ஆண்டு முழுக்க திராட்சை அறுவடை; முப்போக நெல்விளைச்சல்; மூன்றுபுறமும் மலைகள்; எழில்மிகு பசுமை மண்டலம் என கம்பம் பள்ளத்தாக்கின் சிறப்பே தனி. இங்கு லித்தியம் கிடைப்பதாகக் கூறி துளையிடத் தொடங்கியிருப்பதால், விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சி.காவிரிப் பாசனப்பகுதிபோல் பசுமையானது, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு. இங்கு தேசிய புவியியல் மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த ஒரு குழு, கனிமவளம் குறித்து ஆழ்துளையிட்டு ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறது.குறிப்பாக, இப்பகுதியில் உள்ள தனியார் நிலம், வனப்பகுதி எனப் பல இடங்களில் ஆயிரம் அடி ஆழம்வரை துளையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவ, `கம்பம் பள்ளத்தாக்கை காவுகொடுக்கும் சூழல் உருவாகிவிடுமோ?' என பதறிப் போயுள்ளனர், விவசாயிகள்.பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் இதுகுறித்துப் பேசினோம். ``வரலாற்றில் கம்பம் பள்ளத்தாக்குக்கென்று ஒரு சிறப்பிடம் இருக்கிறது. விவசாயத்தின் மூலம் அதிக நிதி வருவாயை உருவாக்கும் மாவட்டங்களின் பட்டியலில் தேனிக்கு நிலையான இடம் உண்டு. ஆனால், இந்தப் பள்ளத்தாக்கை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என பல ஆண்டுகளாகவே வேலை நடந்து வருகிறது..அதன் ஒருபகுதியாக, நியூட்ரினோ திட்டம் கொண்டுவரப்பட்டது. `55 ஆயிரம் டன் பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து அப்புறப்படுத்தியே நியூட்ரினோ ஆய்வகம் உருவாக்கப்பட வேண்டும்' என்பது, தேனியை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே அன்று பார்த்தோம். அதன் தொடர்ச்சிதான் இன்று இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் அடுத்தகட்ட நகர்வு'' எனக் கொந்தளித்தவர், நடந்த சம்பவங்களை விவரித்தார்.``தேனி மாவட்டத்தைச் சுற்றியே மத்திய அரசின் பெரிய திட்டங்கள் வருவதன் பின்னணியில் கேரள மாநிலத்தவர் இருக்கிறார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது. கேரளாவிலோ கர்நாடகாவிலோ நினைத்த மாத்திரத்தில் புவியியல் ஆய்வு மையத்தால் இத்தகைய வேலையைச் செய்துவிட முடியுமா?`புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை சுயசார்புபடுத்தப் போகிறோம்’ என்கிற பெயரில், வளம்மிகுந்த நிலங்களின் மீதான தாக்குதலை மத்திய அரசு தொடங்கினால், இங்கு எது மிஞ்சும் என்று எனக்குத் தெரியவில்லை, தேனி மாவட்ட நிர்வாகத்தின் அசட்டையான போக்குதான், மத்திய அரசு நிறுவனங்கள் எளிதாக தேனிக்குள் ஊடுருவதற்குக் காரணம்..மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், காவிரி படுகையில் பெட்ரோல் எடுக்கும் திட்டம் என்று மத்திய நிறுவனங்கள் கைவைத்த அத்தனையும் முப்போகம் விளையும் வளமான நிலங்கள் மீதுதான். அந்த அடிப்படையில்தான், இப்போது லித்தியம் எடுக்கப்போகிறோம் என்று கம்பம் பள்ளத்தாக்கில் வந்து நிற்கிறார்கள்.மாவட்டத்திலுள்ள நான்கு எம்.எல்.ஏ.க்களில் மூவர், ஆளுங்கட்சியினர். மீதமுள்ள ஒருவர் இந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். கம்பம் மெட்டு அருகிலேயே லித்தியம் தேடும் செயல்பாடுகள் குறித்து இவர்கள் ஏன் வாயே திறக்கவில்லை? சத்தியமா இவர்களுக்கு இதன் பின்விளைவுகள் தெரியாதா? தெரிந்தும் மறைத்துவிட்டார்களா?ஒருவேளை லித்தியம் கிடைப்பதற்கான கூறுகளை புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்திவிட்டால், அடுத்ததாக. இந்தப் பள்ளத்தாக்கில் நடக்கப்போகும் விபரீதங்களை இவர்கள் அறிவார்களா? ஒரு விவசாய சங்கம்தான் இதை வெளிப்படுத்த வேண்டும் என்கிற நிலை, கையறுநிலை என்பதை இவர்கள் உணர வேண்டும்” என்றார், கொதிப்போடு..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத், ``தெலங்கானாவில் இருந்து ராட்சத வாகனங்களைக் கொண்டு வந்து கம்பம் மெட்டு சாலை அடிவாரத்தில் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருவது, இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆய்வால் பல இடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்தப் பணிகள் முறையாக அரசின் அனுமதி பெற்று நடக்கிறதா? இதனால் மாவட்ட மக்களுக்கு என்ன நன்மை? இயற்கை வளங்களை அழிப்பது பெரும் தீங்கு என்பது அரசுக்குத் தெரியாதா? தமிழக அரசு இத்திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்” என்றார்.``இந்தப் பகுதிக்கு அருகே இடுக்கி, முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை இருப்பதால் இது நீர் ஆதார மாவட்டம். விவசாயமே இங்கே முக்கியப் பணி. விவசாயிகளை பாதிக்காதவகையில் இந்த ஆய்வு நடந்தால் ஏற்றுக் கொள்ளலாம். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியை உணவு உற்பத்தி சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்'' என்கிறார், தேனி மாவட்ட பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ் பாபு..``என்ன நடக்கிறது?'' என தேனி மாவட்ட கனிமவளம் மற்றும் புவியியல் துறையின் துணை இயக்குநர் வினோத்திடம் கேட்டோம். ``தேசிய புவியியல் சர்வே ஆஃப் இந்தியா, நாட்டில் எங்கு வேண்டும் என்றாலும் சர்வே நடத்துவார்கள். அவர்கள் மாநில அரசிடம் அனுமதி வாங்குவதில்லை. ஆய்வு நடத்துவது குறித்து தகவல் மட்டுமே தருவார்கள்.அதேசமயம், ஆய்வில் தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனே சுரங்கம் தோண்டிவிட மாட்டார்கள். ஆய்வின் மூலம் நாட்டில் எங்கெல்லாம் கனிமவளம் இருக்கிறது என்பதை அறிந்து அந்தத் தகவலை வரும் தலைமுறைக்கு சேகரித்து வைக்கும் முயற்சியே இது. எனவே பயப்படத் தேவையில்லை” என்றார்.கம்பம் பள்ளத்தாக்கில் கல்லறை தோண்டாமல் இருந்தால் சரி!- பொ.அறிவழகன்