-ஹரிஹரசுதன் தங்கவேலு செப்டம்பர் 7, 2019, அதிகாலை 1:38 மணியை இந்தியர்கள் எவராலும் மறக்க முடியாது. சந்திரயான் 2 கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கத் தொடங்கிய தருணம். 46 நாட்கள் விண்வெளியில் மிதந்து, சுற்றுவட்டப் பாதைத் தாவல்கள் மூலம் உயரம் ஏற்றி, இறக்கி என இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது சந்திரயான் 2 பயணம். நிலவின் தரைப் பரப்பிலிருந்து 35 கி.மீ உயரத்தில் இறங்கும் பயணத்தைத் தொடங்கியது விக்ரம் தரையிறங்கி. இறுதி 15 நிமிடங்கள் மூன்று கட்டமாக செயல்படும், மணிக்கு 500 கி.மீ வேகத்தில் தரையிறங்கத் தொடங்கிய விக்ரம், 15000 அடி உயரத்தை அடையும்போது அதன் வேகம் 210 கிமீ. இன்னும் நான்கு நிமிடங்களே மீதமிருந்த நிலையில், விக்ரம் வேகம் குறைந்து மூன்றாம் கட்டம் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வேகம் குறையவில்லை..4 வது நிமிடம், வேகம் 210 கிமீ. 12000 அடி உயரம்.3 வது நிமிடம், வேகம் 210 கிமீ. 10000 அடி உயரம். ‘வேகத்தை குறை விக்ரம், வேகத்தை குறை’ என விஞ்ஞானிகள் வேண்டிக் கொண்டிருக்க, விக்ரமின் வேகம் குறையவில்லை.2 வது நிமிடம் - வேகம் அதே 210 கிமீ. திட்டப்பாதையில் இருந்து விக்ரம் விலகியது.1.58 வது நிமிடம், விக்ரம் வேகம் குறையவில்லை. பூமித் தரைப்பரப்புடன் அதன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது.இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பெரும் நிசப்தம் நிலவியது. நடப்பது உண்மையா என எவராலும் நம்பமுடியவில்லை. தொலைக்காட்சிகளில் நள்ளிரவு முழுவதும் விழித்துப் பார்த்திருந்த இந்திய மனங்கள் உடைந்து போயின. இதற்காகவே காத்திருந்த வெளிநாட்டு ஊடகங்கள் சந்திரயான் திட்டம் தோல்வி என அறிவிக்கத் தொடங்கின. சந்திரயான் 2 திட்டம் தோல்வியா என்றால் நிச்சயம் இல்லை. 46 நாட்கள் பயணம், சுற்றுப்பாதைத் தாவல், மிக முக்கியமாக நிலவின் சுற்றுப்பாதையில் சந்திரயான் ஆர்பிட்டர் ஆய்வுக்கலத்தை நிறுவியது என 90% திட்டம் வெற்றி. 2021ம் ஆண்டே 9 ஆயிரம் முறை நிலவின் சுற்றுப்பாதையை வலம் வந்த சந்திரயான் 2 ஆர்பிட்டர் கலம் இன்று வரை உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும், திட்டம் முழுமை பெறவில்லை இல்லையா ! ஆகவே அது தோல்விதான் என பல நாடுகள் பொறாமையில் எள்ளி நகையாடின..இது போன்ற வன்மங்களும் சதிகளும் இந்தியாவிற்கோ, இஸ்ரோவிற்கோ புதிதல்ல. சுதந்திரத்திற்கு பிறகான வறுமையிலும் அறிவியலையும், அணுவியலையும் பிரதமர் நேரு கைக்கொண்ட காலம் முதல் இது நிகழ்ந்து வருகிறது. நேருவின் மறைவிற்குப் பிறகு, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திய அணு அறிவியலின் தந்தை டாக்டர் ஹோமி பாபா என தேசத்தை வல்லரசாக்க முனைந்த இரு தலைவர்களின் மரணம் 12 நாள் இடைவெளியில் 1966ல் நிகழ்ந்தது. இந்த மர்ம மரணங்களின் காரணம் குறித்து, ‘Conversation with the Crow’ புத்தகத்தில் அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பின் முன்னாள் இணை இயக்குநர் ராபர்ட் சொன்ன காரணம் இது..‘‘மாடு மேய்க்கும், பாம்புகளை வழிபடும் ஒரு சாதாரண அடிமை நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வது தவறு, இந்தியா இனி அவ்வளவு தான் ! நாட்டை பலப்படுத்த நினைப்பவர்களை அழித்துவிட்டால் யார் வருவார், இனி எவருக்குத் துணிவிருக்கும்?’’ ஆனால், நமது இஸ்ரோவிற்குத் துணிவிருந்தது! தோல்விகளிலும், துரோகங்களிலும் இருந்து பாடம் கற்று, எரிந்தாலும் விண்ணைத் தொட ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தது. 2008-ம் ஆண்டு ‘சந்திரயான் 1’ திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என உலகுக்கு முதலில் அறிவித்தது நாம்தான். இப்போது உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நிலவில் வெற்றிகரமாய்த் தரையிறங்கியிருக்கிறோம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா என மூன்று நாடுகள் ஏற்கெனவே நிலவில் தரையிறங்கியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தில் எவரும் நுழைந்ததில்லை. அவ்வளவு கடினமான நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா !.ஆனால் இந்த சாதனை சாதாரணமாய் நிகழ்ந்துவிடவில்லை. இறுதி விநாடியில் இதைப் பறித்துவிட ரஷ்யா முயற்சித்தது. ரஷ்யா கடைசியாக 1976ம் ஆண்டு தனது ‘லூனா 24’ கலத்தை நிலவில் இறக்கியது. அதன் பிறகு 47 வருடங்களாக எந்த முயற்சியும் இல்லை. 1990 களில் இருந்தே ‘லூனா 25’ திட்டத்தை செயல்படுத்த ரஷ்யா முயற்சித்தது. ஆனால் போர், உள்நாட்டுப் புரட்சி என ஆயுதங்கள் வலிமை கொண்டதே தவிர, அறிவியல் அங்கு தலையெடுக்கவில்லை. கடந்த 14 ஜூலை 2023ம் நாள் அன்று இந்தியாவின் ‘சந்திரயான் 3’ - LVM3 கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு 3.84 லட்சம் கி.மீ. இத்தொலைவை சந்திரயான் நேரடியாகக் கடக்காமல், சுற்றுப்பாதைத் தாவல்கள் மூலம் 40 நாட்கள் பொறுமையாகப் பயணித்து நிலவை அடையும். இதன் மூலம் பெருமளவில் எரிபொருள் சேமிக்கலாம். இப்படி பலகட்ட சுற்றுப்பாதைத் தாவல்கள் நிகழ்த்தி, ஆகஸ்ட் 5ம் தேதி, நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது சந்திரயான். இதுவரை அமைதியாக இருந்த ரஷ்யா தடாலடியாக ‘லூனா 25’ திட்டத்தை மீண்டும் கையில் எடுத்தது. திட்டம் என்னவோ 20 ஆண்டுகள் பழையது என்றாலும், அதில் எந்தவித மாற்றமும் செய்யாமல் பத்தே நாளில் செயல்படுத்த முனைந்தது. காரணம் இதுதான். உக்ரைனுடனான போரில் சிதைந்துபோன பெயரை மீண்டும் மீட்டெடுப்பது, அதைவிட நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பட்டத்தை தட்டிப் பறிப்பது..ஆகஸ்ட் 10 ‘லூனா 25’ சுமந்துகொண்டு Soyuz-2.1b/Fregat கலம் விண்ணில் பாய்ந்தது. இந்தியா போல சிக்கனமாக சுற்றுப்பாதைத் தாவல் எல்லாம் இல்லை. எவ்வளவு செலவானாலும் சரி ! பத்து நாள் பயணத்தில் நிலவை நேரடியாக அடைந்துவிட வேண்டும். இந்தியா தரையிறங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகஸ்ட் 23க்கு இரு தினங்கள் முன்னதாக 21ம் தேதியே தென் துருவத்தில் தரையிறங்க ஆயத்தமானது ரஷ்யா. இந்தியாவோ, இஸ்ரோவோ எந்த நாடுடனும் எந்தக் காலகட்டத்திலும் போட்டியில் இருந்ததே இல்லை. நம் வழி, தனி வழி. ஆனால் நம்மை போட்டியாக எடுத்துக் கொண்டு பொறாமை கொள்ளும் நாடுகளை நாம் தவிர்க்க முடிவதில்லை. 1950களில் சோவியத்தும், அமெரிக்காவும் நிகழ்த்திய விண்வெளிப் போட்டி போல, நிலவின் தென் துருவத்தில் முதலில் நுழையும் போட்டியை இப்போது இந்தியாவுடன் தொடங்கியது ரஷ்யா. வெல்லப்போவது யார் என உலகம் முழுவதும் இதை சுவாரஸ்யமாகக் கவனித்தார்கள். ரஷ்யாவின் இந்த அதிரடிக்காக, இஸ்ரோ தனது திட்டத்தில் எந்தவித மாறுதலும் செய்யவில்லை. செய்யும் பணியை அமைதியாக, ஆனால் செவ்வனே செய்தது. ‘சந்திரயான் 2’ஐப் போல ‘3’ல் ஆர்பிட்டர் ஆய்வுக்கலம் இல்லை. ப்ரொபல்ஷன் எனப்படும் உந்துகலம் மட்டும்தான். நிலவின் தரைப்பரப்பின் 100 கி.மீ. உயரம் வரை விக்ரம் லேண்டரையும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரையும் சுமந்து செல்வதுதான் இதன் பணி. சரி, ஏன் ஆய்வுக்கலம் இல்லை தெரியுமா ? அதுதான் ‘சந்திரயான் 2’ன் ஆர்பிட்டர் கலம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதே. நிலவின் சுற்றுப்பாதையில் இப்போதைய ப்ரொபல்ஷன் கலம் நுழைந்ததும் "வணக்கம் நண்பா" (Welcome Buddy) என ‘சந்திரயான் 2’ ஆர்பிட்டர் கலம், விக்ரம் லேண்டருக்கு செய்தி அனுப்பியது. இத்திட்டத்தில் இறங்கும் இடத்தேர்விற்கான புகைப்படங்களை கடந்த நாலு வருடங்களாக கிளிக் செய்து கொண்டிருப்பவர் நமது ஆர்பிட்டர் அண்ணன்தான் !.நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த ரஷ்யாவின் ‘லூனா 25’, ஆகஸ்ட் 21ம் தேதி தென் துருவத்தில் தரையிறங்கும் முயற்சியில் பரிதாபகரமாகத் தோல்வியைத் தழுவியது. அவசரம், திட்டமிடலின்மை எனத் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், நிலவின் தென் துருவம் என்பது ஒரு முக்கியக் காரணம். சூரிய ஒளி நிரந்தரமாக நுழைந்திடா கிரேட்டர் குழிகள் நிறைந்த பகுதி இது. permanently shadowed regions (PSRs) எனக் குறிப்பிடப்படும் இது, எவரும் நுழைந்திடா ஒரு மர்மப் பிரேதசம். -250 செல்ஸியஸ் டிகிரி வரை உறைகுளிர் நிலவும் சிக்கலான தட்பநிலை நிறைந்த இடமும் கூட ! இதனால்தான் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என இதுவரை எவரும் இங்கு இறங்க முயற்சிக்கவில்லை. ஆனால், சோதனைகளைத் தகர்த்து, சாதனையாக்குவதுதானே இந்தியர்களின் மரபணு வீரம். Aug 23, 2023 அன்று, இப்படியான ஒரு கடும் சிக்கலான பகுதியில் இறங்கும் படலம் தொடங்கியது. நிலவின் தரைப்பரப்பில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் விக்ரம் தரையிறங்கி தனது சரித்திரப் பயணத்தைத் தொடங்கியது. அதன் நான்கு இன்ஜின்களும் நெருப்பை உமிழ 11 நிமிடப் பயணத்தில் தரைப்பரப்பில் இருந்து 7.2 கிமீ உயரத்திற்கு வந்தடைந்தது விக்ரம். இப்போது தரையிறங்குதலில் இரண்டாம் கட்டம், தனது 8 சிறிய உந்துவிசைகளை ( Thruster) களைப் பயன்படுத்தி, கிடைமட்ட நிலையில் இருந்து செங்குத்தான நிலைக்கு வந்தது விக்ரம். .பிறகு மூன்றாம் கட்டம், நான்கு இன்ஜின்களில், இரண்டை மட்டும் பயன்படுத்தி 500 அடி உயரத்திற்கு வந்தடைந்த விக்ரம், 30 நொடிகள் அந்தரத்தில் நிலை கொண்ட படி இறங்கும் இடத்தை உறுதிசெய்தது. பிறகு, நிலவில் தரையிறங்கும் இறுதிக்கட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. மிதமான வேகத்தில், உயரத்தைக் குறைத்து, இந்திய நேரப்படி சரியாக 6:03 மணியளவில் நிலவின் தரைப்பரப்பில் ஒரு மழலையைப் போல மென்மையாய் கால் பதித்தது விக்ரம். தேசம் முழுவதும் மகிழ்ச்சி ஒரு மின்சாரம் போல பாய்ந்தது. இந்தியாவின் இந்த அசுரப் பாய்ச்சலை உலகமே எழுந்து நின்று கை தட்டியது. கண்கள் பனிக்க இதை நேரலையில் பார்த்திருந்த இந்தியர்களுக்கு இது ஒரு வாழ்நாளுக்குமான பெருமை! சில மணி நேரங்களுக்குப் பிறகு விக்ரமில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாய் வெளிவந்து, உறைந்த பனிப் பாறைகளில் நீர் மற்றும் இதர கனிமங்களை தேடும் பணியைத் தொடங்கியுள்ளது. பிரக்யான் கண்டுபிடிக்கப் போகும் புதிய தகவல்களுக்காக உலக நாடுகள் நகம் கடித்துக் காத்திருக்கின்றன..தரைப்பரப்பை வெற்றிகரமாகத் தொட்டதும் விக்ரம் லேண்டர், "நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன், நீயும்தான் இந்தியா!" என நம் தேசத்திற்கு ஒரு செய்தி அனுப்பியது. மனித குலத்தின் மற்றுமொரு மகத்தான சாதனைக்கு இந்தியர் அனைவரது சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இஸ்ரோ ! இன்னும் பல இலக்குகளை அடைந்து எங்களையும் நம் தேசத்தையும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஜெய்ஹிந்த்..தென் துருவம் ஏன்? நிலவின் தென்பகுதியில் பனிக் கட்டிகள் மற்றும் தாதுக்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது உறுதியாகும் நிலையில், எதிர்காலத்தில் நிலவிற்குச் சென்று குடியேறுவதற்கும், நிலவை மையமாக வைத்து பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்கும் வழிபிறக்கும். எனவேதான், பல நாடுகள் தென் துருவத்திற்குச் செல்ல துடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் இந்தியா சாதனை நிகழ்த்தி தலை நிமிர்ந்திருக்கிறது.