நிரந்தர வருமானம் இல்லாத ரியல் எஸ்டேட் புரோக்கர் யோகிபாபு. மனைவி குழந்தையுடன் வாய்க்கும் வயித்துக்குமாக வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரு சீட்டு கம்பெனியின் அதிர்ஷ்ட குலுக்கலில் 10 லட்ச ரூபாய் கார் பரிசாகக் கிடைக்கிறது. சின்ன வயதிலிருந்தே தனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று உறுதியாக நம்பும் யோகிபாபு இந்தக் கார் வந்த பின் தனக்கும் அதிர்ஷ்டம் இருப்பதாக நம்ப ஆரம்பிக்கிறார். அந்த நம்பிக்கையும் கொஞ்ச நாள் தான்... வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த கார் ஒரு நாள் தொலைந்து போகிறது. கிடைத்த அதிர்ஷ்டத்தை தவற விட்டுவிட்டோமே என்று பதறும் யோகி பாபு, அந்தக் காரை கண்டுபிடித்து தன் அதிர்ஷ்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடுவது தான் லக்கி மேன். சோகத்திலும் தன் சிரிப்பையும், நக்கலையும் தொலைத்து விடாத அசலான ஏழை குடும்பத் தலைவனாக அசத்துகிறார் யோகிபாபு. அவரது மனைவியாக வரும் ரேச்சல் ரெபெக்கா விருத்துக்குரியவர். போலீஸ் அதிகாரியாக வரும் வீரபாகு பிரமிக்க வைக்கிறார். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என எதையும் குறை சொல்ல முடியாது...‘நீ மிகவும் நேசிக்கும் ஒன்றைதான் இயற்கை உன்னிடமிருந்து அபகரித்துக் கொள்ளும். காரணம், அது இல்லாமலும் உன்னால் வாழ முடியும் என்பது உணர்த்துவதற்காகத் தான்...” - இப்படி இயக்குநர் பாலாஜி வேணுகோபால் எழுதியுள்ள வசனங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தத்துவம். ஆனால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு அவை அழகாகப் பொருந்துகிறது. திருட்டுப்போன காரை மீட்க, யோகிபாபு திருடியவனுக்கு 2 லட்சம் குடுப்பது, ஒரு புரோக்கர் வராததால் பத்திரப் பதிவு நின்று போவது, காரை திருடியது யார் என்கிற கிளைமேக்ஸ் ட்விஸ்ட் எல்லாம் சின்னச் சின்ன சறுக்கல்கள். லக்கி மேன் – உயர்ந்த மனிதன் 2.5 ஸ்டார்