-ஜி.எஸ்.எஸ்இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் காலடிவைத்ததுமேஇந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும்பல அதிர்வுகள்... உண்மையில் இந்தியா & அமெரிக்கா நட்பின் பின்னணி என்ன?.பொதுவாக அமெரிக்கா தனது கூட்டு நாடுகளை (ணீறீறீவீமீƒ) மட்டும்தான் தனது நட்பு நாடுகளாகக் கருதும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை சமீப காலமாக கொஞ்சம் மாறியிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியாவின் நட்பு அதற்கு முன்னெப்போதையும் விட இப்போதுஅதிகமாகத் தேவைப்படுகிறது. இந்தோ பசிபிக்பகுதியில் உண்டாகக் கூடிய சீன ஆதிக்கத்தை சமன்செய்ய இந்தியா அதற்குத் தேவை. தவிர, பொருளாதாரக் கோணத்தில் இப்போது இந்தியா முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தக் காரணங்களும் அமெரிக்கா நம்மீது நட்பு பாராட்டுவதற்கு அடிப்படைதான்..அதே சமயம், அமெரிக்கத் தயாரிப்புகள் இப்போது ஒருவிதத்தில் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டிருப்பதால் அதனால் தான் உறுதியளித்தபடி முக்கியமான சில போர்த் தளவாடங்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியவில்லை. எனவே, மாற்று ஏற்பாடுகளை இந்தியா பார்க்க வேண்டியுள்ளது. அவற்றில் ஒன்று தான் மோடியின் அமெரிக்க விஜயமும் அதன்மூலம் கையெழுத்திடப்படும் போர்த் தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்களும். ஜெட் இன்ஜின்கள், ட்ரோன்கள் போன் றவை தொடர்பானதாக இவை உள்ளன.சீனாவுக்கு எதிரான சில விஷயங்களில் சேர்ந்துச் செயல்பட இந்தியா தயங்குவதாகத் தெரியவில்லை. சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள இமயமலைப் பகுதியில், உத்தராகண்ட் மாநிலத்தில், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவம் பலவித ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், ஒரு விஷயத்தில் அமெரிக்க அழைப்பை இந்தியா மறுத்திருக்கிறது. நேட்டோ அமைப்பில் சேருவதற்காக இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது அமெரிக்கா. அதை இந்தியா மறுத்திருப்பது உலகநாடுகளில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. எதற்காக இந்த அமெரிக்க அழைப்பு? எதனால் இந்த இந்திய மறுப்பு? அறிந்துகொள்வதற்கு நேட்டோவின் பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும்.நார்த் அட்லான்டிக் ட்ரீடி ஆர்கனைசேஷன் என்பதன் சுருக்கம்தான் நேட்டோ. அதாவது வட அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பு. இந்த அமைப்பில் பிரிட்டன், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, கனடா, டென்மார்க், ஃப்ரான்ஸ், ஐஸ்லாந்து, லக்ஸம்பர்க், நார்வே, போர்ச்சுகல், அமெரிக்கா ஆகிய 12 நாடுகள் முதலில் உறுப்பினர்களாகச் சேர்ந்தன. காலப்போக்கில் முப்பது நாடுகளாக இந்த எண்ணிக்கை விரிவடைந்தது.நேட்டோவின் தலைமையகம் பெல்ஜியத் தலைநகரமான ப்ரசெல்ஸில் உள்ளது..கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கம்யூனிசம் பரவிவிடுமோ என்ற பயத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் சேர்ந்து தங்களுக்கு ஒரு ராணுவக் கூட்டமைப்பு தேவை என்ற முடிவுக்கு வந்தன. இதற்கான உடன்படிக்கை வாஷிங்டனில் ஏப்ரல் 4, 1949ல் கையெழுத்திடப்பட்டது.நேட்டோ அமைப்பின் 5வது பிரிவு தெளிவாகவே ஒன்றைக் குறிப்பிடுகிறது. எந்த ஒரு உறுப்பினர் நாட்டின் மீது வெளிநாட்டின் ராணுவத் தாக்குதல் நடைபெற்றாலும் அது அனைத்து உறுப்பினர் நாடுகளின் மீதும் நடைபெற்றதாக கருதப்பட்டு, எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது அது. (இதன் காரணமாகத்தான் உக்ரைன் இதில் சேர ஆசைப்படுகிறது. இதனால்தான் உக்ரைன் இதில் சேரவே கூடாது என்று ரஷ்யா கர்ஜிக்கிறது. நேட்டோ அமைப்பின் முதல் செயலாளரான லார்ட் இஸ்மே என்பவர் ‘இந்த அமைப்பின் நோக்கம் ரஷ்யர்களை வெளியிலும் அமெரிக்கர்களை உள்ளேயும், ஜெர்மானியர்களை கீழேயும் வைத்திருப்பதுதான்’என்றது குறிப்பிடத்தக்கது).நேட்டோ அமைப்பின் பலத்தை அதிகரிக்க ‘நேட்டோ ப்ளஸ்’ என்ற அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது நேட்டோ.இது நேட்டோ உறுப்பினர் நாடுகளோடு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது. உளவுத் தகவல்களைஒன்றுக் கொன்று பரிமாறிக்கொள்வது, நவீன ராணுவத் தொழில் நுட்பத்தைப் பகிர்ந்துகொள் வது ஆகியவை நேட்டோ பிளஸ் நாடுகளின் நோக்கம்.இந்த அமைப்பில்தான் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றம் முடிவெடுத்து இந்தியாவுக்கு அதற்கான அழைப்புவிடுத்தது..அண்டை நாடான சீனாவிடமிருந்து இந்தியா தனது எல்லையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இந்தோ பசிபிக் பகுதியை சீன ஆக்ரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்காகவும் இந்தியாவும் இந்த அமைப்பில் சேர்வது நலமாக இருக்கும் என்று கூறியது. இதன் மூலம் பிற உறுப்பினர் நாடுகளின் ராணுவத் தொழில்நுட்பத்தை இந்தியா பெற முடியும் என்றது. தாய்வானின் பாதுகாப்புக்கும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது அமெரிக்கா.ஆனால், இந்தியா இதை ஏற்கவில்லை. ‘இத்தகைய ராணுவக் கூட்டமைப்பு கூட்டணி இந்தியாவுக்கு ஏற்றதல்ல’ என்று கூறியிருக்கிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர். சீன ஆதிக்கத்தை இந்தியாவாலேயே சமாளிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் தனித்துவமான வெளியுறவுக் கொள்கை இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது எனலாம்.அமெரிக்காவுடனான நட்பை இந்தியா வலுப்படுத்த விரும்புகிறது. அதேசமயம் ரஷ்யாவை நேரடியாக பகைத்துக்கொள்ளும் ஒரு செயலை இந்தியா ஏற்கவில்லை என்றும் புரிந்துகொள்ளலாம். நேட்டோ அமைப்பில்இந்தியா சேராததற்கு இதுவும் ஒருகாரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் கடந்து அமெரிக்காவுடனான நட்பை, மோடியின் அமெரிக்க விஜயம் மேலும் வலுப்படுத்தி இருப்பதாகவே சொல்லப்படுகிறது.