மகாபெரியவர் சன்யாசம் ஏற்றுக்கொண்டு சில ஆண்டுகள் மட்டுமே கடந்திருந்த காலகட்டம். வயதில் மிகச் சிறியவராக இருந்த பரமாசார்யாரைக் கும்பிட சில பக்தர்கள் ஆரம்பத்தில் சற்று தயங்கினார்கள். அப்படி ஒரு சமயத்தில்,மகானை தரிசிக்க வந்திருந்தார், ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி. பெரும் மனக்கவலையில் மூழ்கியிருக்கிறார் என்பதை அவர் முகமே காட்டியது. மகானை தரிசித்தவர், பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு புறப்படத் தயாரானார். மெதுவாக அவரை ஏற இறங்கப் பார்த்தார், மகான். “மனசுல இருக்கற பாரத்தை இறக்கி வைக்காமலே போகிற மாதிரி தெரியுதே!” கேட்டார்..மௌனமாகத் தலையசைத்தாரே தவிர அப்போதும் எதுவும் சொல்லவில்லை அந்தப் பெண்மணி. “சரி, விஷயத்தை நீங்க சொல்ல வேண்டாம். ஆனா நான் பரிகாரத்தைச் சொல்றேன்...!” பெரியவா சொல்ல, விழிகள் விரிய, ஆச்சரியத்தோடு பார்த்தார், அந்தப் பெண்மணி. “அமாவாசை தினத்தில் காக்கைக்கு வைக்கும் சாதத்தை அது வந்து சாப்பிடாததால், பித்ருக்கள் (முன்னோர்) சாபம் ஏதாவது இருக்குமோ என்று பயம்! சரிதானா?” மகான் கேட்க, அதுவரை இவ்வளவு சின்னவராக இருக்கிறார் இவரையா விழுந்து கும்பிடுவது, இவரிடமா பிரச்னையைச் சொல்வது என்று தயங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, விழிகளில் இருந்து நீர் சுரக்க, மகான் திருவடி முன் விழுந்தார். “சுவாமி... என் மனசுல இருந்த பாரத்தை நீங்க எப்படித் தெரிஞ்சுகிட்டீகளோ தெரியலை. ஆனா, நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை...இந்த சங்கடம்தான் நாலஞ்சு மாசமா என் மனசை அரிச்சுகிட்டிருக்கு!” என்றார் தழுதழுப்பாக. அமைதியாக அவரைப் பார்த்தார், மகான். “அமாவாசையன்று பித்ருக்களுக்கு திருப்தி ஏற்படுவதற்காக காகங்களுக்கு அன்னம் வைக்கச் சொல்லியிருக்கிறது சாஸ்திரம். ஆனால், காகம் சாதத்தை எடுக்காவிட்டால் தோஷம் என்று எதுவும் சொல்லவில்லை..பட்சிகளுள் காகம் ரொம்பவே புத்திசாலி. அது எங்கே கிடைப்பதையும் சாப்பிடக்கூடியது என்றாலும், அந்த இடம் தனக்கு பத்திரமானதா என்பதை முதலில் பார்க்கும். திடீர் என்று என்றைக்கோ ஒரு நாள் சாதம் வைத்தால் உடனே வந்து எடுத்துவிடாது. அதனால்தான் காக்கைக்கு தினமும் உணவு வைக்கச் சொன்னார்கள்.” சொன்ன மகான், கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார். “இன்னொரு முக்கியமான விஷயம், பலரும் செய்யும் தவறு. அநேகமாக அதை நீயும் செய்வாய் என்று நினைக்கிறேன்... அமாவாசை தினத்தில் காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு, அது எடுக்கிறதா என்று கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டே இருப்பது பெரும் தவறு. தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால், காக்கை அங்கே வரவே தயங்கும். அதனால், காக்கைக்கு அன்னம் வைத்துவிட்டு அங்கே இருந்து நகர்ந்துவிட வேண்டும். அது எந்த திசையில் இருந்து எடுத்தாலும் எந்தக் கெடுபலனும் வந்துவிடாது! பித்ருக்கள் சாபம் வரக்கூடாது என்றால், நல்லதை நினை, நல்லதைச் செய், நல்லதைச் சொல்... எப்போதும் பகவானை நினை... அதுதான் சிறந்த பரிகாரம்” சொன்ன மகான் கை உயர்த்தி ஆசிர்வதிக்க, மனதில் இருந்ததை உணர்ந்து மகான் சொன்ன அறிவுரையைக் கேட்டு, மன பாரம் நீங்கியதன் அடையாளமாய் கண்கள் நீர் சுரக்க, கைகூப்பி வணங்கிவிட்டுப் புறப்பட்டார், அந்தப் பெண்மணி. - ஆர்.என்.ராஜன்