அருண், கூடுவாஞ்சேரி பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் காலில் விழுந்ததற்காக விழுப்புரம் மாவட்ட ஜெ பேரவைச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி? வட கொரிய அதிபருக்கு, தான் செய்யும் காரியத்தை வேறு யாரேனும் செய்தால் பிடிக்காது. அவர் அணியும் கோட் மாடலை வேறு யார் அணிவதும் அங்கு சட்டப்படி குற்றம். பதில் போதும் அல்லவா! மா.சந்திரசேகர், கரூர். பாட்னா, சிம்லா... அடுத்து சென்னை என்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? அதற்குள் ரெய்டு வந்துவிடுமே! பாபு, சென்னை. தி.மு.க இளைஞரணி செயலாளராக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசின் செய்தி என்னவோ? உதயநிதியின் பேச்சுகளை கவனித்த வகையில் சொல்கிறேன், அவரது பேச்சில் இயல்பானதொரு நக்கலும் அப்பாவித்தனமும் கூடவே உண்மையும் தெரிகிறது. இது அரிதாகவே சிலருக்கு வாய்க்கும். கிப் இட் அப்! கே.கே.பாலசுப்ரமணியன், கோவைபுதூர். நெடுஞ்செழியனை முந்தியவர் கருணாநிதி. அன்னா ஹசாராவை முந்தியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அத்வானியை முந்தியவர் மோடி. இதைப்போல உதயநிதியை கனிமொழி முந்திவிடுவார் என்கிறேன். அரசின் அபிப்ராயம் என்னவோ? ஸ்டாலின் தூக்கம் போனது போதாதா? இப்போது கனிமொழியின் தூக்கமும் போச்சா! இனியா, பர்மா காலனி, காரைக்குடி. .அரசியல் கூட்டணி விவகாரங்களில் அரசு பொடி வைத்து பதில் சொல்வது ஏன்? வெடி வைக்கக் கூடாது என்பதால்தான்! த.சிவாஜி மூக்கையா, சென்னை ம.தி.மு.க-வில் இருந்து அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி விலகிவிட்டாரே? அண்ணன் கவுண்டமணியின் காமெடி நினைவிருக்கிறதா... இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? சோ.மாணிக்கம், மயிலாடுதுறை. இந்திய வரலாற்றில் அடிமை வம்சம் ஒழிக்கப்பட்டுள்ளதா? எம்.ஜி.ஆர் மாளிகையில் கேட்டு சொல்கிறேன், கூடவே அறிவாலயத்திலும்! என்.இளங்கோவன், மயிலாடுதுறை. மத்திய அரசின் பிளாக் மெயில் அரசியல் சமீப காலமாக அதிகரிக்கக் காரணம் என்ன? கையெழுத்து புரியவில்லை இளங்கோவன், கேள்விகளை ஜி மெயிலில் இருந்தும் அனுப்பலாம்! த.நேரு, திட்டக்குடி, கடலூர். .அரசியல் தலைவர்கள் அடிக்கடி நடைபயணம் மேற்கொள்ள காரணம் என்ன? பி.பி., சுகர் குறையதான்! சி.சுந்தர் மணிகண்டன், விருகம்பாக்கம், சென்னை. (ரூ.200) அரசே, உங்களுக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா? பதவியில் இருந்து இறக்கும் வல்லமை இருக்கிறது! ஆர்.தனபால், சென்னை. யோவ் அரசே... அருவியில் குளிப்பது, குளத்தில் குளிப்பது, ஆற்றில் குளிப்பது, கடலில் குளிப்பது... எது ஆனந்தம்? முதலில் நீங்கள் குளியும். அதுவே உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு ஆனந்தம்! சங்கீத சரவணன், மயிலாடுதுறை. பந்தா பேர்வழி உம்மிடம் வந்தால் என்ன சொல்வீர்கள்? குமுதம் சந்தா கட்ட சொல்வேன்! த.நேரு, திட்டக்குடி, கடலூர். .மின்கட்டண உயர்வு, சாலைவரி உயர்வு, காய்கறி விலை உயர்வு... விலைவாசியைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? பேசாமல் காட்டுவாசி ஆகிவிடலாம்! வண்ணை கணேசன், சென்னை. அழகான பெண்ணைப் பார்த்தால் தடுமாற்றம் வருகிறதே... என்ன செய்ய? தடுமாற்றம் வரலாம். தடம்மாற்றம்தான் கூடாது. கோ.குப்புசுவாமி, சங்கராபுரம் அரசே பச்சை மிளகாய் கடித்தது உண்டா? இல்லை, சிகப்பு மிளகாயைத்தான் கடித்திருக்கிறேன்! த.சத்தியநாராயணன், சென்னை எகிப்து சென்று பிரமிடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? பிரமிடுகளைப் பார்க்க எகிப்துக்குதான் செல்ல வேண்டுமா?!