- முத்துராமலிங்கன்நெல்சனின் நட்புக்கு மரியாதைஇன்றைய இளம் நாயகர்களுக்கு மத்தியில் அதர்வா, கவுதம் கார்த்திக், ஹரீஷ் கல்யாண் போன்றவர்களை விட வியாபார ரீதியாக பெட்டர்கன் டிஷனில் இருக்கிறார்கவின்.காரணம் குட்டி பட்ஜெட்டில் தயாராகி பெட்டிகளை நிரப்பிய ‘டாடா’.அடுத்ததாக இளன் இயக்கும் ‘ஸ்டார்’, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு, மூன்றாவதாக ஒரு மெகாஜாக் பாட் அடித்திருக்கிறது. ‘ஜெயிலர்’ இயக்குநர் தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும், அவரது இணை இயக்குநர் சிவா இயக்குநராக்கப்படும் படத்துக்கு நாயகனாக கவின் கமிட் பண்ணப்பட்டுள்ளார்.நெல்சன் கால்ஷீட் கேட்டால் முன்னணி ஹீரோக்களே கால்ஷீட் கொடுப்பார்கள் எனும் நிலையில் ஏன் கவின் தெரியுமா?நெல்சன் தனது முதல் படமான ‘கோலமாவு கோகிலா’வை இயக்குவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள். நெல்சனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் கவின் .ஆக நட்புக்கு மரியாதை!.கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம்‘ஜவான்’படப்பாடலுக்கு அட்லீ மனைவியுடன் இணைந்து குத்தாட்டம் ஆடி சமூக வலை தளங்களை வைரல் ஆக்குவது, அதே அட்லீ வீட்டு நாய்க்குட்டியுடன் கொஞ்சி செல்லக் கடி வாங்குவது, அட்லீ மனைவி பிரியாவுடன் சமையல் கூடத்தில் கூட்டாஞ் சோறு சமைப்பது என்று ஏறத்தாழ கடந்த சில தினங்களாக அவர் வீட்டிலேயே குடித்தனம் நடத்த ஆரம்பித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.நடிகர் விஜயுடன் அடுத்தடுத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்கள் பண்ணும் போது அட்லீ மனைவியுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்த கீர்த்தி, தற்போது அங்கேடேரா அடித்திருப்பது தனது சொந்தப்படத்தை அட்லீயை இயக்கச் சொல்லித்தானாம்.‘வெங்கட் பிரபு படம் முடிந்ததும் என் சொந்த நிறுவனத்துக்குத் தான் விஜய் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை இயக்குவதோடு என்னையே ஹீரோயினாகப் போடுங்கள்’ என்ற புரபோஷலுடன் தான் கீர்த்தி சுரேஷ் அட்லீ குடும்பத்தை வலம் வருகிறாராம்..சாய்பல்லவி... ஒரு சீரியஸ் சீக்ரெட்!கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய்பல்லவி, ‘கார்கி’ படத்துக்குப் பின்னர் கமிட் ஆகியிருக்கும் ஒரே படம் இந்த ‘எஸ்.கே 21’தான். சமீபகாலமாக, இவருக்கு கதை சொல்ல அணுகும் இயக்குநர்களிடம் ‘மோள் 2025 வரைக்கும் பிஸி.ஸோநெக்ஸ்ட் இயர்ஸ்டோரி கேட்கலாம்’ என்று எதிர்முனையிலிருந்து அடுத்த வார்த்தை வருமுன் போனை கட்செய்து விடுகிறாராம் சாய்பல்லவியின் தாய். ‘இருக்கிறது ஒரே ஒரு படம். அதுக்கா இவ்வளவு பில்ட்அப்’ என்று விசாரித்தால், தாயும் மகளும் சேர்ந்து மறைத்திருக்கும் பெரும் சீக்ரெட் வெளி வந்திருக்கிறது.கொஞ்ச தினங்களாகவே, காஷ்மீரில்நடந்து வரும் ‘எஸ்.கே 21’ படப்பிடிப்பில் மும்பையில் இருந்து ஒரு போன் வரும் போதெல்லாம், சற்று ஒதுங்கிப்போய் கன்னம் சிவக்கச் சிவக்க உரையாடுகிறாராம் சாய்பல்லவி. எதிர் முனையில் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?’லால்சிங்சத்தா’வின் தோல்வியால் சற்றுமனம் தளர்ந்திருக்கும் ஆமிர்கான் தனது மகன் ஜுனைத்கானை மிக பிரமாண்ட அளவில் இந்தித் திரையுலகில் களம் இறக்க முடிவு செய்துள்ளார். நடனத்தை மையமாகக் கொண்ட காதல் கதை என்பதால், இப்படத்துக்கு நடனத்தில் பின்னிப்பெடல் எடுக்கக்கூடிய ஒரு ஹீரோயினை ஆமிர்தேடிக் கொண்டிருந்தபோது, ‘என் கறிக்குழம் பேடேக்மிடேக்மி’ பாடலைக்காட்டி சாய்பல்லவி தான் சரியாக இருக்கும் என்று அப்பாவிடம் சிணுங்கினாராம் ஜூனைத். உடனே சாய்பல்லவி அணுகப்பட்டு, அவர் நினைத்துப்பார்க்காத ஒரு தொகைக்கு கமிட் பண்ணப்பட்டதால் தான் தமிழ், தெலுங்குப் படங்களைத் தவிர்த்து வருகிறார்.இப்போது தெரிகிறதா எதிர்முனையில் இருப்பவர் யார் என்று?. ரஜினி, லோகேஷ்ராங்நியூஸ்சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் ‘தலைவர் 171’ படத்துக்கு லோகேஷ் கனகராஜுக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக குத்து மதிப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நிஜ நிலவரமே வேறு. இந்தப்படம் தொடர்பாக ரஜினியுடனோ, தயாரிப்பு நிறுவனத்துடனோ லோகேஷுக்கு முறையான சந்திப்பே இதுவரை நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ரஜினிக்கு சொல்வதற்கு லோகேஷிடம் கதைகூட இல்லை.சன் பிக்சர்ஸுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் அந்த பிரமாண்ட நிறுவனம் ‘ஜெயிலர்’ படம் குறித்து சில தவறான தகவல்களைப் பரப்பியதால் கடுப்பானவர்கள், அவர்களை வெறுப்பேற்றுவதற்காக மட்டுமே அவசர அவசரமாக அந்த அறிவிப்பை வெளியிட்டார்களாம்.