நம்ம ஊர்ல கொசுவுக்கு இன்னும் உறுப்படியா ஒரு மருந்து கண்டுபிடிக்கல... ஆனா, கோலிவுட்ல குரலை மாத்துறேன், ஆளை மாத்துறேன்னு ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள், சயின்டிஃபிக் ஃபிக்ஷனாம்! அந்த ‘சைய் - ஃபைய்’ காமெடி ஜானர்ல வந்திருக்கும் படம் தான் பாட்னர். ‘ஃபுல் காமெடி, நோ லாஜிக்’னு டைட்டில்ல போடாதது ஒண்ணுதான் குறை... ஆனால், சிரிப்புக்கு பதில் பல இடங்களில் குறட்டை தான் வருகிறது. நாயை பூனை மாதிரி கத்த வைக்கிறேன், பூனையை நாய் மாதிரி குரைக்க வைக்கிறேன் என வித்தியாசமா ஆராய்ச்சி செய்கிற காமெடி விஞ்ஞானி பாண்டியராஜன். அவரோட ஆராய்ச்சி ரகசியங்களை திருட வருகிறார் ஜான் பாபுராஜ். அவருக்கு உதவி செய்கிறார்கள் ரோபோ சங்கர் குரூப். ஆனால், அவங்களால திருட முடியாத ரகசியத்தை எடுத்து தர ஜான் பாபுராஜிடம் 50 லட்சம் வாங்குகின்றனர் ஆதியும் , யோகி பாபுவும் - அந்த 50 லட்சம் எதுக்குங்கிறதுதான் படத்தோட மெயின் கதை..டீல் ஃபைனலாகி, ரகசியத்தை எடுக்கப் போன இடத்துல ஒரு ஊசி குத்தி ஹன்ஸிகாவாக மாறி விடுகிறார் யோகிபாபு. அந்த ஹன்ஸிகாவின் அழகில் மயங்கி அவருக்காக அலைகிறார் அரசியல்வாதி ரவி மரியா. அவரிடம் தான் ஆதியின் 50 லட்சம் சிக்கியிருக்கிறது. அவருக்கு ஹன்ஸிகா வேணும், ஆதிக்கு பணம் வேணும். யாருக்கு என்ன கிடைத்தது? ஹன்ஸிகா மீண்டும் யோகிபாபுவாக மாறினாரா என்பது தான் தமிழ் சினிமா ஸ்டோரி பேங்க்ல இருந்து பாட்னருக்காக இயக்குநர் மனோஜ் தாமோதரன் கடன் வாங்கிய கதை. ஆனால், அதை சரியா வேகவைக்கல. அதுல நொந்து நூடுல்ஸ் ஆனது ஹீரோயின் பாலக் லால்வானிதான். படத்துல அவருக்கு என்ன ரோல்னு கடசிவரை யாருமே சொல்லலையாம்!’பாட்னர்’ - ஏமாத்திட்டான்2 ஸ்டார்.