காருவாரு. எனக்கு அவர் யானை பலம். அது ரொம்ப முக்கியம். அந்த வகையில நான் ரொம்ப குடுத்து வைச்சவதான். கச்சேரி முடிஞ்சி இரண்டு நாள் கழிச்சி அதுல நான் செய்த தவறுகளை எல்லாம் சொல்லுவாரு.”செவாலியே விருது வாங்குன தருணம் பற்றி..? “எனக்கு சிவாஜி ரொம்ப பிடிக்கும். அவரோட எல்லா படங்களும் பாம்பேல உடனே ரிலீஸ் ஆகும். எல்லாத்தையும் நான் பார்த்திருவேன். அப்படியான மனிதருக்கு கொடுத்த அதே விருது நமக்கும் தராங்கன்னு உணர்றதுக்கே காலம் எடுத்துச்சு.” -ஷா