-ஆர்.என்.ராஜன்அன்றைய தினம் மகாபெரியவர் ஸ்ரீமடத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்..அப்போது, அரச மரத்தைப் பற்றிய பேச்சு வரவே, ‘ வேர்ப்பாகம் பிரம்மா, நடுப்பாகம் விஷ்ணு, உச்சி பாகம் சிவன் என்று மும்மூர்த்திகளின் வடிவாக விளங்குவது அரசமரம்’ எனறெல்லாம் அதன் உயர்வுகளை சொல்லத் தொடங்கினார், மகாபெரியவர்.ஆன்மிகத்தோடு அரசமரத்திற்கு உள்ள தொடர்புகளைச் சொன்ன பிறகு, அறிவியல் ரீதியாக அதற்கு உள்ள உயர்வுகளையும் கூற ஆரம்பித்தார்.“இந்த உலகத்துல உள்ள எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ அவசியமான பிராணவாயுவை அதிக அளவுல வெளிப்படுத்தக்கூடியது இது. அரசமரத்தை சுற்றி வந்தா புத்ரபாக்யம் கிடைக்கும் என்பதெல்லாம் ஆன்மிகமும் அறிவியலும் இணைஞ்சதுதான்…”மகான் சொல்லிக்கொண்டே இருந்த அதேசமயத்தில், பக்தர் கூட்டத்தில் இருந்து மெதுவாக ஒரு விசும்பல் சத்தம் கேட்கத் தொடங்கியது. நேரம் ஆக ஆக அந்த விசும்பல் சத்தம் அதிகரிக்கவே பலரும் தலை திருப்பிப் பார்த்தார்கள்..அங்கே, கண்களில் நீர் பெருகி வழிய விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார், நடுத்தர வயது இளைஞர் ஒருவர். அவரது அழுகையின் காரணம் புரியாமல் எல்லோரும், திகைத்து நிற்க,. கை அசைத்து அவரை அருகே கூப்பிட்டார் மகான்பவ்யமாக வந்து நின்றவரை ஏற இறங்கப் பார்த்தார், “என்ன உனக்கு வாரிசு பிறக்காததுக்குக் காரணம், ராஜ விருட்சத்தை அழிச்சதுதான்னு தோண்றதா?” மென்மையாகக் கேட்டார்.“ஆம்!” என்பதுபோல் தலையாட்டிய இளைஞர் கண்களில் இருந்து மேலும் நீர் பெருகியது. “நீ அரசவிருட்சத்தை அழிச்சது, அது முளைச்சிருந்த இடம் அப்படிப்பட்டது என்பதால. அதனால, அது தோஷம் இல்லை. அதேசமயம் அதை அழிச்சதுக்கான பிராயச் சித்தம் எதையும் செய்யாம விட்டியே அதுதான் தப்பு.” சொன்ன மகான் சற்றே குரலை உயர்த்தி, “இது இவருக்கு மட்டும் இல்லை… உங்க எல்லாருக்கும்தான். அதனால, கவனமா கேட்டுக்குங்கோ!” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.“பொதுவா அரசமரம்,ஆலமரம் இதெல்லாம் யாரும் நட்டுவைச்சு வளர்றது இல்லை. பட்சிகளோட எச்சத்துல இருந்து விழக்கூடிய வித்துகள், அந்த இடம் வளரத் தகுதியா இருந்தா வளர்ந்துடும். அதனாலதான், பல கோயில் கோபுரத்துலயெல்லாம்கூட அரசமரம் முளைச்சிருக்கும்.மரம் பூமியில வளர்ந்தா சரி. அது இந்த மாதிரி கட்டடங்கள்ல முளைக்கறச்சே… அதை அகற்றவேண்டிய அவஸ்யம் வந்துடறது. அப்படி அகற்றும்போது, அது சாதாரணச் செடிதானேன்னு நினைக்காம, ‘உன்னை இங்கே இருந்து அப்புறப்படுத்தறதுக்காக என்னை மன்னிச்சுன்னு மனசார வேண்டிக்கறதம், முடிஞ்ச வரைக்கும் மென்மையா அகழ்ந்து எடுத்துடறதும் நல்லது. .அதுக்கப்புறம் ஒரு தாவரத்தை அழிச்சதுக்குப் பிராயச்சித்தமா, எங்கேயாவது பொதுவான ஒரு இடத்துல இல்லைன்னா கோயில் வளாகத்துல ஏதாவது ஒரு மரத்தை, நட்டுவைச்சு, அது தழைக்கறவரைக்குமாவது அக்கறையாப் பராமரிக்கணும்.!” சொன்ன மகான்,இளைஞனை நிமிர்ந்து பார்த்தார். “என்ன புரிஞ்சுதா? நீ உங்க அகத்துக்குப் பக்கத்துல இருக்கற கோயில்ல உன் நட்சத்திரப்படியான மரம் ஒண்ணை நட்டு வளர்த்துண்டு வா… சீக்கிரமே புத்திரபாக்யம்கிடைக்கும்!” சொல்லி ஆசிர்வதித்து மாங்கனி ஒன்றைத் தந்தார். பெற்றுக்கொண்டு புறப்பட்ட இளைஞன், மகான் சொன்னபடியே செய்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகி, அடுத்த ஆண்டே மனைவி, குழந்தையுடன் வந்து மகானை நமஸ்கரித்ததைச் சொல்லவும் வேண்டுமா என்ன?