கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காகக் காத்திருந்தேன். சுமார் எட்டு வயதுச் சிறுமி, தன் தம்பியுடன் வந்தாள். கையில் நிறைய ஜெல்பேனாக்கள்.“பேனா வாங்கிக்குங்க சார். ஒண்ணு ஆறு ரூபா…ரெண்டா எடுத்தா பத்து ரூபா” என்றாள்.“பேனா என்கிட்டே இருக்கும்மா, வேண்டாம்” என்றபோதும் விடாமல், நச்சரித்தாள்.“பத்து ரூபாய்க்கு வாங்குங்க சார், சாப்பிட எங்களுக்கு எதுவுமே இல்லே…” என்று கெஞ்சினாள்.பயணப்பாதையில் நான் சாப்பிடுவதற்காக வாங்கிவைத்திருந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்களை பையில் இருந்து எடுத்துக் கொடுத்தேன்.“இந்தாங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க…!நான் நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகளைக் கைநீட்டி வாங்கியவள், கொஞ்ச நேரம் எதையோ யோசித்துவிட்டு,”ஒரு பாக்கெட்டையே நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கறோம் சார்” என்றவள், ஒன்றைத் திருப்பி நீட்டினாள்.”பரவாயில்லேம்மா, ஆளுக்கு ஒண்ணாச் சாப்பிடுங்க” என்று நான் சொன்னதும், “அப்போ உங்களுக்கு சாப்பிட ஒண்ணும் இருக்காதே சார்?” சொன்னவள் குரலில் வறுமையை மீறித்தெரிந்த வாஞ்சை, என் கண்களைக் குளமாக்கியது.-ஷேக் சிந்தா மதார்