-வாசுகி லட்சுமணன்இரண்டு மூன்று திரைப்படங்களுக்கு சமமான அயலி வெப்சீரிஸில் விடலைப்பருவப் பெண் தமிழ்ச்செல்வியாக கதையைத் முழுவதையும் தோளில் சுமந்து பிரபலமானவர் அபிநட்சத்ரா. அண்மையில் வெளியான ’பீட்சா-3’ படத்தில் இரு வேடங்களில் வந்து இதயம் தொட்டவர், தற்போது விஜய் சேதுபதியுடனும் இன்னும் சில பிரபல ஹீரோக்களுடனும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிவருகிறார். அந்தப் பரபரப்புக்கு மத்தியில் அபியை சந்தித்துப் பேசினோம்….உங்களுடைய படிப்பு, குடும்பம், சினிமாவுக்கு வந்த கதை அனைத்தையும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?“என்னோடஉண்மையானபேருஅபிநயாஸ்ரீ.ஆனா, சினிமாவுக்காகவெச்சபேருஅபிநட்சத்ரா.சொந்தஊர்மதுரை.சென்னைக்குவந்துபத்துவருஷமாச்சு.மதுரையிலஇருக்கும்போதேநடிக்கஆரம்பிச்சுட்டேன்.அதுக்கும்முன்னாடிநான்ஒருடான்ஸர்.பரதநாட்டியத்தமுறைப்படிகத்துக்கிட்டு, பத்துவயசுலயேஅரங்கேற்றம்லாம்பண்ணியிருக்கேன்.வெஸ்டன், ஃபோக்டான்ஸ்லாம் என்னோட சொந்த இன்ட்ரஸ்ட்லடி. வியைப் பார்த்துப் பார்த்து நானா ஆடிக் கத்துக்கிட்டேன். இப்போ நிறைய நிகழ்ச்சிகள் பண்றேன். அது மூலமா எனக்கு விளம்பர வாய்ப்புகள்லாம் வந்துச்சு.அதன் மூலமா தான் ‘ரஜினிமுருகன்’ படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. அதுக்கப்புறம் ‘பசங்க 2’, ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘கைதி’, ‘மூக்குத்திஅம்மன்’ படங்கள்ல டிராவல் ஆனேன். நான் இப்போ வேல்ஸ் யுனிவர்சிட்டியில பி.டெக்., டேட்டா சயின்ஸ் செகண்ட் இயர் படிக்கறேன். என் தம்பி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அப்பாவுக்கு பிஸினஸ். எங்கப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்சார் கிட்ட கோடைரக்டரா அஞ்சு படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கார்..படிப்பா, நடிப்பா எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்?படிப்பையும் நடிப்பையும் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்?“படிப்பா, நடிப்பான்னா நான் படிப்பை தான் தேர்ந்தெடுப்பேன். மத்த எல்லாத்தையும் விட எனக்குப் படிப்பு தான் ரொம்ப முக்கியம்.என்ன தான் ஷூட்டிங்ல பிஸியா இருந்தாலும்,படிக்க வேண்டியதை படிச்சிடுவேன். எக்ஸாம் இல்லாத நாட்கள்ல தான் சினிமாவுக்குடேட்ஸேதருவேன்.”.உங்க ஆம்பிஷன் என்ன?“நல்லா படிச்சி சயின்டிஸ்ட் ஆகி, ஃபாரின்ல செட்டில் ஆகணும்னு எனக்கு ஆசை. ஏன்னா, நடிப்புக்கான வாய்ப்பு எல்லா நேரமும் வருமான்னு சொல்ல முடியாது. அதனால நான் படிப்பைதான் பெருசா நம்பறேன். அதே சமயம் நடிப்பு ல எனககு வர்ற வாய்ப்புகளையும் நான் சரியா பயன்படுத்திக்கணும்னு விரும்பறேன்.”.முதன் முதலாகக் கிடைத்த பெரிய வாய்ப்பான‘அயலி’ தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தை அவ்வளவு இயல்பாக நீங்கள் எப்படி நடித்தீர்கள்?“டான்ஸைப் போலவே நடிப்பும் நானா செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல கத்துக்கிட்டது தான்.மத்தபடி நான் ஆக்டிங் ஸ்கூல்லயோ, தனியா யார்கிட்டயுமோ நடிக்கக் கத்துக்கல.‘ அயலி’யைப் பொருத்த வரைக்கும் எனக்கு ஃபுல்ஃப்ரீடம் கொடுத்தாங்க. அந்தக் கதை எனக்கு ரொம்பப் புடிச்சிருந்ததால, முடிஞ்ச வரைக்கும் என்னோட பெஸ்டைக் கொடுத்தேன். ஒல்லியா இருந்த நான்‘ அயலி’க்காக வேகுண்டா ஆனேன். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வெயில்ல நின்னு கறுப்பா ஆனேன்.டைரக்டர் அங்கிள், புரொடியூசர் மேம்மட்டு மில்லாம எல்லாருமே என்னை ரொம்ப நல்லா என் கரேஜ் பண்ணி நடிக்க வெச்சாங்க.”.‘பீட்சா-3’ படத்தில் டூயல் ரோலில் நடிக்கும் வாய்ப்புஎப்படிவந்தது? பேய்வேஷம்போட்டப்போதுபயமாகஇருந்ததா?“‘அயலி’க்கு முன்னாடியே நடிச்ச படம் அது. ரொம்ப லேட்டா ரிலீஸ் ஆகியிருக்கு. பேய் கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னப்போ பயமல்லாம் இல்லை, க்யூரியஸா தான் இருந்தது.”.நீங்கள் நடிகையானதற்குப் பிறகு கல்லூரியிலும், வெளியில் போகும் போதும் என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள்?“‘அயலி’க்கு அப்புறமா என்னால ஃப்ரீயா வெளியிலயே போக முடியல. என்னோட ஐபுரோஸ் யுனீக்கா இருக்கறதால எல்லாருமே கண்டு புடிச்சிடறாங்க. காலேஜ்ல ஸ்டூடண்ட் ஸ்டீச்சர்ஸ் எல்லாருமே ரொம்ப பாராட்டினாங்க. நிறைய பேர் என் கூட போட்டோஸ் எடுத்துகிட்டாங்க. என்னோட டீச்சர்ஸ் எல்லாருமே ரொம்ப பெருமையா என்னோட ஸ்டூடன்ட்னு அவங்களுக்குத் தெரிஞ்ச எல்லார்கிட்டயும் சொல்றாங்க.”.உங்களுக்கு வந்த மறக்க முடியாத பாராட்டு,எது? “மறக்க முடியாத பாராட்டுன்னா அது கவிப்பேரரசு வைரமுத்து சார் பாராட்டினது தான். ஆக்சு வலி எனக்கு அபி நட்சத்ரான்னு பேர் வெச்சதே அவர்தான். ‘அயலி’க்கு முன்னாடி அவரோட ஆல்பம் ஸாங் ஒண்ணுல நான் வொர்க் பண்ணேன். அதுக்கப்புறம் தான் சினிமாவுக்கு இந்தப் பேரை வெச்சுக்கோங்கன்னு அவர்பேர்வெச்சார்.‘அயலி’யைபார்த்ததும், நீ இவ்ளோ நல்லா பர்ஃபாம் பண்ணுவியாம்மான்னு…அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டு பாராட்டினார்.அதே போல பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சார் போன்பண்ணி பாராட்டினார். கவர்ன் மென்ட்டோடவிளம்பரங்கள்ல நடிக்கச் சொன்னார். அதுக்கப்புறம் ரெண்டு விளம்பரங்கள் நடிச்சுக் கொடுத்திருக்கேன். நான் முதல்வன் திட்டம் விளம்பரம் தான் ரீசன்ட்டாபண்ணது.ஸோ…எல்லாமே மிராக்கிளா இருந்தது.எல்லாரும் ரசிச்சாங்க,கொண்டாடினாங்க.”.இப்போஎன்னென்னபடங்களில்நடிக்கிறீர்கள்? “அமேசான்ல விஜய்சேதுபதிசார் கூட ஒரு வெப்சீரிஸ் பண்ணிகிட்டிருக்கேன்.‘காக்காமுட்டை’மணிகண்டன் சார் தான் டைரக்ட் பண்றாரு. அதுக்கு இன்னும் பேர் வைக்கலை.அதே அமேசான்ல அஞ்சலிமே மோட 50வது படத்துல ஒரு டிஃப்ரன்ட்டான ரோல்பண்ணியிருக்கேன்.அந்தப் படத்தோட பேர் ‘ஈகை.’ அப்புறம் டைரக்டர் ‘சாட்டை’அன்பழகன் சாரோட ஒரு படத்துல லீடா பண்றேன். இது போக கே.எஸ்.ரவிகுமார் சார் புரொடக்ஷன்ல, ‘ஹிட்லிஸ்ட்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். டீசர் கூட ரிலீஸ் ஆகிடுச்சி. படம் இந்த மாசமே ரிலீஸ் ஆகப்போகுது.”.சினிமாவில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்பது உங்கள் ஆசை?“என்னை எல்லாரும் நடிகை அபி நட்சத்ரான்னு சொல்றாங்க. ஆனா, நான் நடிகையா இல்லாம, ஒரு ப ர்ஃபார்மர்னு பேர் வாங்கணும்னு ஆசைப்படறேன்.”.தமிழ் சினிமா உலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறதா?“நிச்சயமா, ரொம்ப பாதுகாப்பானதா இருக்கு.எல்லாருமே திறமைக்கு தான்மதிப்புக் கொடுக்கறாங்க. திறமை உள்ளவங்களுக்கு வாய்ப்புகள் தானா தேடி வருது!”