சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கள்ளச்சாராய சாவின் ஓலம் கேட்கிறது. தமிழக காவல்துறையின் படுதோல்வி இது. தமிழகத்தில் கடந்த காலங்களிலும் கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியாகியிருக்கின்றன. ஆனால், அன்றெல்லாம் தனியாரிடம் மதுக்கடைகள் இருந்தன. இவ்வளவு கடைகளும் கிடையாது. நல்லது கெட்டதுகளில் சாராயத்தை ரகசியமாக காய்ச்சிக் குடிப்பதும், அது ஒரு ரகசிய வணிகமாகவும் இருந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை.தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகள். நகரின் மையப்பகுதிகள் தவிர்த்து 24 மணி நேரமும் கணிசமான கடைகளில் கள்ள விற்பனையில் மதுபானம் கிடைக்கிறது. டாஸ்மாக் நிர்வாகமே ஒவ்வோர் ஆண்டும் விற்பனையில் சாதனைப் படைக்க இலக்கு நிர்ணயிக்கிறது. இதையெல்லாம் விமர்சித்தால், ‘அரசு மதுபானக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் வந்துவிடும்’ என்பார்கள். ஆனால், இப்போது எப்படி இத்தனை மரணங்கள்?கொரோனா காலகட்டத்துக்கு பிறகு கிராமப்புற விவசாய மற்றும் பிற கூலி வேலைகளை செய்யும் தொழிலாளர்களின் பொருளாதாரம் பிச்சையெடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. அவர்களை தூக்கிவிட எந்த அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் டாஸ்மாக் மதுவுக்கு அடிமையானவர்கள். இவர்கள்தான் தற்போது வேறுவழியில்லாமல் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்து இறந்திருக்கிறார்கள். இதன் பின்னணியிலும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும்.இன்னொரு பக்கம் காவல் துறையில் சீர்திருத்தம். கள்ளச்சாராய விற்பனை உள்ளூர் காவலர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. காவல்துறையை முழுமையாக சீரமைக்காமல் இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய இயலாது. தற்போது உள்துறை செயலராக பொறுப்பேற்றிருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்., இதில் கவனம் செலுத்தி, பிரச்னைகளை களைவார் என்று நம்புவோம். இனி எப்போதும் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவின் ஓலம் கேட்கவே கூடாது!