-ஆர்.என்.ராஜன்மகாபெரியவர், திருத்தல யாத்திரை செய்துகொண்டிருந்த காலகட்டம். அப்போது சில நாட்கள், மகாராஷ்ட்ராவின் சதாராவில் முகாமிட்டுத் தங்கியிருந்தார்..தினமும் சுற்றுவட்டாரக் கோயில்களுக்குச் சென்றுவந்த பின், முகாமில் பக்தர்களுக்கு தரிசனம் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.ஒரு நாள், மாலை நேரம். மகானை தரிசிக்க வந்த பக்தர்களில், பள்ளி மாணவன் ஒருவனும் இருந்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் தொற்றிக் கொண்டிருந்தது, வெளிப்படையாகவே தெரிந்தது.வரிசையில் நின்று தன் முறை வந்ததும் மகானின் திருவடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். “சுவாமி...!” என்று ஏதோ சொல்லத் தொடங்கியவனை, சைகை காட்டி நிறுத்தினார், மகான்.“நீ என்ன சொல்ல வந்தியோ அதை அப்புறம் சொல்லலாம். முதல்ல உனக்கு ஒரு வேலை தர்றேன். அதைச் செய்!” சொன்ன மகான், யாரோ பக்தர் ஒருவர் காணிக்கையாக மூங்கில் கூடையில் வைத்திருந்த துளசி மாலையையும், ஸ்படிக மாலையையும் எடுத்தார். “இதோ இந்த ரெண்டு மாலையையும் எடுத்துக்கொண்டுபோய், எங்கேயாவது ஒரு இடத்துல உட்கார்ந்துக்கோ. ரெண்டுலயும் எத்தனை எத்தனை மணிகள் இருக்குன்னு எண்ணிப்பாரு... நான் கூப்பிடறப்போ வா!” மகான் சொல்ல, மாலைகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தான், அந்த மாணவன்.ஓரமாக ஓர் இடத்தில் சென்று அமர்ந்து அவன் மணிகளை எண்ணத் தொடங்க, மகான் மற்ற பக்தர்களுக்கு ஆசியளித்துக் கொண்டிருந்தார்..நேரம் நகர்ந்தது. மகானை தரிசிக்க வந்தவர்களில் ஜோதிடர் ஒருவரும் இருந்தார். அவர் மகான் முன் வந்து நின்ற போது, கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த மாணவனை அழைத்தார்,வந்து நின்றவனிடம், “மணிகளை எண்ணிட்டியா? எத்தனை இருந்துது?” கேட்டார். “ஒவ்வொரு மாலையிலயும் நூற்றியெட்டு மணிகள் இருக்கு சுவாமி!” மாணவன் சொல்ல, இப்போது ஜோதிடரைப் பார்த்தார் பெரியவா. “நூற்றியெட்டுக்கு ஏதாவது விசேஷம் உண்டா?” கேட்டார். “இருக்கு பெரியவா...பன்னிரண்டு ராசி, ஒன்பது கிரகங்கள். இந்த இரண்டோட பெருக்கமா வர்றதுதான் நூற்றியெட்டு.!” சொன்னார், ஜோதிடர். “என்ன, இவர் சொன்னதைக் கேட்டியா? இப்போ நான் உனக்கு ஒரு யோசனை சொல்றேன்!” என்ற பெரியவர், தொடர்ந்து பேசினார்.“ஒரு விஷயத்தை ஞாபகம் வைச்சுக்கணும்னா, அதோட தொடர்பு உடைய இன்னொன்றோட இணைச்சு மனசுல பதிச்சுக்கணும். உதாரணமா, பன்னிரண்டையும் ஒன்பதையும் பெருக்கினா நூற்றியெட்டு. இதை பன்னிரண்டு ராசி, ஒன்பது கிரஹம் பெருக்கம் நூற்றியெட்டுன்னு இவர் சொன்னார் இல்லையா? இந்த மாதிரி மனசுல பதிச்சுண்டா, ஞாபக மறதி வராது.வெறுமனே உருப்போட்டுப் படிக்கறது அப்போதைக்கு நினைவுல இருக்கும். ஆனா, அதுக்கப்புறம் யோசிக்கிறப்போ ஞாபகத்துக்கு வராது. அதுவே அர்த்தம் புரிஞ்சு, ஏற்றம் இறக்கமா வார்த்தைகளை உணர்ந்து படிச்சா, காலத்துக்கும் மறக்காது.மாலைகள்ல இருந்த மணியை எண்ணும்போது எத்தனை கவனமா இருந்தியோ அத்தனை கவனமா இருக்கணும் பாடத்தைப்படிக்கும்போது. இதையெல்லாம் கடைபிடிச்சா, உனக்குப் பாடமும் மறக்காது, பரீட்சைலயும் நல்ல மார்க் வாங்குவே... புரிஞ்சுதா?’’ மகான் சொல்லச் சொல்ல, மாணவன் விழிகளில் மளமளவென நீர் வழிந்தது. “என்ன, படிக்கறதெல்லாம் மறந்துபோகுதுன்னு நீ கேட்க நினைச்சதுக்கு, பதில் கிடைச்சுடுச்சா?” கேட்ட மகான், கை நிறையக் கல்கண்டும், ஆப்பிள் ஒன்றும் தந்து ஆசிர்வதிக்க, பெற்றுக்கொண்டு புறப்பட்ட மாணவன் முகத்தில் வாட்டம் மறைந்து, நம்பிக்கை ஒளி படர்ந்திருந்தது.