சமந்தாவின் அப்பா பழுத்த ஆன்மிகவாதி. விஜய் தேவரகொண்டாவின் அப்பா தீவிர நாத்திகர், விஞ்ஞானத்தை மட்டுமே நம்புபவர். இப்படி எதிரும் புதிருமான அப்பாக்களை மீறி காதலர்களான சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். அந்தக் கல்யாணத்தை எதிர்த்த அப்பாக்களே ஆச்சரியப்படும்படி வாழ்ந்து காட்டப் போவதாக இருவரும் சவாலும் விடுகின்றனர். சொன்னதுபோல் வாழ்ந்தார்களா? இல்லை, பிரிந்தார்களா? என்பதுதான் குஷி... தமிழ் சினிமா தோன்றிய காலத்து கதை... காட்சிகளும் ஒன்றுகூட புதிதாகவோ, சொல்லிக்கொள்ளும்படியோ இல்லை. பாட்டியின் மூட்டு வலிக்காக சாமிகும்பிட சமந்தா காஷ்மீர் போவது, போன இடத்தில் நாடகத்தனமாக விஜய் தேவரகொண்டாவை சந்திப்பது, தொலைந்துபோன தன் பொய்யான தம்பியை அவருடன் சேர்ந்து நிஜமாக தேடுவது எல்லாம் நம் சகிப்புத்தன்மைக்கு இயக்குநர் வைக்கும் சோதனை. .சமந்தா அழகாக இருக்கிறார், அற்புதமாக நடிக்கிறார். ரொமான்ஸாக இருந்தாலும் சரி; சென்டிமெண்டாக இருந்தாலும் சரி... உப்புமா சீனுக்கு கூட தன் நடிப்பால் உயிர் கொடுத்து விடுகிறார். இதற்கு நேர் எதிர், விஜய் தேவரகொண்டா, கொத்தாத அம்மிக்கல்லு... முகத்துல எக்ஸ்பிரஷனை வழிச்சுதான் எடுக்கணும். ரோகிணி, ஜெயராம் கேரக்டர்கள் செயற்கையாக இருந்தாலும் கொஞ்சமாவது ஜீவனோடு இருக்கிறது. லட்சுமி, சரண்யா பொன்வண்னன் சீரியலை நினைவு படுத்துகிறார்கள். ஒளிப்பதிவு கல்யாண வீடியோ மாதிரி இருக்கிறது. இசை கேட்கலாம். படத்தை இடைவேளைக்குப் பின் கொஞ்சம் பார்க்கலாம்..விசு, வி.சேகர், டி.பி. கஜேந்திரன்லாம் இந்த மாதிரி கதைகளை சின்ன பட்ஜெட்டில், சுமாரன ஆர்டிஸ்டுகளை வைத்து எடுத்தே செஞ்சுரி அடித்திருக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருக்கிற இரண்டு பான் இண்டியா ஸ்டார்களை வைத்துக் கொண்டு, கோடிகளை கொட்டியும் குப்புற விழுந்திருக்கிறார் இயக்குநர் ஷிவா நிர்வாணா... குஷி – ஒன்லி சமந்தா 2 ஸ்டார்.