-முத்துராமலிங்கன் இந்திய சினிமாவில் காம்போ சீஸன் இது. ஒரு படம் துவங்கும்போது கைவசம் கதை இருக்கிறதோ இல்லையோ, ‘சேர நன்னாட்டிளம் பெண்களுடனே’ என்று கேரளா துவங்கி மும்பை வரை ஐந்தாறு மாநில நட்சத்திரங்களைக் கலந்துகட்டி களமிறங்கி விடுகிறார்கள்.தற்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலரில் ஆகட்டும், வரும் தீபாவளைக்கு ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் ’லியோ’விலாகட்டும் படம் முழுக்க இதே பல மொழி நட்சத்திர காம்போதான். ஆனால் இந்த காம்போக்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பெரும் ஜாம்போ காம்போ ஒன்றுக்கு இரு முன்னணி இயக்குநர்கள் பின்னணி வேலைகள் பார்த்துக் கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் சீக்ரெட்..படப்பிடிப்பு காலத்தில் ரஜினி உட்பட அனைவராலும், ’தேறுவாரா?’ என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்ட நெல்சன் ‘ஜெயிலர்’ வெற்றியின் மூலம், ஒரே ஜம்ப்பில் டாப் 5 இயக்குநர்கள் பட்டியலில் வந்துவிட்டார்.சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ நன்றி நவிழும் விழாவில், ‘இமயமலையிலிருந்து சீக்கிரம் இறங்கி வாங்க சார். உங்களை நேர்ல சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று, பத்திரிகையாளர்கள் முன்னிலையில், மைக்கில் அறிவித்த நெல்சன், மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்கவே ஆர்வமாக இருக்கிறாராம்.ஜெயிலர் படத்தை சிக்கனமாக தயாரித்த நிறுவனம் இப்படத்தில் கணிசமான லாபம் பார்த்த வகையில் மீண்டும் ரஜினி -நெல்சன் காம்போவை ரிப்பீட் செய்யவும் தயாராகவே இருக்கிறது.ஆனால் நெல்சன் போட்டிருக்கும் கணக்கே வேறுவிதமானது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். .இதற்கு முன் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ விமர்சன ரீதியாக சிறிது டேமேஜ் ஆகியிருந்தது என்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை என்பதை ரஜினியே மேடையில் அறிவித்தது நினைவிருக்கலாம். ஜெயிலரில் பணியாற்ற வந்த பின்னரும் விஜய்யுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த நெல்சன் ‘ஜெயிலர்’ தயாரானவுடன் அப்படத்தை விஜய் தனது இல்ல தியேட்டரில் பிரத்யேகமாகப் பார்க்க ஏற்பாடு செய்யவும் மறக்கவில்லை. இந்த மூவ்களுக்குப் பின்னால் நெல்சனின் பிளான் என்பது ரஜினி, விஜய் இருவரையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்து, இந்திய சினிமாவின் முதல் பிரம்மாண்ட படத்தை இயக்கிவிட வேண்டும் என்பதே என்கிறார்கள். ரஜினி ஓ.கே. சொல்லும் பட்சத்தில் ரஜினி, விஜய், அனிருத், நெல்சன் என்று ஒரு இமாலய கூட்டணி உருவாகும். ‘ஜெயிலர்’ படத்தை தயாரித்த அதே நிறுவனத்தை மய்யம் கொண்டு இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்க, அங்கிருந்து நாலைந்து தெருக்கள் தள்ளி இருக்கும் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் அலுவலகத்தில், அப்படியே இதற்கு நேர்மாறான ஒரு வியூகத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..கமலை வைத்து ‘விக்ரம்’ என்கிற அதிரிபுதிரியான ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய்யை வைத்து இயக்கி வந்த ‘லியோ’ படப்பிடிப்பை முடித்து அக்டோபர் மாதம் ரிலீஸ் என்கிற இடத்துக்கு வந்துவிட்டார். பின்னணி இசை கோர்க்கப்படாத நிலையில் முழுப் படத்தையும் பார்த்த விஜய்க்கு பெரும் மகிழ்ச்சி. இந்த காம்போவுக்கு பிசினஸும் பிய்த்துக் கொண்டு போயிருக்கிறது. அதை ஒட்டி லோகேஷ் கனகராஜை தனது கஸ்டடியில் வைத்துக்கொள்ள விரும்பிய விஜய், ‘லோகேஷ்ணா, வெங்கட் பிரபு படம் ஜஸ்ட் மூணே மாசத்துல மளமளன்னு முடிஞ்சுடும். ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வெயிட் பண்ணுங்க. அடுத்த படமும் நாம ரிப்பீட் பண்ணிக்கலாம்’ என்றிருக்கிறார்.அதனால் விஜய் சொன்னதையும் தாண்டி வேறொரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் லோகேஷ். அதாகப்பட்டது, ஏற்கனவே விக்ரம் ரிலீஸுக்குப் பின்னர் கொடுத்த வாக்கு பிரகாரம் அடுத்த படம் கமலை வைத்து இயக்கவேண்டிய கடன் இருக்கிறது லோகேஷுக்கு. இப்போதோ விஜய்யும் அடுத்து ரிப்பீட் பண்ணலாம் என்கிறார். ஒருவேளை கமலும், விஜய்யும் ஒரே கதையில் நடிக்க சம்மதித்து அதை நாம் இயக்கினால் எப்படி இருக்கும்? வியாபாரம் ஆயிரம் கோடியைத் தாண்டாதா? மாற்று மொழிப் படங்களான ‘கே.ஜி.எஃப்’ , ‘பாகுபலி’ சாதனைகளை படம் பூஜை போடும் தினத்தன்றே தகர்த்து விடலாமே? என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்..இப்படி காய் நகர்த்தி வரும் நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரில் ’ஜெயிக்கப்போவது யாரு?’ என்று விரைவில் தெரிந்துவிடும்.