-சாய் பூரணி ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டது, ரஜினியின் மருமகள் கேரக்டரில் நடித்திருந்த மிர்னா மேனன்தான்.அழகாக, அமைதியாக, கொஞ்சம்கூட மிகையில்லாமல் அற்புதமாக நடித்திருந்த மிர்னாவுக்கு, ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுகள்! கவர்ச்சியாக நடிக்காமலேயே இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் அந்தத் தேவதையை, அருகில் பார்த்தபோது தான் அந்த ரகசியம் நமக்கே புரிந்தது. எதையும் மறைக்காமல் சிரித்தபடி இனிமையாகப் பேசிய அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் உண்மை மட்டுமே இருந்தது....ரஜினியுடன் நடிக்க முதல் நாள் செட்டுக்குப் போனபோது, என்ன மாதிரியான எதிர்பார்ப்பு இருந்தது?“மறுநாள் அவரைப் பார்க்கப்-போகிறோம்கிற சந்தோஷத்தில் நிம்மதியா தூங்கினேன். அடுத்த நாள், ‘முதல் தடவையா அவரிடம் பேசப்போறோம் சொதப்பிடக் கூடாது’ன்னு மைன்ட்ல நிறைய பிரிப்பேர் பண்ணிட்டு போனேன். சுற்றிலும் பவுன்சர்களுடன் பாட்ஷா ஸ்டைல்ல, தலைவர் அலப்பறையா வருவார்னு ஆவலோடு பாத்துகிட்டு இருந்தேன். ஆனா, அவர் மட்டும் தனியா, சிம்பிளா... வழக்கமான அவரோட ஸ்டைல்ல விறுவிறுன்னு எனர்ஜியோட நடந்து வந்தார். வந்தவுடனே, டைரக்டர் நெல்சன் சார் ஒரு டைனிங் டேபிள் மீட்டிங் வெச்சு எல்லாரையும் அவருக்கு அறிமுகம் பண்ணிவெச்சாரு. அந்த ஒரு செகண்ட்ல அவர் எல்லார்கிட்டயும் ஈஸியா மிங்கிள் ஆகி, மத்தவங்களோட படபடப்பை எல்லாம் போக்கி, எல்லாரையும் நார்மலாக்கிட்டார். ரியலி சிம்பிள் அண்ட் சூப்பர்!’’.ஷூட்டிங் சமயத்துல ரஜினிகூட மறக்க முடியாத ஒரு மொமென்ட்..?“நடிக்கும்போது அவர்கிட்ட இருந்து எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. சின்னச் சின்ன விஷயத்துக்காகக்கூட, அவருக்குப் பிடிச்சிருந்தா உடனே மனம்விட்டு பாராட்டுவார். எனக்கு படத்துல அதிகமா வசனமெல்லாம் கிடையாது. ரியாக்ஷன்ஸ்தான். குட்டி குட்டி ரியாக்ஷனையும் கவனிச்சு, ‘அது நல்லா பண்ணீங்க’ன்னு ரஜினி சார் ஃபீல்பண்ணி சொல்வார். ஒரு மால்ல ஷூட் பண்ணிட்டு இருந்தப்போ தலைவரோட ‘பேட்ட’ படம் ஓடிட்டு இருந்துச்சு. நாங்க அப்படத்தைப் பாக்கப் போயிருந்தோம். அவரும் எங்ககூட வந்தார். அவர் பக்கத்துல உட்கார்ந்துதான் நான் படம் பார்த்தேன். அப்போ அவர்கிட்ட, ‘தலைவர் பக்கத்துல உட்கார்ந்து, தலைவர் படத்துக்கே விசில் அடிச்சுட்டு இருக்கேன்...’ன்னு சொன்னேன். அவர் சிரிச்சார்.’’.இவ்வளவு அழகா, இளமையா இருக்கீங்க... ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சது உங்களுக்கு எப்படி இருந்தது?“ரெண்டு குழந்தைக்குக்கூட அம்மாவா இருக்கலாம். கணவர் இல்லாதவளா இருக்கலாம். இல்ல ஒரு காலேஜ் பெண்ணாகக்கூட இருக்கலாம். நிஜத்தில், நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டர்ல கச்சிதமா பொருந்துறதும், அந்த கேரக்டரோட இயல்பான உணர்வுகளை நேச்சுரலா வெளிப்படுத்துறதும்தான் சவால்! அதுதான் நம் திறமையை வெளியே கொண்டுவரும். மத்தபடி ஹீரோயின்கிற வழக்கமான டெம்பிளேட்ல மாட்டிக்கக் கூடாதுன்னு மட்டும்தான் நினைக்கிறேன். ஹீரோயினா நடிக்கும்போதுகூட அந்த கேரக்டருக்கு நம்மோட பர்ஃபார்மன்ஸ் ஒரு புது டைமென்ஷனை கொடுக்கணும். அதுக்கு வாய்ப்பிருக்கும் ஹீரோயின் கேரக்டர்ல நடிக்கணும், அல்லது வர்ற வாய்ப்புல அதுக்கான நல்ல ஸ்பேஸை உருவாக்கிக்கணும். இதுதான் என் கேரியர் பிளான்.அஞ்சு வருஷம் கழிச்சு இண்டஸ்ட்ரில நான் என்னவா இருக்கணும்னு இப்பவே யோசிச்சு வெச்சிருக்கேன். அதுக்கெல்லாம் பொருத்தமா ‘ஜெயிலர்’ ப்ராஜெக்ட் இருந்துச்சு. அம்மான்னாலே அழகுதான். அழகான அம்மான்னா இன்னும் அழகு. அதுவும் ரஜினி சாரோட... ரம்யா கிருஷ்ணன் மேடத்தோட நடிக்கிற வாய்ப்பெல்லாம் திரும்பக் கிடைக்குமா என்ன?நம்ம திறமையை வளர்த்துக்குறதுக்கு இவங்க மாதிரி லெஜண்ட்ஸ்கூட நடிக்கிறதெல்லாம் ரொம்ப உதவியா இருக்கும்.’’தியேட்டர்ல ஆடியன்ஸுக்கு மாஸா இருக்கிற ஆக்ஷன் ஸீன்ல ரஜினி நடிச்சப்போ, நீங்க பக்கத்துல இருந்து பாத்துருக்கீங்க. அந்த அனுபவம்..?“கூஸ் பம்ப்ஸ் மொமென்ட் தான். ஸ்க்ரீன்ல என்ன இம்பாக்ட் வருமோ, அது சார் நடிக்கும்போதும் இருக்கும். நான் நேர்ல பார்க்கும்போதே, அந்த பேக்ரவுண்ட் ஸ்கோர் எதுவுமே இல்லாமலே எனக்கு அந்த ஃபீல் கிடைச்சுது. சாரோட ஸ்டைல் அப்படி இருக்கும்!’’.டைரக்டர் நெல்சன் செட்ல ஜாலியா இருப்பாரா?“எனக்கு நெல்சன் சாரை ரெண்டரை வருஷமா தெரியும். வெரி கூல் பர்ஸன். ப்ரோமோவுல பாக்குற அதே நெல்சன் சார்தான், செட்லயும். எங்க போனாலும் அப்படி தான் அவரைப் பார்க்க முடியும். அவருக்கு ஒரே முகம்தான். செட்ல கேப் கிடைக்கறப்போ அடிக்கடி ரஜினி சார்கிட்டப் போய் பேசு-வார். நான் ஏதோ ஸீன் சம்பந்தப்பட்டதுன்னு நெனைப்பேன். ஆடியோ லான்ச்ல தான் தெரிஞ்சுது ரஜினி சார்கிட்டயே அவரோட காதல் கதையைக் கேக்குறாருன்னு. முதல்லயே தெரிஞ்சிருந்தா நாங்களும் நாலு சேர் போட்டு பக்கத்துல உட்காந்துருப்போம். மிஸ் பண்ணிட்டேன்.’’.நேர்ல பார்க்கும்பொழுது நீங்க ரஜினியிடம் கேட்கணும்னு நினைச்-சிருந்த விஷயத்தை அவரிடம் கேட்டீங்களா?“இத்தனை வருஷம், இத்தனை படம், இத்தனை கேரக்டர்ஸ்... எந்தப் படம் உங்களுக்கு ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது?ன்னு கேட்டேன். ‘தளபதி’ படம் டிஃப்ரன்டான அனுபவமா இருந்ததுன்னு சொன்னார். அப்புறம் அவருக்குப் புடிச்ச சாப்பாடு என்னதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.’’ரஜினிகிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம்?“எனக்கு ரொம்பப் பிடிச்சது அவரோட தன்னம்பிக்கைதான். ஆடியோ லான்சுக்கு அவர் நினைச்சா எந்த ஸ்டைல்ல, எப்படி வேணும்னாலும் வரலாம். ஆனா, ‘நான் எப்படி இருக்கேனோ, அப்படிதான் வருவேன். இதான் நான்’னு ஒரிஜினலா அவர் வந்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது.’’.‘ஜெயிலர்’ல நீங்க பண்ண ஸீன் எது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு?“முகத்துல எந்த நடிப்பும், ரியாக்ஷனும் வேண்டாம். டயலாக் மட்டும் போதும். கண்ணுக்குள்ள மட்டும் அந்த எமோஷன்ஸ் இருக்கணும்னு டைரக்டர் சொன்னார். அது சின்ன விஷயம்தான். ஆனா, செய்யறது ரொம்பக் கஷ்டம். நாம நார்மலா பேசுறப்பவே நம்ம முகத்துல எல்லா தசைகளும் தானா வேலை செய்யும். அத கன்ட்ரோல் பண்றது எனக்கு சவாலா இருந்துச்சு.’’‘ஜெயிலர்’ ரிலீஸ் ஆனதும் தியேட்டர்ல ஃபர்ஸ்ட் பார்க்கும்-போது எப்படி இருந்தது?“ரஜினி சாரோட உண்மையான ரசிகர்களுடன் படம் பார்த்தேன். நான் நடிச்ச ஸீன் வரும்போது ‘இதெல்லாம்கூட வந்துருக்கா’ன்னு நினைச்சி வியந்தேன். நான் நடிச்ச ஸீன்கள் எல்லாமே படத்துல வந்ததைப் பார்த்து சந்தோஷமா இருந்தது.’’படம்: ர.கணேஷ்