- ஆர்.என்.ராஜன் மகாபெரியவர் ஸ்ரீ மடத்தில் ஆசார்யப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு சில ஆண்டுகளே கடந்திருந்தன. இப்போது இருப்பதுபோல எந்த சொத்து வசதியும் ஸ்ரீமடத்துக்கு இல்லாத காலகட்டம் அது..மகாபெரியவர் வயதில் மிகவும் சிறியவர் என்பதால், அவரைப் பார்க்க வரும் பலரும் அவரிடம் எதுவும் கேட்பதில்லை. பீடத்தின் ஆசார்யர் என்ற மரியாதை மட்டுமே கொடுத்து வணங்கிவிட்டுச் செல்வார்கள் அவ்வளவுதான். ஆனால், நாட்கள் நகர நகரத்தான் மகான் அந்தச் சிறுவயதிலேயே அருளாற்றல் நிரம்பியவராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியவந்தது. அந்த சமயத்தில் ஒருநாள், ஸ்ரீமடத்தில் இருந்த யானைக்கு வழக்கம்போல தீனிபோட்டுக்கொண்டிருந்தார் அதனைப் பராமரிப்பவர். எப்போதும் பாகன் தரும் உணவை அமைதியாக உட்கொள்ளும் யானை, அன்றைய தினம் ரொம்பவே அடம்பிடித்தது. என்ன காரணம் என்று புரியாமல்,பாகன் தவிக்க, யானை பிளிறுவதும், தட்டிவிடுவதுமாக இருந்ததே தவிர, ஒரு கவளத்தைக்கூட தின்னவேயில்லை. அந்த நேரம்பார்த்து அந்தப் பக்கமாக வந்தார், ஸ்ரீமடத்தின் கார்யம். யானை அடம்பிடிப்பதையும் பெருமளவு சாதம் கீழே கொட்டியிருப்பதையும் பார்த்தவருக்கு, கோபம் வந்தது.. “ ஸ்ரீமடம் இருக்கற சிரம நிலையில இப்படி சாதத்தைக் கீழே கொட்டவிட்டிருக்கியே…. இங்கே இருக்கற கஷ்டத்துல பாரம்பரியம்னு இதை (யானை) வேற பராமரிக்கணும். கொஞ்சமாவது புரியுதா உனக்கு!” என்று பாகனைப் பார்த்து அவர் போட்ட கூச்சலில், யானையே கூட கொஞ்சம் அதிர்ந்தது. ஏற்கெனவே யானை தீனியைத் தின்னாதது ஏன் என்று புரியாமல் குழம்பி இருந்த பாகனுக்கு, மடத்தின் மேனேஜரும் திட்டியதில் குழப்பம் கோபமாக மாறியதில், கையில் இருந்த குச்சியால் யானையை அடிக்க அவன் ஓங்கிய அதே விநாடியில் அங்கே வந்தார் பரமாசார்யா. “நிறுத்துங்கோ… ஏன், எதுக்கான யானையை அடிக்கப்போறீங்க?” எல்லாம் தெரிந்த ஞானி, எதுவும் தெரியாதவர் போல்கேட்டார்..“சாமி… இது சாதத்தைத் தின்னாட்டாலும் பரவாயில்லை… இப்படித் தட்டிக் கொட்டிவிட்டு அய்யாகிட்ட என்னைத் திட்டுவாங்க வைச்சிடுச்சு. அதான் கோபத்துல குச்சியை ஓங்கிட்டேன்!” என்று தலையைச் சொறிந்தபடி சொன்னார், பாகன். “ஓ அப்படியா?’’ என்ற மகான், மெதுவாக யானையை நெருங்கினார். “என்ன கஜராஜா, ஏன் சாப்பிட மாட்டேன் என்கிறாய்?” என்றபடியே அதன் துதிக்கையைத் தடவினார். தாய்ப் பசுவைக்கண்ட கன்று போல, யானை அவரிடம் குழைந்து நின்று, துதிக்கையை உயர்த்திப் பிளிறியது. மறுகணம் எதையோ புரிந்துகொண்டவர்போல மகான், யானைக்குத் தயாரித்து வைத்திருந்த கவள உருண்டைகளில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தார்..பிறகு, “யானைக்கு சாதம் வடிச்சது எந்தப்பாத்திரத்துல?’ எனக்கேட்டார். “வழக்கமா வடிக்கற அண்டாவுலதாங்க!” பாகன் சொல்ல, உடனே அந்த அண்டாவைக் கொண்டுவரச் சொன்னார், மகான். பாகன் அப்படியே செய்ய, அந்தப் பாத்திரத்தை உற்றுப் பார்த்தவர், “இங்கே பாருங்கோ…பித்தளைப் பாத்திரம் ஈயம் எல்லாம் தேய்ஞ்சு, வடிச்ச சாதத்துல எல்லாம் களிம்பு ஏறியிருக்கு. யானை இதை சாப்பிட்டிருந்தா அதுவே அதுக்கு நஞ்சா மாறியிருந்தாலும் மாறியிருக்கும். சாதத்தோட வாசனையில இதை உணர்ந்துதான் யானை சாப்பிடாம தட்டிவிட்டிருக்கு. வாயில்லா ஜீவன்தானே, அதுக்கு என்ன தெரியும்னு நினைக்கக் கூடாது. நம்மைவிட அதுகளுக்கு மோப்ப சக்தியெல்லாம் அதிகம். இனிமேலாவது அலட்சியம் இல்லாம கவனமா இருங்கோ!” மகான் சொல்ல, அத்தனை சிறுவயதில் அவருக்கு இருந்த ஞானத்தைக்கண்டு அதிசயித்து நின்றார்கள், பாகனும் ஸ்ரீகார்யமும்.