அருண், கூடுவாஞ்சேரி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கிடைக்குமா பிணை? அதற்கு வேண்டும் கொடுப்பினை! அ.ப.ஜெயபால், சிதம்பரம். பாசறை, சிறை வித்தியாசம் என்ன? செந்தில்பாலாஜி பிணையில் வந்தால், கேட்டுச் சொல்கிறேன். த.நேரு, வெண்கரும்பூர். வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை, என்ன செய்வது? நண்பர்களை சம்பாதியுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வர்கள். அண்ணாமலையையும் சீமானையும் பார்த்த பிறகுமா இப்படியொரு கேள்வி! ஆ.பெரியசாமி, நெல்லிக்குப்பம். ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்திருக்கிறாரே? பட்டாம் பூச்சியை சுடுவதற்கு பீரங்கி எதற்கு? கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி.அண்ணாமலை அடுத்த எம்.ஜி.ஆர் என்று ஒரு முதாட்டி சொன்னதைப் பார்த்தீரா? வாய்ப்பே இல்லை. அண்ணாமலையைப்போல எம்.ஜி.ஆர் 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்க மாட்டார்! எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்தும்படி ஆட்சி நடத்த முடியுமா? நல்லா வாயில வருது. பதில் சொல்லலை. அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி. அண்ணாமலை அரசியல் கத்துக்குட்டி என்கிறாரே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு? ஓ... நாசா விஞ்ஞானியே இதை சொல்லிவிட்டாரா! ஆர்.கே.லிங்கேஸ்வரன், கன்னியாகுமரி. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. இல்லை என்று சொல்லிவிட்டாரே அன்புமணி ராமதாஸ்? .அவசரப்படாதீர். பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் மில்லியன் டாலர் கேட்டால், சாரி மில்லியன் டாலர் கேள்வியைக் கேட்டால் எப்படி? ஐ.சுப்பிரமணியன், காவல்கிணறு, திருநெல்வேலி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பண பலத்தால் வென்றுவிடலாம் என்று நினைப்பதுபோல தோன்றுகிறதே? ஏன், பா.ஜ.க-விடம் பணம் இல்லையா?! வண்ணை கணேசன், சென்னை.ஒரு நடிகருக்கு எப்போது கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரும்? தலை நரைக்கும்போது! ஹெச்.ராஜேஸ்வரி, பூந்தமல்லி, சென்னை மீண்டும் மன்னராட்சி முறை வந்தால் எப்படி இருக்கும்? இப்போது நடப்பது மட்டும் என்னவாம்! க.பக்தி விசுவாசம், மலையடிப்பட்டி, மணப்பாறை. (ரூ.200) கடவுளிடம் காட்ட வேண்டியது என்ன, மனைவியிடம் காட்ட வேண்டியது என்ன? அய்யா, உங்கள் பெயரிலேயே இருக்கிறதே விடை. முன்னதை கடவுளிடமும் பின்னதை மனைவியிடமும் காட்டுங்கள்! சுப்பிரமணி, மதுரை. யோவ் அரசே, சாய் பல்லவியின் வயசு என்ன? யோவ் சுனாபானா, நீங்கள் டைட்டாக ஓட்டி, ஏகப்பட்ட ஸ்டாப்லர் பின் எல்லாம் அடித்து அனுப்பிய கவரை ரொம்பக் கஷ்டப்பட்டு பிரித்தேன். உள்ளே பார்த்தால் இப்படி ஒரு கேள்வி... சரி, விடும். லே-அவுட்டில் போட்டோ வைக்க ஆயிற்று! என்.குணசீலன், பட்டுக்கோட்டை. மெளனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே? சொல்ல முடியாது. சில சமயம் முரட்டு மொத்து கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம். பெண்ணியம் பேசுவதுபோல ஏன் யாரும் ஆணியம் பேசுவதில்லை?.ஒரு ஆணியே பிடுங்க வேண்டாம் என்றுதான்! என்.குணசீலன், பட்டுக்கோட்டை பெங்களூருவில் குடும்பத் தகராறில் மனைவியின் கைவிரலை கணவன் கடித்துத் துப்பிய செய்தியைப் படித்தீரா? இதாவது பரவாயில்லை, 2021-ல் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த துரைமூலை கிராமத்தில் மனைவி ஒருவர்... இதற்கு மேல் கூகுளில் தேடித் தெரிந்துக்கொள்ளவும்!