இன்னமும் ஸ்கூல் யூனிஃபார்மை கழட்டவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்...ஸ்கூல்ல படிக்கிற ஜீ.வி.பி-க்கு கூட படிக்கிற கௌரிகிஷன் மீது ஒருதலைக் காதல். ‘இது காதல் கடிதம் இல்லை’ன்னு டிஸ்கிளைமரோடு அவரின் ஸ்கூல் பேக்ல ஒரு அன்புக் கடிதத்தை வைத்துவிட்டு எஸ்கேப் ஆயிடறார். கௌரிகிஷனும் அந்த மொட்டைக் கடிதத்தை மொட்டைமாடியில் படிச்சு, சார்ஜ் ஏத்திகிட்டு, பெரிய பின்னணிப் பாடகியாக மாறுகிறார். ஒரு பேட்டியில் கௌரிகிஷன் அந்தக் கடிதத்தை எழுதியவரைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்ல, அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் அடியே!தமிழ் சினிமாவின் புளிச்ச மாவு கதையான ஒருதலைக் காதலுக்குள் டைம் டிராவல், மல்டிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டின்னு இங்கிலீஷ் இன்கிரிடியன்ஸைச் சேர்த்து இட்லியும் இல்லாமல் தோசையும் இல்லாமல் உத்தேசமா எதையோ ஒன்றைச் சுட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். அதை சாப்பிட்ட நமக்கு வயிற்றைக் கலக்கி வாந்தி வராத குறைதான்..ஒரு டுபாக்கூர் செல்போனை வைத்துக் கொண்டு 40 நாள் ஹீரோ வேற உலகத்துக்குப் போறார், ஒருமணி நேரம் வேற வாழ்க்கைக்குப் போறார்னு இயக்குநர் ஆடியன்ஸை மெண்டலாக்காத குறைதான். வெங்கட் பிரபு கௌதம் மேனனாம், அஜித் எஃப்.ஒன். ரேசராம், மணிரத்னம் கிரிக்கெட் கோச்சாம் இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிவிட்டு, அதை காமெடின்னு சிரிக்கச் சொல்றதெல்லாம் கடுப்பின் உச்சம்.ஜீ.வி.பிரகாஷ் நடிப்புன்னு தலையை பிச்சுக்கறார், நமக்கு தலையே பிச்சுக்குது. நாயகி கௌரிகிஷன் அழுவதா, சிரிப்பதான்னு தெரியாமல் கலந்துகட்டி அடிக்கிறார். இசை, ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். புதுமைன்னு ஆடியன்ஸை குழப்பலாம், ஆனால், குழப்புறவங்களுக்கு ஒரு தெளிவு இருக்கணும். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார்.’அடியே!’ - கொல்லுதே2 ஸ்டார்