மகாபெரியவரை தரிசிக்க, குடும்பத்தோடு வந்திருந்தார், அந்த பக்தர்.தாம்பாளம் நிறைய கனிகள், புஷ்பங்களை வைத்துவிட்டு, குடும்பத்தில் எல்லோரும் மகான் திருவடி முன் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.கை உயர்த்தி ஆசிர்வதித்தார், மகான். பக்தர், அவரது தாத்தா காலத்தில் இருந்தே ஸ்ரீமடத்துக்கு வரக்கூடியவர் என்பதால், குடும்பத்தின் மற்ற உறவுகளைப் பற்றி எல்லாமும் விசாரித்தார் மகான்.சற்றுநேரப் பேச்சுக்குப் பிறகு புறப்பட்ட பக்தரிடம், “அடுத்த வாரம் குடும்பத்தோட குலதெய்வக் கோயிலுக்குப் போக உத்தேசித்திருக்கிறாய் போலிருக்கிறதே!’’ என்று கேட்டார், மகான்..“ஆமாம் பெரியவா, சொல்ல மறந்துட்டேன்..!’’ என்றார், பவ்யமாக.“பரவாயில்லை, குலதெய்வத்தை மறந்துடாம கும்பிடப்போறியே, அதுவே நல்ல விஷயம். வருஷத்துக்கு ஒருதரமாவது அவஸ்யம் போயிட்டு வா. இந்த தரம் போயிட்டு வரும்போது, நேரா அகத்துக்குப் (வீடு) போயிடாம, தெரு முக்குல ஏதாவது பிள்ளையார் கோயில் இருந்தா அங்கே போய் பிள்ளையாருக்கு ஒரு சிதறுகாய் உடைச்சுட்டு அப்புறம் அகத்துக்குப் போ!’’ மகான் சொல்ல, கொஞ்சம் திகைத்துப் போனார், பக்தர்.காரணம், குலதெய்வக் கோயிலுக்குப் போய்விட்டு வந்தால், பிற கோயிலுக்கோ அல்லது வேறு எங்குமோ போகாமல் நேராக வீட்டுக்கு வரவேண்டும் என்பார்கள். அப்படியிருக்க மகான் இப்படிச் சொல்கிறாரே என்பதுதான். ஆனாலும் பெரியவா வார்த்தையைத் தள்ளமுடியுமா? “சரி’’ என்றுவிட்டுப் புறப்பட்டார்.ஆயிற்று மறுவாரம், குடும்பத்தோடு கும்பகோணத்துக்கு அருகே உள்ள குலதெய்வக் கோயிலுக்குப் புறப்பட்டார், பக்தர். நல்லபடியாகச் சென்று நன்றாக தரிசனமும் செய்துவிட்டுத் திரும்பினார்.பாதி வழி வரும்போதுதான், பிரச்னை ஆரம்பித்தது. காலம் இல்லாத காலத்தில் திடீரென்று இருட்டிக்கொண்டு, வழியெங்கும் கனமழை பெய்தது. பாதைமாறி பாதைமாறி ஒருவழியாக வீடு இருக்கும் தெருவுக்கு வந்துசேருவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது..‘தெரு முக்குப் பிள்ளையார் கோயில் வாசலில் சிதறுகாய் உடை’ என்று பெரியவா சொன்னது நினைவுக்கு வந்தாலும், பெய்யும் மழையில் காரை விட்டு இறங்கவே முடியாது. எப்படியாவது வீட்டுக்குப் போனால் போதும், பிறகு வந்து உடைத்துக்கொள்ளலாம் என்று எல்லோரும் சொல்ல, பக்தருக்கும் சரியென்றே தோன்றியது.ஒரு கணம் தயங்கியவர் மனதுக்குள், மகான் சொன்னால் ஏதாவது காரணம் இருக்கும் என்று தோன்ற, காரை நிறுத்திவிட்டு இறங்கினார். தயாராக வைத்திருந்த தேங்காயை எடுத்துக்கொண்டுபோய், பிள்ளையார் கோயில் வாசலில் உடைக்க, தேங்காய் விழுந்து சிதறிய நொடியில் நடந்தது, அந்த விபரீதம்.பக்தரின் வீட்டு வாசலுக்கு அருகே தெருவில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று, பெய்த மழையில் ஊறி தடாலென்று விழுந்தது. அதைப் பார்த்த எல்லோரும் அப்படியே பதறிப்போனார்கள்.சிதறுகாய் உடைக்கக் கோயில் முன் நின்றிருக்காவிட்டால், இவ்வளவு நேரம் வீட்டு வாசலுக்குச் சென்றிருப்பார்கள். முறிந்த மரக்கிளை கார்மீதுதான் விழுந்திருக்கும். யோசிக்கவே உடல் நடுங்கியது.இத்தனையையும் முன்கூட்டியே அறிந்து, பிள்ளையார் கோயில் வாசலில் இறங்கச் சொன்ன மகானின் தீர்க்க தரிசனத்தை நினைத்து, சிலிர்த்தார்கள். அவர் இருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டார்கள். - ஆர்.என்.ராஜன்