Kumudam
இந்திரா சௌந்தர்ராஜன்: ராஜ ரகசியம் 29
சோழவந்தான் சம்பா அரிசியும், அலங்காநல்லூர் கவுனியும், சிறுமலை மூங்கில் அரிசியும் சாணி போட்டு மெழுகிய மூங்கில் கூடைகளில் அம்பாரமாகக் குவிந்து கிடக்க, அவற்றுக்கான முழுப்படி, அரைப்படி, கால்படிகள் எல்லாம் செம்பு உலோகத்தால் செய்யப்பட்டு அவற்றில் அரிசி கூமாச்சியாகக் குவிந்தே கிடந்தது.