- சுரேஷ் கண்ணன் தென்னிந்திய நடிகைகளை மட்டும் பிரியத்துடன் அரவணைத்துக் கொள்ளும் பாலிவுட், இங்குள்ள நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் வெற்றிகளை மட்டும் அத்தனை எளிதில் சகித்துக் கொள்ளாது. இப்படியொரு சூழலில், தமிழில் நான்கு திரைப்படங்களை இயக்கிய அட்லீ, “பாலிவுட்டின் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாரூக்கானை ஹீரோவாக வைத்து முதன் முதலாக இயக்கிய இந்திப்படம் ‘ஜவான்’. தன்னோடு நின்று விடாமல், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு ஆகியோரோடுஒட்டுமொத்ததொழில்நுட்பக்கூட்டணியையும் தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் சென்றது பாராட்டுக்குரியது. இதை அனுமதித்த தயாரிப்பாளர் ஷாரூக்கானையும் பாராட்டியாக வேண்டும்..இதுவரை தமிழில் சுடச்சுட மசாலா இட்லிகளாக சுட்டுக் கொண்டிருந்த அட்லீ, இந்தியில் முதன்முறையாக சுட்ட பாலிவுட் ரொட்டி எப்படியிருந்தது?இந்திய எல்லையில், உயிருக்குப் போராடும் நிலையில் கண்டெடுக்கப்படும் ஒரு ராணுவ வீரரை, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் காப்பாற்றி சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களின் கிராமம் சூறையாடப்படும் போது மயக்கத்திலிருந்து விழித்தெழிக்கும் ராணுவ வீரர் எதிரிகளை வதம் செய்து கிராம மக்களைக் காப்பாற்றுகிறார். பிறகு அவர் கேட்கும் கேள்வி ‘நான் யார்?’. அவருடைய பழைய நினைவுகள் முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கின்றன..முப்பது வருடங்கள் கழித்து மும்பையில் ஒரு மெட்ரோ ரெயில் பயணிகளுடன் கடத்தப்படுகிறது. கடத்தல்காரன் நாற்பதாயிரம் கோடி ரூபாய் கேட்கிறான். அரசாங்கத்தை பின்னால் நின்று இயக்கும் ஆயுத வியாபாரியிடமிருந்து பணம் கிடைத்ததும் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் அடைக்கிறான். சுகாதார அமைச்சரைக் கடத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளையும் நவீனமாக்குகிறான். ‘ராபின்ஹூட்’ போல கெட்டவர்களிடமிருந்து கொள்ளையடித்து மக்களுக்கு நல்லது செய்யும் இந்தக் கடத்தல்காரனின் பெயர் ‘விக்ரம் ரத்தோர்’ என்று தெரிகிறது. சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டதாக கருதப்பட்ட ராணுவ வீரர் என்பதும் தெரிகிறது.ஆனால் கடத்தல்காரனின் உண்மையான அடையாளம் ‘ஆசாத்’. பெண்களுக்கான சிறையின் ஜெயிலர். கைதிகளாக உள்ள சில பெண்களின் கூட்டணியுடன் இந்த சாகசத்தில் ஈடுபடுகிறான். யார் இந்த ஆசாத்? ஏன் ‘விக்ரம்’ என்கிற பெயரில் ராபின்ஹூட் அவதாரம் எடுக்க வேண்டும்? இந்தப் பதிலுக்கான ஹைபட்ஜெட் மற்றும் ஹைடெக் கண்ணாமூச்சி ஆட்டமே ‘ஜவான்’.தந்தையாக விக்ரம், மகனாக ஆசாத் என்று இரண்டு பாத்திரங்களில் ஷாரூக்கான். ஆசாமிக்கு உண்மையான வயது 57. ஆனால் இரண்டு பாத்திரங்களிலும் துள்ளலான நடிப்பைத் தந்து தான்தான் இன்னமும் அசைக்க முடியாத ‘பாலிவுட் பாட்ஷா’ என்பதை நிரூபிக்கிறார். ஃபிட்டாக இருக்கும் ஷாரூக்கின் ஆக்ஷன் மற்றும் நடனக் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருக்கின்றன. அதற்கு நடுவே வெளிப்படும் ஷாரூக்கின் மெல்லிய நகைச்சுவை ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. ‘அங்கிள்’ என்று ஒரு இளம்பெண் அழைக்கும் போது “ஏம்ப்பா.. உன்னைத்தான் அங்கிள்ன்னு சொல்றா’ என்று இன்னொருவரை கோர்த்து விடுவது உள்ளிட்ட காட்சிகளில் ஷாரூக்கிடம் வெளிப்படும் காமெடியை ரசிக்க முடிகிறது..கடத்தல்காரனை பிடிக்க முயலும் NSG அதிகாரியாக நயன்தாரா. இவரது அட்டகாசமான என்ட்ரி காட்சியில் விசில் பறக்கிறது. தன்னைத் திருமணம் செய்து கொண்டவன்தான் கடத்தல்காரன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து துப்பாக்கியைத் தூக்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் வசீகரமான தோற்றத்தில் கவர்கிறார். வழக்கம் போல் நயன்தாராவிற்கு சிறப்பாக டப்பிங் குரல் தந்திருக்கிறார் தீபா வெங்கட்.வில்லனாக விஜய்சேதுபதி. உலகின் நான்காவது இடத்தில் இருக்கும் பெருமைமிகு ஆயுத வியாபாரி .அரசாங்கத்தை பின்னின்று இயக்குபவர். இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடித்து அயல் நாடுகளின் லாபவெறிக்காக இந்த நாட்டை குப்பைத்தொட்டியாக மாற்றுபவர். இத்தனை கோடி சம்பாதிப்பவர் ஒரு நல்ல ‘விக்’ வாங்கி மாட்டியிருக்கலாம். கொடூரமான வில்லனாக விஜய்சேதுபதி நன்கு நடித்திருந்தாலும் அவருக்கான காரெக்ட்டரும் ஸ்பேஸூம் போதுமான அளவிற்கு அழுத்தமாக இல்லை. அடிவாங்குவதற்கென்றே நேர்ந்து விடப்பட்ட அளவிற்கு பலவீனமான வில்லன். அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்து நெகிழும் இடத்தில் ‘விட்டா பாட்டு பாடுவாங்க போலிருக்குடா’ என்று கிண்டலடிக்கும் இடங்களில் விசேவின் கிண்டலான நடிப்பு தனித்துத் தெரிகிறது..இது தவிர பிரியாமணி, யோகிபாபு போன்றவர்களும் ஆங்காங்கே வருவதால் ஜவான் ஏறத்தாழ தமிழ்ப்படம் போலவே தோற்றமளிக்கிறது. தீபிகா படுகோன், சஞ்சய்தத் ஆகிய இருவரும் சில காட்சிகளில் வருகிறார்கள். ஒரு முட்டாள் அமைச்சரின் பாத்திரத்திற்கு டப்பிங் குரல் தந்திருக்கும் விடிவி கணேஷிற்கு கூட ‘அட! நம்மாளுப்பா’ என்று கைத்தட்டல் கிடைக்கிறது..பழங்குடி மக்களைக் காப்பாற்றுவதற்காக அவதாரம் போல் தந்தை ஷாரூக்கான் விழித்தெழிக்கும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஹாலிவுட் தரத்தில் அட்டகாசமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் கடத்தப்படும் காட்சிகளில் ‘பரபர’ வேகம். மொட்டைத் தலையுடன் ஷாரூக் செய்யும் ஜாலியான அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. இத்தனை காஸ்ட்லியான ஜெயில் இந்தியாவில் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. காட்சிகள் அனைத்திலும் பணக்காரத்தனம். ஜி.கே.விஷ்ணுவின் காமிரா அட்டகாசமாக சுழன்று சுழன்று காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறது.தந்தையின் அடையாளத்தை வைத்து மகன் ராபின்ஹூட்டாக மாறுவது, பிறகு வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும் மகனை தந்தை வந்து காப்பாற்றுவது என்பது மாதிரியாக பயணிக்கும் திரைக்கதையை துளி குழப்பமும் இன்றி சிறப்பாகத் தொகுத்திருக்கும் ரூபன், சிலபல காட்சிகளை பல்லைக் கடித்துக் கொண்டு வெட்டியிருக்கலாம். இடைவேளைக்குப் பின்னர் ‘படம் எப்போதடா முடியும்’ என்று மிகவும் சோர்வாகி விடுகிறது. அத்தனை இழுவை. இந்த லட்சணத்தில் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டத்தை வேறு கடைசியில் காண்பித்து பீதியை ஏற்படுத்துகிறார்கள்..அனிருத்தின் அதிரடியான பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். தீம் மியூசிக், ‘ஹய்யோடா’, ‘வந்த இடம்’ ‘ராமய்யா ஒஸ்தாவய்யா’ போன்ற பாடல்கள் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. தமிழ் வடிவத்திற்கான பாடல்களை எழுதியிருப்பவர் விவேக். ஆனால் அனைத்தும் ஒரே மிக்ஸியில் அரைத்தது போல் ஒலிப்பதும், ஹைடெஸிபல் அலப்பறைகள் காதிற்குள் ‘ரொய்ங்க்’ என்று இம்சை செய்வதும் சோதனை. ஆக்ஷன் காட்சிகளை அனல் அரசு உள்ளிட்ட பெரிய ஸ்டண்ட் குழுவே இணைந்து வடிவமைத்திருக்கிறது. கன்டெய்னர் சேஸிங் முதல் பல சண்டைக்காட்சிகளில் இவர்களின் அசாதாரணமான உழைப்பு தெரிகிறது.ஜவான் படத்தின் மேக்கிங் அசத்தலாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. ஹைடெக் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. வாகனங்கள் விண்ணில் பறந்து உருண்டு கவிழ்கின்றன. ஆனால் ஒரு காட்சி கூட மனதில் ஒட்டவில்லை. எத்தனை பிரம்மாண்டமாக இருந்தாலும், ஹைடெக்காக அமைந்தாலும் ஒரு திரைக்கதையின் கால் தரையில் இருக்க வேண்டும். பார்வையாளனுடன் உணர்ச்சிரீதியான பிணைப்பை ஏற்படுத்தி ஒன்ற வைக்க வேண்டும். வெற்று பிரம்மாண்டங்களால், அசட்டுத்தனமான சென்டிமென்ட் காட்சிகளால் மட்டும் ரசிகனை கவர முடியாது..இந்த நோக்கில் தனது குருநாதர் ஷங்கரிடமிருந்து அட்லீ போதுமான பாடம் கற்கவில்லையோ என்று தோன்றுகிறது. முதல்வன் படத்தில் வரும் அந்த இண்டர்வியூ காட்சியை நினைவுகூருங்கள். இன்றும் கூட அமர்ந்து பார்க்குமளவிற்கு பரபரப்பான காட்சி அது. அப்படியான சீன் ஒன்று கூட ஜவானில் இல்லை. அத்தனையும் பிளாஸ்டிக்தனம். பணக்கார ஹோட்டலில் வேண்டாத உணவைச் சாப்பிட்டது போல் ‘ஙே’ என்றிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நடிகர்களை இணைத்து ஹைபட்ஜெட் மேக்கிங்கில் ஒரே மாதிரியான காட்சிகளை எடுப்பதற்குப் பெயர் PAN இந்தியா படமல்ல.ஜெயிலர் ஆசாத்தின் (இவர் இந்தி ஜெயிலர்) சாகசங்களுக்கு ஆறு இளம் பெண்கள் உதவுகிறார்கள். இவர்கள் ஏன் உதவுகிறார்கள் என்பதற்கான பிளாஷ்பேக் காட்சிகளில் ‘உருக்கத்தை ஏற்படுத்துகிறேன்’ என்கிற பெயரில் அசட்டுத்தனமான அழுகாச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘கண்ணீரை வரவழைத்தே தீருவேன்’ என்கிற அளவிற்கு வலுக்கட்டாயமான எமோஷனல் காட்சிகள். பிளாஷ்பேக் முடிந்ததும் சொல்லி வைத்தாற் போல் ஒவ்வொரு கேரக்ட்டரின் கண்களில் இருந்தும் கண்ணீர் சொட்டுவது ‘கிரிஞ்சாக’ இருக்கிறது. ஆயுத ஊழல் செய்த பயங்கரமான குற்றத்தை ஏதோ கட்டப்பஞ்சாயத்து போல் ராணுவ கோர்ட் விசாரணை செய்யும் காட்சி உட்பட பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள்..அட்லீ இதுவரை இயக்கிய திரைப்படங்கள், முன்னர் வெளிவந்த எந்தெந்த படங்களில் இருந்த நகல் எடுக்கப்பட்ட கலவை என்பதைக் கண்டுபிடிக்க ரசிகர்களுக்கு இடையே ஒரு உற்சாகமான போட்டி நடக்கும். இந்த முறையும் அந்த வாய்ப்பைத் தவறாமல் தந்திருக்கிறார் அட்லீ. அவரே இயக்கிய பிகில் முதற்கொண்டு சர்தார், சர்க்கார், கத்தி என்று பல திரைப்படங்கள் கன்னாபின்னாவென்று மண்டைக்குள் சுழன்றடிக்கின்றன. தீபிகா படுகோனின் காரெக்ட்டர், மொ்சல் படத்து நித்யா மேனின் ஜெராக்ஸ் காப்பி. ‘யோசிச்சு ஓட்டு போடுங்க மக்களே.. அதுதான் தீர்வு’ என்று ஹீரோ ஆவேசமாக ‘மெசெஜ்’ சொல்லும் காட்சியோடு படம் முடிகிறது. இதை ஆரம்பத்திலேயே சொல்லி முடித்திருக்கலாம். விஜய் நடித்த இந்தி டப்பிங் படத்தை பார்த்த உணர்வு மட்டும்தான் மிஞ்சுகிறது.விவசாயிகள் கடன், அரசு மருத்துவமனை ஊழல், ஆயுத ஊழல் என்று சினிமாக்களின் ஹீரோக்கள் தேசத்தில் நடக்கும் பல ஊழல்களை, மோசடிகளை எதிர்த்து ஆவேசமாக ‘பன்ச்’ வசனம் பேசுகிறார்கள். கெட்டவர்களுக்கு எதிராக போராடுகிறார்கள். ஆனால் சினிமா தியேட்டர்களில் நடக்கும் பாப்கார்ன், பார்க்கிங், டிக்கெட் கொள்ளைகள் பற்றி இதுவரை எந்தவொரு ஹீரோவும் ஆவேசமாக ‘பன்ச் வசனம்’ பேசியதாக நினைவில் இல்லை.ஜவான் – ‘நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள்’ என்று ஆரம்பித்து வரும் மிகையான வாட்ஸப் மெசேஜ்களின் திரை வடிவம்.