- முத்துராமலிங்கன்நயனுக்கு நோ சொன்ன ஷாரூக்செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவுள்ள ‘ஜவான்’ படத்துக்கு முன்பணமெல்லாம் தரமுடியாது. டிஸ்ட்ரிபியூஷன் முறையில் மட்டுமே வெளியிடமுடியும் என்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அடம்பிடிக்கவே ‘உங்க ஆட்டத்துக்கு நான் வரலே’ என்று முறுக்கிக்கொண்டார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஷாரூக் கான்.இதை அறிந்து மூக்கு வியர்த்த விக்னேஷ் தாரா, நயன் சிவன் கோஷ்டி உடனே ஷாரூக் கானைத் தொடர்பு கொண்டு, ‘எங்க ரவுடி பிக்சர்ஸ் மூலம் நாங்க ரிலீஸ் பண்ணித் தர்றோம்’ என்று படத்தை சொற்ப விலைக்குக் கேட்க, ‘செல்லாது செல்லாது’ என்று தமிழ், மற்றும் மலையாள உரிமைகளை கோகுலம் நிறுவனத்துக்கு 28 கோடிக்கு விற்றுவிட்டார் ஷாரூக். இதே உரிமைகளுக்கு நயன் அண்ட் சிவன் கொடுக்க முன் வந்த தொகை வெறும் 8 கோடி மட்டுமே. அதாவது படத்துக்காக நயன் வாங்கிய சம்பளத்தொகை. இதனால் நயன் மீது வெறிகொண்ட கோபத்தில் இருக்கிறாராம் சீறுக் கான்.# ருக்கு ருக்கு ஷா ருக்கு.சல்லிசான வில்லன் நவம்பர்முதல்வாரத்தில்படப்பிடிப்புதொடங்கவுள்ள ‘ஜெய்பீம்’ ஞானவேலின் ’ரஜினி170’படத்தின்கதைபோலிஎன்கவுன்ட்டர் தொடர்பானது என்பது லீக் ஆன நிலையில்,அதில் என்கவுன்ட்டர் அதிகாரியாக நடிக்க முதலில் தெலுங்கு ஹீரோ ‘நான்ஈ’ நானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். நண்பர்களிடம்ஆலோசித்த பிறகு, ‘வில்லன்வேடம்எனக்குவேண்டாம்’என்று நானி திடீரெனபின்வாங்க, தற்போது அந்த கேரக்டரில் நடிக்க சர்வானந்திடம் பேசி வருகிறார்கள் என்பது அடுத்தகவுன்ட்டர்.‘ரஜினி படம் என்பதால் தொடக்கத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஒப்புக்கொண்டேன். அவருக்கு வில்லனாக நடித்தால் என் எதிர்காலமே வில்லத்தனமாக ஆகிவிடும்’ என்று நானிபின் வாங்கியதாக சொல்லப்பட்டாலும், அவர் 5 கோடிரூபாய் சம்பளம் கேட்டதால் தயாரிப்பு நிறுவனம் தான்அவரைத்த விர்த்துவிட்டு, சல்லிசான சம்பளத்துக்கு சர்வானந்திடம் சென்றுள்ளனர் என்கிறார்கள்.# என்கவுன்ட்டர்படத்தில்ஒருமுன்கவுன்ட்டர்.கைதிகளுக்கு ஜெயிலரின் மட்டன் பிரியாணி ‘ஜெயிலர்’ வசூல் பற்றிய தகவல்கள்தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட்டஸ்ட் பஞ்சாயத்து. மழைக்கால செம்பரம்பாக்க ஏரியின் நீர்மட்ட உயர்வு போல் சோஷியல் மீடியாக்கள் 400, 500, 600 என்று ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் கூவிக்கொண்டிருக்க, ஒரே கலர் சட்டை போட்டுக்கொண்டு, சமயங்களில் அதையும் கிழித்துக்கொண்டு அலையும் அந்த யூடியூபர் ‘படம் சுமார் வசூல்தான். இஷ்டத்துக்கு போங்காட்டம் ஆடுறாங்க’ என்று தொடர்ந்து ரஜினி வகையறாக்களைப் புண்படுத்திக்கொண்டே இருக்க, ‘சைலன்ஸ்… முதல்வார வசூல் 375 கோடி ரூபாய் 40 பைசா’ என்று துல்லியக் கணக்கு போல் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது ‘சன் பிக்சர்ஸ்’.’99ல் தொடங்கப்பட்டு சுமார் 14 ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் இருக்கும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம், ‘நானே மீடியா… பேசாம போவியா’ என்று இத்தனை ஆண்டுகளில் எப்போதும் பத்திரிகையாளர்களை மதித்ததே இல்லை. இப்போது முதன்முறையாக பத்திரிகையாளர்களை ‘மதித்து’ மட்டன் பிரியாணி விருந்து படைத்து, நன்றி நவிலும் விழா நடத்தியது ‘ஜெயிலர்’ படத்துக்கு மட்டுமே. இதற்காகவேனும் ‘ஜெயிலர்’ வெற்றி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.# ஹிட்டுஹிட்டுஹிட்டு.அமலாவின் முக்தி ’தனுஷ் 50’ படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டதை அப்படக்குழு உறுதி செய்துள்ளதால், இடையில் கிடைத்த ஒரே தனுஷ் பட வாய்ப்பும் பறிபோனதில் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டார் நடிகை அமலா பால். இடையில் பக்தி முத்திப்போய் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருந்தவர், சில நாட்களாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு, ‘ஆடை இப்போ பாரமாச்சு’ என்று தான் முக்தி நிலையில் இருக்கும் தாராளமயமான படங்களையும் ட்விட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.தனக்குத் தெரிந்த நாயகர்கள், இயக்குநர்கள் அனைவரையும் அணுகி உருப்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், ஒன்றிரண்டு ஓ.டி.டி. தளத்தின் .சி.இ.ஓ.க்களுக்கு நேரடி தரிசனம் தந்து, ‘எந்த ரேஞ்சுக்கும் கிளாமராக நடிக்கத் தயார். அடல்ட் கன்டென்ட் சப்ஜெக்டுகள் வந்தால் உடனே அணுகுங்கள் இந்த அமலாவை’ என்று அவர்களது சபலத்தைத் தூண்டிவிட்டு வந்திருக்கிறாராம். # அமலா இப்போ பமீலா ஆச்சு