மெட்ரோ ட்ரெயின் டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதிவிடக்கூடிய, ஒரு குட்டியூண்டு கதை.மிடில் கிளாஸ் வகுப்பினர் வசிக்கும் ஒரு அபார்மெண்ட்ஸ். சனிக்கிழமை இரவுகளில் மொட்டைமாடியில் ஆடிப்பாடி, குவிஸ் போட்டிகள் வைத்து ரசனையாக வாழ்கிறவர்கள். இந்த சத்தம் புகாராகச் செல்ல, விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் மதனுக்கும் நாயகன் ஹரிஸ் உத்தமனுக்கும் இடையில் மோதலாக வெடித்து விடுகிறது..மறுநாள் வழக்கமான காவல்துறை வில்லத்தனத்தோடு உத்தமனை விசாரிக்க வரும் மதன், நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சித்திரவதை செய்ய, முதல் நாள் பொங்கிய உத்தமன் பொட்டிப்பாம்பாய் அடங்கி அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிறார். காரணம் வீட்டுக்குள்ளே வில்லங்கமாய் வந்து சேர்ந்திருக்கும் திருவாளர் பொணம் ஒன்று. அடுத்து என்ன என்ன என்று நகம் கடிக்கவைத்து வெடிச்சிரிப்பு திருப்பத்துடன் ஒரு க்ளைமேக்ஸ்.வளர்ந்து வரும் குணச்சித்திர நடிகர் ‘அருவி’ மதன் தட்சணாமூர்த்தி கதை எழுதி இயக்கி, டார்ச்சர் இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்திருக்கிறார். ஹரிஸ் உத்தமன், அவரது மனைவியாக வரும் ஷீலா, குட்டிக் குழந்தை ஆலியா தொடங்கி அபார்ட்மென்ட் வாசிகள் அத்தனை பேரும் இயல்பான நடிப்பால் மனதை அள்ளுகிறார்கள். குறிப்பாக, இடைவேளைக்குப்பிறகு, வக்கீலாக வரும் வசந்த் மாரிமுத்து, ‘யார் சார் நீங்க...இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க?’.படத்தின் முக்கியமான குறை, பல காட்சிகள் மிக நாடகத்தனமாக இருப்பது. ஷீலாவும் உத்தமனும் ஒரே சமாச்சாரத்துக்காக திரும்பத் திரும்ப புலம்பிக் கொண்டேயிருப்பது எரிச்சலைத் தருகிறது. பான் இண்டியா, மல்டி குரோர்பதி படங்களுக்கு மத்தியில், குட்டி பட்ஜெட்டுகளில் வரும் இவ்வகையான எளிய மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகள் கண்டுகொள்ளப்படாமல் போவது தான் தமிழ் சினிமாவின் துயரம்.நூடுல்ஸ் – வித்தியாசமான சுவை 2.5 ஸ்டார்